கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரும் கரைத்தட்டுக்கள் வரைபடம்வடக்கு அரைக்கோளம் புலம்
நியூபவுந்துலாந்து பெரும் கரைத்தட்டுக்கள் (Grand Banks of Newfoundland) இது, நிலவியலின்வடஅமெரிக்காகண்டத்தில் அறியப்படும் தென்கிழக்கு பவுந்துலாந்தின் பிராந்திய பீடபூமி தொகுப்பாகும்.[1] இக்கரைத் திட்டு பகுதியானது, 80-முதல் 33௦ அடி (24-1௦1 மீ) முடிய ஒப்பீட்டளவில் ஆழமற்ற பகுதியாக காணப்படுகிறது. இங்கே தற்போது குளிர்ந்த நீரோடைகள், வளைகுடா நீரோட்டங்களின் சூடான நீரில் கலக்கிறது.[2]
நீரோடை கலக்கும் பகுதியில் கடலின் கீழிருந்து மேற்பரப்பபு வரை, வடிவத்தையும் ஊட்டத்தையும் கொண்டுசேர்க்கிறது. இதுபோன்ற இயற்கை செயல்பாடுகளால் உலகின் பெரும் செல்வந்தர்களின் மீன்பிடி நிலதளம் ஒன்றை உருவாக்க உதவியது.[3]
இம்மீன்பிடி தள பிராந்தியத்தில், அரியவகை ஆழிவாழ் உயிரினங்களான, அத்திலாந்திக் காட் ( Atlantic Cod), சவோர்டு (Sword fish), அட்டோக் (Haddock), காபெளின் (Capelin), சிப்பிமீன் (Shellfish) போன்ற மீனினங்களும், இரட்டைவழிச் சோழி மற்றும் கடல் நண்டுகள் போன்ற கடல் ஊர்வனங்கள் இங்கு பெருமளவில் காணபடுகின்றன.[4] மேலும், கடற்பறவை (Seabirds) கூட்டங்கள் குடியேறியிருக்கும் இப்பகுதியில், வடக்கு கன்நெட் (Northern gannet), வெட்டு நீர் (Shear water), மற்றும் கடல் வாத்து (sea ducks or Merginae) போன்ற கடற்பறவைகளும், கடற்பாலூட்டிகளான (Mammals), திமிங்கிலம் (whales), சீல் எனும் நீர்நாய் (seal or Pinniped), மற்றும் ஓங்கில் (டால்பின் (Dolphin) இவ்வாறான கடற்வாழ் உயிரினங்கள் ஏராளமாக இருப்பது மூலங்கள் மூலம் அறியப்பட்டது.[5]
நியூபவுந்துலாந்து பெரும் கரைத்தட்டுக்கள் பகுதியில், முற்காலத்தில் பனிப்படலம் உச்சநிலையில் பனிமூடி பரந்து இருந்துள்ளது. சுமார், 13,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஐஸ் பெருமளவில் பன்நூறு கிலோமீட்டர்கள் வரை பரந்துவிரிந்ததாக பல தீவுகள் ஒன்றிணைந்ததுபோல் காணப்பட்டுள்ளது.[8] பின்புவந்த காலங்களில் பனிப்படலங்கள் கரைந்து கரைத்தட்டுக்கள் புலப்பட்டுள்ளது. பின்பு சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டம் உயர்ந்து கரைத்தட்டுக்கள் மூழ்கிவிடுமென்றும் நம்பப்பட்டது.[9]