கோண்டா மாவட்டம்

ஆள்கூறுகள்: 27°15′N 82°00′E / 27.250°N 82.000°E / 27.250; 82.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோண்டா மாவட்டம் மாவட்டம்
கோண்டா மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்தேவிப்பாட்டன் கோட்டம்
தலைமையகம்கோண்டா
பரப்பு4,448 km2 (1,717 sq mi)
மக்கட்தொகை3,431,386 (2011)
படிப்பறிவு61.16 per cent
வட்டங்கள்4
மக்களவைத்தொகுதிகள்கோண்டா
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கோண்டா மாவட்டம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின்,75 மாவட்டங்களில் ஒன்று, இதன் தலைநகரம் கோண்டா நகரம் ஆகும். இதன் பரப்பளவு 4448 சதுர கி.மீ ஆகும். சரயு ஆறு இந்தப் பகுதியின் வழியே பாய்கிறது.

வரலாறு[தொகு]

மூலகந்தகுடி:கௌதம புத்தரின் குடில்

முற்காலத்தில், இது கோசல நாட்டின் பகுதியாக இருந்தது. ராமனின் ஆட்சிக்குப் பின்னர், அவர் மகன் இலவன் ஆண்டான். [1] சிரவஸ்தி என்ற நகரம் இந்த அரசின் ஆட்சியின்போது தலைநகரமாக விளங்கியது. அண்மைக் காலமாக, புத்தர் கால புதைபொருட்கள் அதிகளவில் கிடைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[2]

இப்பகுதியில் இசுலாமியரும், பின்னர் பிரித்தானியரும் ஆண்டனர். சந்திரசேகர ஆசாத் என்னும் விடுதலைப் போராட்ட வீரர் இப்பகுதியில் வாழ்ந்தார்,

மொழிகள்[தொகு]

இங்கு வாழும் மக்கள் அவதி மொழியில் பேசுகின்றனர். இது இந்தியின் வட்டார வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது., [3]. இந்தி மொழியிலும் பேசுகின்றனர்.

நபர்கள்[தொகு]

  • துளசிதாசர்:
இராமரின் வாழ்க்கை வரலாற்றை, இராமசரிதமானஸ் என்ற பாடல் தொகுப்பாக வெளியிட்ட துளசிதாசர். இங்கு பிறந்து வளர்ந்தவர். [4]
  • பதஞ்சலி:
யோகக் கலையைத் தோற்றுவித்த பதஞ்சலி முனிவர் இங்கு பிறந்தவர். [5]

சான்றுகள்[தொகு]

  1. Gonda District at The Imperial Gazetteer of India, 1908, v. 12, p. 312.
  2. India Divine
  3. "Awadhi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
  4. His Holiness Sri Swami Sivananda Saraswati Maharaj
  5. "Hindustan.org". Archived from the original on 2010-11-17. பார்க்கப்பட்ட நாள் 2013-08-31.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோண்டா_மாவட்டம்&oldid=3552071" இலிருந்து மீள்விக்கப்பட்டது