பாப்பையாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாப்பையாபுரம் (Pappaiyapuram) தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பாப்பையாபுரம் ஊராட்சியில் அமைந்த கிராமங்களில் ஒன்றாகும். பிற கிராமங்கள் எரமரெட்டிபட்டி, பி.ராமநாதபுரம் ஆகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 625703 ஆகும். பாப்பையாபுரம் மதுரைக்கு மேற்கில் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், பேரையூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும், தே. கல்லுப்பட்டிக்கு மேற்கே 6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதனருகே அமைந்த கிராமங்கள் சிலைமலைப்பட்டி (3 கிமீ) நல்லமாறன் (5 கிமீ), கூவலப்புரம் (6 கிமீ), சந்தையூர் (6 கிமீ) ஆகும். பாப்பையாபுரத்திலிருந்து மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1]

அருகமைந்த நகரங்கள்[தொகு]

  1. திருமங்கலம் - 29 கிலோ மீட்டர்
  2. விருதுநகர் - 27 கிலோ மீட்டர்
  3. திருவில்லிபுத்தூர் - 31 கிலோ மீட்டர்
  4. சிவகாசி - 31 கிலோ மீட்டர்
  5. கள்ளிக்குடி - 21 கிலோ மீட்டர்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்பையாபுரம்&oldid=3285482" இலிருந்து மீள்விக்கப்பட்டது