கள்ளிக்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கள்ளிக்குடி
ஊராட்சி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
வருவாய் வட்டம்கள்ளிக்குடி வட்டம்
மொழிகள்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்625 701
தொலைபேசி குறியீட்டு எண்04549
அருகிலுள்ள நகரம்திருமங்கலம், மதுரை
காலநிலைகுளிர்காலம், 28-30°C, கோடைகாலம், 30-32°C

கள்ளிக்குடி  (Kalligudi) என்பது  தமிழ்நாட்டில், மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி வட்டத்தின் தலைமையிடமும், ஊராட்சியும் ஆகும். கள்ளிக்குடியின் உண்மையான பெயர் கள்ளிகுடி சத்திரம் ஆகும்.[1]

இது தேசிய நெடுஞ்சாலை 7 இல் (ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி நெடுஞ்சாலையில்) மதுரைக்கு தெற்கே 35 கி.மீ. தூரத்திலும், திருமங்கலத்திற்கு தெற்கே 15 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

ஒரு அரசு மேனிலைப் பள்ளியும் ஒரு அரசு ஆரம்பப் பள்ளியும் உள்ளது. ஏழு கோயில்கள், இரண்டு மசூதிகள் மற்றும் இரண்டு தேவாலயங்கள் உள்ளன. ஒரு காவல் நிலையம், 24 மணிநேரம் செயல்படும் அரசு மருத்துவமனை, ஒரு ரயில் நிலையம் உள்ளது.  கனரா வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மற்றும் MDCC வங்கி ஆகிய மூன்று வங்கிகள் உள்ளன.

வடக்கம்பட்டி, அலங்கராபுரம், அகத்தாபட்டி, லாலபுரம், பொட்டல்பட்டி மற்றும் பள்ளபச்சேரி ஆகியவை கள்ளிக்குடி ஊராட்சியின்  கீழ்வரும் கிராமங்களாகும். இதன் மொத்த மக்கள் தொகை 3560 ஆகும்.

சுற்றுப்புறக் கிராமங்கள்[தொகு]

வெள்ளாகுளம், சோளம்பட்டி, வடக்கம்பட்டி, அகாதாபட்டி(2கி.மீ), ஓடைப்பட்டி (2கி.மீ), சென்னம்பட்டி (5கி.மீ), கரிசல்காளம்பட்டி (5கி.மீ), செங்கப்படை (3கி.மீ), சிவரக்கோட்டை (7கி.மீ), ராயபாளையம் (4கி.மீ), புளியம்பட்டி (5கி.மீ), தி.புதுப்பட்டி (6கி.மீ) ஆகியவை சுற்றுப்புற கிராமங்கள் ஆகும்.

திருவிழாக்கள்[தொகு]

அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் திருவிழா புரட்டாசி பொங்கல் ஆகும். இந்தத் திருவிழா அகத்தாபட்டி, கள்ளிக்குடி, அலங்கராபுரம் மற்றும் பள்ளபச்சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களால் கொண்டாடப்படுகிறது. சனவரி மாதத்தில் கொண்டாடப்படும் மற்றொரு திருவிழா "முனியாண்டி சுவாமி அன்னதான பூசை"ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளிக்குடி&oldid=2881702" இருந்து மீள்விக்கப்பட்டது