பூஸ்ரோ
பூஸ்ரோ
फुसरो | |
---|---|
ஆள்கூறுகள்: 23°46′N 85°59′E / 23.77°N 85.99°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜார்க்கண்டு |
மாவட்டம் | போகாரா |
அரசு | |
• வகை | பேரூராட்சி |
• நிர்வாகம் | பூஸ்ரோ பேரூராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 45.22 km2 (17.46 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 89,178 |
• அடர்த்தி | 2,000/km2 (5,100/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 829144 |
தொலைபேசி குறியீடு எண் | 06549 |
வாகனப் பதிவு | JH]-09 |
மக்களவை தொகுதி | கிரீடீஹ் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | பெர்மோ சட்டமன்றத்தொகுதி |
பூஸ்ரோ (Phusro), இந்தியாவின் ஜார்க்கண்டு மாநிலத்தின் கிழக்கில் அமைந்த போகாரா மாவட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். பூஸ்ரோ நகரத்தில் தாமோதர் ஆறு பாய்கிறது. இது மாவட்டத் தலைமையிடமான பொகாராவிற்கு வடமேற்கில் 35 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான ராஞ்சிக்கு வடகிழக்கே 111 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 28 வார்டுகளும், 16,571 வீடுகளும் கொண்ட பூஸ்ரோ பேரூராட்சியின் மக்கள் தொகை 89,178 ஆகும். அதில் ஆண்கள் 46,605 மற்றும் பெண்கள் 42,573 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 913 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 78.1% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 13,635 மற்றும் 5,109 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 87.92%, இசுலாமியர் 10.22%, சீக்கியர்கள் 0.28%, கிறித்தவர்கள் 0.67% மற்றும் பிறர் 0.92% ஆகவுள்ளனர். [1]
போக்குவரத்து
[தொகு]பூஸ்ரோ தொடருந்து நிலையம்[2]கொல்கத்தா, போபால், அஜ்மீர், ஜபல்பூர், பாட்னா, உஜ்ஜைனி போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.