அட்லாண்டிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Merge-arrow.svg
இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) அட்லாண்டிசு என்ற கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)

அட்லாண்டிஸ் என்றழைக்கப்படும் விண்கலம் பற்றி அறிய அட்லாண்டிஸ் விண்ணோடம் கட்டுரையைப் பார்க்க.

அனஸ்தேசியஸ் கேர்ச்சர் வரைந்த அட்லாண்டிஸ் வரைபடம் (அத்திலாந்திக் பெருங்கடலின் நடுவில் அமைந்துள்ளது)

அட்லாண்டிஸ் (Atlantis, கிரேக்கத்தில்: Ἀτλαντὶς νῆσος அட்லஸ் தீவு) என்பது வரலாற்று புகழ்மிக்க தீவாகும். இது முதன் முதலாக கிரேக்க தக்துவ ஞானி பிலாட்டோவின் டிமாயேஸ் மற்றும் கிரைடியஸ் உரையாடலில் குறிப்பிடப்படுள்ளது.

பிலாட்டோவின் கூற்றுபடி அட்லாண்டிஸ் கடற்படையாக இருந்தது. இது பில்லர் ஆப் ஹெர்குலெசுக்கு முன்பாக அமைந்திருந்தது. மேற்கத்திய ஐரோப்பாவின் பல பகுதிகளையும் ஆப்பிரிக்காவையும் இது கைப்பற்றியது. இந்த சம்பவம் நடந்தகாலம் சுமார் 9,000 ஆண்டுகளுக்கு முன்னதாக கவிஞர் மற்றும் சட்டமியக்குபவரான சோலன் வாழ்ந்த காலம் அல்லது தோராயமாக கிமு 9600 ஆக இருக்கலாம். அட்லாண்டிஸ் ஏதென்ஸ்சை படையெடுத்து தோற்றுபோனது. இதனால் ஏற்பட்ட "இடையூறின் காரணமாக ஒரே பகல் மற்றும் இரவில் எதிர்பாராமல்" அட்லாண்டிஸ் கடலில் மூழ்கிபோய்விட்டது.

பிலாட்டோவின் கதை அல்லது கணக்கு, எந்த அளவிற்கு பழைய பாரம்பரியங்களுடன் ஒத்துப்போகிறது அறிஞர்களுக்குள் சர்ச்சை இருந்து வருகிறது. பிலாட்டோ தன் கருத்துகளை பழைய சம்பவங்களான எரிமலை வெடிப்பு அல்லது கிரேக்கர்கள் டிராய் நகரத்திற்கு எதிராக தொடுத்த போர் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கூறுகிறார் என்று சில அறிஞர்கள் வாதிடுகிறார்கள். மற்றவர்கள், கிமு 373ல்[1] நிகழ்ந்த பழமையான கிரேக்க நகரமான ஹெலாய்க்கின் அழிவு அல்லது கிமு 415 முதல் 413 வரையில், பெரிய தீவான சிசிலியுடன் ஏதென்ஸ் போரிட்டு தோற்றுப்போன சம்பவம் போன்றவற்றின் வாயிலாக அவர் கூறியிருக்கிறார் என்று குறிப்பிடுகின்றனர்.

பழங்காலம் முழுவதிலும் அட்லாண்டிஸ் உண்மையாக இருந்திருக்க முடியுமா என்பது குறித்து கலந்துரையாடப்பட்டு வந்தது. ஆனால் இந்த கருத்து வழக்கமாக மறுக்கப்பட்டும், சில நேரங்களில் பிற எழுத்தாளர்களால் ஏளனமும் செய்யப்பட்டது. "இந்த நவீன காலத்தில் உள்ள மக்கள் தான் அட்லாண்டிஸ் கதையை உண்மையென்று நம்புகிறார்கள். ஆனால் பழங்காலத்தில் இது போன்று இல்லை" என்று ஆலென் கேமரூன் கூறினார்.[2] இடைக்காலத்தில் இதை பற்றி மிகவும் குறைந்த அளவு தெரிந்திருந்தது. ஆனால் நவீன காலத்தின் ஆரம்பங்களில் மனிதநேய ஆர்வலர்கள் அட்லாண்டிஸைத் திரும்பவும் கண்டறிந்தனர். பிலாட்டோவின் எழுத்துகள் பிரான்சிஸ் பெக்கனை போன்ற பல மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் கற்பனை திறன்களை ஊக்குவித்தது. இந்த பிரான்சிஸ் பெக்கனின் புத்தகமான "நியு அட்லாண்டிஸ்", பிலாட்டோவின் கருத்துகளைப் போன்றே அமைந்திருந்தது. இன்றைய இலக்கியமான அறிவியல் கட்டுகதைகள் தொடங்கி நகைச்சுவை புத்தகங்கள், படங்கள் வரை அட்லாண்டிசின் தாக்கம் உள்ளது. இதன் பெயர் சரித்திரத்தில் தொலைந்து போன நாகரீக வாழ்வை எடுத்துரைக்கும் சொல்லாக அமைந்துள்ளது.

பிலாட்டோவின் எழுத்துகள்[தொகு]

பிலாட்டோவின் டிமாயேஸின் 15ம் நூற்றாண்டு லத்தீன் மொழிபெயர்ப்பு

கிமு 360ல் பிலாட்டோவால் எழுதப்பட்ட டிமாயேஸ் மற்றும் கிரைடியஸ் உரையடலில் அட்லாண்டிஸ் இருப்பதற்கான ஆரம்பகால ஆதாரங்கள் உள்ளன. பிலாட்டோ சில அறியப்படாத காரணங்களுக்காக கிரைடியஸ் உரையாடலை நிறைவு செய்யவில்லை; எனினும் அறிஞர் பென்ஜமின் ஜொவெட் மற்றவர்களுடன் சேர்ந்து, பிலாட்டோ ஹெர்மொகிரெட்ஸ்சை என்ற தலைப்புக்கொண்ட மூன்றாவது உரையாடலை எழுத திட்டமிடுவதாக வாதிட்டனர். பிலாட்டோ, உலகம் மற்றும் மனுகுலத்தின் தோற்றத்தை டிமாயேஸில் விவரித்துவிட்டு, கிரைடியஸில் உருவகமாக பூரணமான சமுதாயம் என்றெண்ணப்படும் பண்டைய ஏதென்ஸ் மற்றும் எதிரியான அட்லாண்டிஸுக்கு எதிராக வெற்றிகரமாக தற்பாதுகாப்பு செய்ததைப் பற்றி விவரித்துவிட்டு, ஹெர்மொகிரேடஸில் பெர்ஷியர்களுடனான அவர்களுடைய சச்சரவின்போது கிரேக்க நாகரிகத்திற்கான செயற்திட்டத்தைப் பற்றி விளக்குவதை மையப்பொருளாகக் கொண்டிருப்பாரென்று ஜான் வி. லூகாஸ் அனுமானிக்கிறார். அட்லாண்டிஸ்சை டிமாயேஸ் உரையாடலில், அவர் அறிமுகம் செய்து வைத்தார்:

For it is related in our records how once upon a time your State stayed the course of a mighty host, which, starting from a distant point in the Atlantic ocean, was insolently advancing to attack the whole of Europe, and Asia to boot. For the ocean there was at that time navigable; for in front of the mouth which you Greeks call, as you say, 'the pillars of Heracles,' there lay an island which was larger than Libya and Asia together; and it was possible for the travelers of that time to cross from it to the other islands, and from the islands to the whole of the continent over against them which encompasses that veritable ocean. For all that we have here, lying within the mouth of which we speak, is evidently a haven having a narrow entrance; but that yonder is a real ocean, and the land surrounding it may most rightly be called, in the fullest and truest sense, a continent. Now in this island of Atlantis there existed a confederation of kings, of great and marvelous power, which held sway over all the island, and over many other islands also and parts of the continent.[3]

அந்த இரண்டு உரையாடல்களிலும் இடம்பெற்றுள்ள அரசியல்வாதிகளான கிரைடியஸ், ஹெர்மொகிரெட்ஸ், தத்துவ ஞானி சாக்ரடிஸ் மற்றும் லார்சியை சேர்ந்த டிமாயேஸ் ஆகிய நான்கு காதாபாத்திரங்களில், கிரைடியஸ் மாத்திரம் அட்லாண்டிஸ்சை பற்றி பேசுவார். அதே நேரத்தில் இந்த கதாபாத்திரங்கள் உண்மையாக வாழ்ந்துள்ளதால் பிலாட்டோவின் இந்த உரையாடல்கள் அவரின் கண்டுபிடிப்பாக இருக்கலாம். முரண்பாடான நிலையை விவாதிப்பதற்காக, சாக்ரட்டிக் உரையாடல்களை, பிலாட்டோ தன்னுடைய வேலைகளில் மிகவும் அதிகமாக பயன்படுத்தியுள்ளர்.

டிமாயேஸ் , ஓர் உரையாடல் அறிமுகத்துடன் ஆரம்பமாகிறது. அதை தொடர்ந்து, படைப்புகள், உலகத்தின் கட்டமைப்பு மற்றும் பண்டைய நாகரிகம் ஆகியவற்றைக் குறித்து கூறப்படுகிறது. அறிமுகத்தின் போது, பிலாட்டோவின் ரிபப்லிக்கில் விவரித்தவாறே சாக்ரட்டீஸ் ஒரு மிகவும் சரியான சமூகத்தைக் குறித்து பிரமிப்படைகிறார். (ஏறக்குறைய கிமு 380), இது போன்ற ஒரு சமூகத்தைக் குறித்து விளக்கும் ஒரு கதை, ஏதாவது ஒன்று, நினைவு கூற முடியுமா என்று அவரும் அவருடைய விருந்தினர்களும் வியக்கிறார்கள். கிரைடியஸ் வரலாறு சார்ந்த கட்டுக்கதை ஒன்றை இதற்கு சிறந்த உவமையாக கூறுகிறார். அதை தொடர்ந்து கிரைடியஸ் உரையாடலில் பதிவு செய்யப்பட்டது போல அட்லாண்டிஸை விவரிக்கிறார். அவருடைய கருத்துப்படி, புராதன ஏதென்ஸ் நகர் ஒரு “சரியான சமூகத்தின்” பிரதிநிதித்துவமாகவும் அதற்கு நேர்மறையாக அட்லாண்டிஸும் இருந்தது. ரிபப்லிக்கில் விவரிக்கப்படும் “சரியான” என்ற விளக்கத்திற்கு நேர் எதிராக அட்லாண்டிஸ் இருந்தது. 6ம் நூற்றாண்டு கி.மு.வில் ஏதனிய சட்ட மாமேதை சோலன் எகிப்து நகருக்கு வருகை தந்ததில் இருந்து, ஏதன்ஸ் மற்றும் அட்லாண்டிஸ் பற்றிய தன்னுடைய கருத்துகள் உருவானது என கிரைடியாஸ் கூறுகிறார். எகிப்தில், சோலன் சயாஸின் பாதிரியார் ஒருவரை சந்தித்தார், அவர் எகிப்து ஹியரோக்ளிஃப்ஸில் பாபிரியில் பதிவு செய்யப்பட்ட புராதன ஏதென்ஸ் மற்றும் அட்லாண்டிஸ் பற்றிய வரலாற்றை கிரேக்க மொழியில் மொழிபெயர்த்துக் கொடுத்தார். ப்ளூடார்க்கின் படி, “சோலன், பாதிரியார்களில் மிகவும் படித்தவர்களான ஹீலியோபோலிஸின் செனோஃபிஸ் மற்றும் சயிட் சோன்சிஸ் ஆகியோரை சந்தித்தார்;[4] தான் எழுதி வைப்பதற்கு 5 நூற்றாண்டுகள் முந்தைய நிகழ்வுகளை ப்ளூடார்க் கூறுகிறார்.

கிரைடியாஸின் படி, ஒவ்வொரு கடவுளுக்கும் சொந்தமானவை நிறைய இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பழைய ஹெலனிக் கடவுளர்கள் நிலத்தை பகிர்ந்தனர்; மிகச் சரியாக, மற்றும் தனக்கு பிடித்ததைப் போலவே போஸிடானுக்கு அட்லாண்டிஸ் தீவு வழங்கப்பட்டது. புராதன லிபியா மற்றும் ஆசியா மைனர் ஆகியவற்றை சேர்த்து கிடைப்பதை விட அந்த தீவு பெரியதாக இருந்தது.[5] ஆனால் அதன் பிறகு ஒரு பூகம்பத்தால் அது சுருங்கி வெறும் மண் மேடானது. இதனால் பெருங்கடலில் அனைத்து பகுதிக்கும் செல்லக் கூடிய வகையில் இது உதவியது. எகிப்தியர்கள், பிலாட்டோ, அட்லாண்டிஸ் வட பகுதிகளில் மற்றும் கடற்கரையை ஒட்டி பெரும்பாலும் மலைகளைக் கொண்டிருப்பதாகவும், தெற்கு பகுதியில் பெரிய வட்ட வடிவமான வயல் வெளி இருந்ததாகவும் கூறுகின்றனர். மேலும், "இந்த வயல்வெளி ஒரு திசையில் மூன்று ஆயிரம் ஸ்டேடியா தூரமும் [சுமார் 555 கிமீ; 345 மைல்], மைய நிலத்தில் இரண்டு ஆயிரம் ஸ்டேடியாவும் [சுமார் 370 கிமீ; 230 மைல்] இருந்தது." அனைத்து பக்கங்களில் குட்டையாக இருக்கக் கூடிய மலை ஒன்று கடலிலிருந்து ஐம்பது ஸ்டேடியா [9கிமீ; 6மைல்] தூரத்தில் இருந்தது[6]....அனைத்து பக்கங்களையும் சேர்த்து மொத்த மைய தீவும் 5 ஸ்டேட்கள் பரப்பளவில் [சுமார் 0.92 கிமீ; 0.57மைல்] இருந்தது.[7]

பிலாட்டோவின் புராணக் கதைப்படி, ஈவினர் மற்றும் ல்யூசிப்பே ஆகியோரின் மகளான க்ளியேடோ மீது போஸிடான் காதல் வயப்பட்டான். இவர்களுக்கு 5 ஜோடி ஆண் இரட்டை குழந்தைகள் பிறந்தது. இவர்களில் மூத்தவனான அட்லஸ் சரியான முறையில், முழு தீவிற்கும் பெருங்கடலுக்கும் (அவனை கௌரவப்படுத்தும் வகையில் அட்லாண்டிக் பெருங்கடல் என அழைக்கப்படுகிறது) ராஜாவாக்கப்பட்டான். மேலும் அவன் பிறந்த மலை மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களும் பரிசாக அளிக்கப்பட்டது. அட்லஸின் ஒட்டிப் பிறந்த உடன்பிறந்தவரான கேடீரஸ் அல்லது கிரேக்க மொழியில் யூமிலஸ் என்பவருக்கு ஹெர்குலஸ் தூண் வரையிலான தீவின் எல்லைகள் அளிக்கப்பட்டது.[8] "மற்ற நான்கு ஜோடி இரட்டையர்களான – ஆம்ஃபிரெஸ் மற்றும் ஈவாமோன், நெசியஸ் மற்றும் அடோக்தோன், இலாசிபஸ் மற்றும் மெஸ்டோர் மற்றும் அசேயஸ் மற்றும் டயாப்ரபஸ் ஆகியோருக்கும் “பல மனிதர்களை ஆளும் ஆட்சியும்” பெரிய ஆட்சி நிலமும் அளிக்கப்பட்டது.

போஸிடான், மலையைக் குடைந்து தனது காதலுக்காக ஒரு மாளிகையை உருவாக்கினான் மற்றும் அதிகரிக்கக் கூடிய அகலமுடைய மூன்று வட்டவடிவமான அகழிகளை வைத்து சுற்றிவளைத்தான். ஒவ்வொன்றும் ஒன்று முதல் மூன்று ஸ்டேடியா வரை இருக்கக்கூடியதாகவும், அவற்றை பிரிக்க ஒரே அளவுடைய காலி இடங்களும் இருந்தன. அட்லாண்டியர்கள் பின்னர் மலையின் வடப்பகுதியை நோக்கி பாலங்கள் அமைத்து தீவின் மற்ற பகுதிகளுக்கு செல்ல வழி செய்தனர். கடலுக்கு ஒரு பெரிய கால்வாய் அமைத்தனர் மற்றும் பாலங்களின் பக்கங்களில் பாறைகளைக் குடைந்து மலையை சுற்றி நகரத்துக்கு கப்பல்கள் செல்லும் வகையில் சுரங்கங்கள் அமைத்தனர்; அகழிகளின் பாறை சுவற்றை குடைந்து கப்பற் தளங்களை உருவாக்கினர். நகரத்தின் ஒவ்வொரு நுழைவாயிலும் கதவுகள் மற்றும் கோபுரங்கள் அமைத்து பாதுகாக்கப்பட்டது மற்றும் நகரத்தின் ஒவ்வொரு வளைவையும் ஒரு பெரிய சுவர் சூழ்ந்து நின்றது. சுவர்கள் அகழிககளில் இருந்து எடுத்துவரப்பட்ட சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு பாறைகளால் கட்டப்பட்டது. அவை பித்தளை, தகரம் மற்றும் அரிய உலோகமான ஒரிகேல்கம் ஆகியவற்றால் முறையே மூடப்பட்டது.[9]

கிரைடியாஸின் கூற்றுப்படி, அவரது வாழ்நாளில், 9000 வருடங்களுக்கு முன், கிப்ரால்டர் ஸ்ட்ரைடில் ஹெர்குலஸ் தூணின் வெளியே உள்ளவர்களுக்கும் அவற்றின் உள்ளே வசித்தவர்களுக்கும் போர் ஏற்பட்டது. அட்லாண்டியர்கள் எகிப்து வரையிலான ஹெர்குலஸ் தூண்களுக்கு உட்பட்டு இருக்கும் லிபியாவின் பகுதிகளையும், டிரெனியா வரையிலான ஐரோப்பிய கண்டத்தையும் கைப்பற்றி அங்கு இருந்த மக்களை அடிமைகளாக்கினர். அட்லாண்டியன் சாம்ராஜ்யத்துக்கு எதிராக அதனை எதிர்ப்பவர்களின் கூட்டமைப்பை ஏத்தனியர்கள் வழி நடத்தினர். இந்த கூட்டமைப்பு உடைந்து, சாம்ராஜ்யத்திற்கு எதிராக அது மட்டும் நிலையாகி கைப்பற்றப்பட்ட நிலங்களை மீட்டது.

But at a later time there occurred portentous earthquakes and floods, and one grievous day and night befell them, when the whole body of your warriors was swallowed up by the earth, and the island of Atlantis in like manner was swallowed up by the sea and vanished; wherefore also the ocean at that spot has now become impassable and unsearchable, being blocked up by the shoal mud which the island created as it settled down.[10]

வரவேற்பு[தொகு]

பண்டையக்கால வரலாறு[தொகு]

பிலாட்டோவின் டிமாயேஸ் மற்றும் கிரைடியாஸ் தவிர அட்லாண்டிஸ் பற்றிய வேறு எந்த புராதன பதிவுகளும் இல்லை, ஆகையால் அட்லாண்டிஸ் பற்றிய மற்ற ஒவ்வொரு பதிவுக்கும் ஏதோ ஒரு வகையில் பிலாட்டோவை சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது.

சில புராதன எழுத்தாளர்கள் அட்லாண்டிஸ் கற்பனை என்றும் மற்றவர்கள் அது நிஜம் என்றும் கருதினர்.[11] இந்த கதை வரலாற்று உண்மை என்று கருதக்கூடியவர்களில் ஒரு உதாரணமாக பிலாட்டோவின் மாணவரான செனோக்ரேடிஸின் மாணவரான தத்துவ மேதை க்ரேண்டர், அதிகமாக சுட்டிக்காட்டப்படுகிறார். அவரது படைப்பான, பிலாட்டோவின் டிமாயேஸ் பற்றிய வர்ணனை தொலைந்துவிட்டது. ஆனால் ப்ரோக்லஸ் எனும் ஐந்தாம் நூற்றாண்டு வரலாற்று அறிஞர் அதைப் பற்றிக் கூறியுள்ளார்.[12] கேள்விக்குட்பட்டுள்ள பத்தி, க்ரேண்டர் நிச்சயமாக எகிப்துக்கு சென்று பாதிரியார்களோடு பேச்சு நடத்தி, ஹீரோக்ளிஃப்ஸ்களைப் பார்த்து கதையை உறுதி செய்தார் அல்லது எகிப்தின் மற்ற பார்வையாளர்களிடமிருந்து அதைப் பற்றி அறிந்து கொண்டார் என்ற இரண்டு கோணங்களில் நவீன இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.[13] ப்ரோக்லஸ் எழுதியது

As for the whole of this account of the Atlanteans, some say that it is unadorned history, such as Crantor, the first commentator on Plato. Crantor also says that Plato's contemporaries used to criticize him jokingly for not being the inventor of his Republic but copying the institutions of the Egyptians. Plato took these critics seriously enough to assign to the Egyptians this story about the Athenians and Atlanteans, so as to make them say that the Athenians really once lived according to that system.

அடுத்த வரி இது போல பொதுவாக மொழி பெயர்க்கப்படுகிறது - க்ரேண்டர் கூடுதலாக சொல்வது, இது எகிப்தின் தீர்க்கதரிசிகளால் உறுதி செய்யப்படுகிறது, அவர்கள் இந்த விவரங்கள் [பிலாட்டோவால் கூறப்பட்டவை] தூண்களில் எழுதப்பட்டு இன்னும் பாதுகாக்கப்படுகிறது என்று உறுதியாகக் கூறுகின்றனர். ஆனால் அசலில், வாக்கியம் க்ரேண்டர் எனத் தொடங்கவில்லை. ஆனால் “அவன்” என்ற வார்த்தையில் தொடங்குகிறது மற்றும் இது கிரேண்டரைக் குறிக்கிறதா அல்லது பிலாட்டோவை குறிக்கிறதா என்பது இன்னும் விவாதத்திற்கு உரியதாகவே உள்ளது. அட்லேண்டிஸ் கற்பனை என்றும் அது வரலாறு என்றும் கூறும் இரு தரப்பினரும் அந்த வார்த்தை க்ரேண்டர் என்று தான் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று வாதிடுகின்றனர்.[14] ஆலன் கேமரூன் அது பிலாட்டோ என்று தான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று வாதிடுகிறார் மற்றும் ப்ரோக்லஸ் எழுதும் போது பலர் இதை வரலாறு என்றும், பலர் இது கற்பனை என்றும் கருதினாலும் ஏத்தனியர்கள் பற்றிய இந்த மொத்த கருத்துகள், வெறும் கற்பனையும் இல்லை, பெருமைப்படுத்தப்படாத வரலாறும் இல்லை, என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்… "இதில் க்ரேண்டரின் கருத்து ஒரு சொந்த கருத்து மட்டும் தான், வேறு எதுவும் இல்லை என்று எடுத்துக்கொள்கிறார். முதலில் அவர் ஆணித்தரமாகக் கூறி விட்டு பின் அதனை ஒத்துக்கொள்ளப்பட முடியாத இரண்டு கோணங்களில் ஒன்றாக இது கூறப்படுகிறது என மறுக்கிறார்."[15] கேமரூன் மீண்டும் கூறும் போது “அவன்” பிலாட்டோ அல்லது “க்ரேண்டர்” இருவரில் யாரைக் குறித்தாலும், ஓட்டோ மக்கின் வாக்கியங்களான “க்ரேண்டர் சயாஸுக்கு வந்து அங்கு நீத் கோவிலில் அட்லாண்டிஸின் வரலாறு எழுதப்பட்ட ஹீரோக்ளிஃப்ஸால் மொத்தமாக மூடப்பட்டு இருந்த சுவடியைப் பார்த்தார்” என்பதற்கு ஆதாரம் அளிக்கவில்லை. அவருக்காக பல அறிஞர்கள் அவற்றை மொழிப்பெயர்த்தனர் மற்றும் அவர்களது கருத்துகள் அட்லாண்டிஸைப் பற்றிய பிலாட்டோவின் கருத்துகளை முழுமையாக ஒத்துள்ளது என உறுதி அளிக்கிறார்… அல்லது ஜே.வி.லூயிஸின் கருத்துப்படி க்ரேண்டர் “ஒரு சிறப்பு சோதனையாளரை” எகிப்துக்கு அனுப்பினார் மற்றும் அவர் பிலாட்டோவின் சொந்த கருத்துகளையே குறிக்கிறார்.[15]

ப்ரோக்லஸின் டிமாயேஸ் பற்றிய வர்ணனையில் உள்ள இன்னொரு பத்தியில் அட்லாண்டிஸின் புவியியல் விவரங்கள் விவரிக்கப்பட்டுள்ளது. “கடலின் வெளிப்புறத்தில் உள்ள பொருட்களை சோதனை செய்த சில எழுத்தாளர்களின் கூற்றுப்படி அது போன்ற இயல்பும் அளவும் உடைய ஒரு தீவு ஒரு காலத்தில் இருந்ததது. அவர்களை பொறுத்த வரை, அவர்களின் காலத்தில் அந்த கடலில் பெரிசிஃபோனுக்கு புனிதமாகக் கருதப்பட்ட ஏழு தீவுகள் இருந்தன மற்றும் மிகப்பெரிய அளவில் மேலும் மூன்று தீவுகளும் இருந்தன. இவற்றில் ஒன்று ப்ளூடோவுக்கு புனிதமானதாகவும், மற்றொன்று அமோனுக்கும் மற்றும் மற்ற ஒன்று பொசிடோன் வரை தங்களுக்குள்ளாகவே இருந்தது. இதன் பரப்பளவு 1000 ஸ்டேடியாவாக இருந்தது [200 கிமீ]; அவர்கள் கூடுதலாகக் கூறுவதாவது - இதில் வாழ்ந்தவர்கள், அங்கு உண்மையாக இருந்த அளவிடப்பட முடியாத அளவுக்கு பெரியதாக இருந்த, அட்லாண்டிக் கடலில் உள்ள மற்ற தீவுகளை ஆண்டனர். அதே போல போசீடானுக்கு புனிதமாக இருந்த அட்லாண்டிஸில் இருந்த மூதாதையர்கள் பற்றிய ஞாபகங்களைப் பாதுகாத்து வந்தனர். இந்த விவரங்களை மார்சிலஸ் தனது ஏதியோபிகாவில் எழுதியுள்ளார்".[16] மார்செலஸ் அடையாளம் காணப்படாமலேயே உள்ளார்.

அட்லாண்டிஸ் இருந்ததாக நம்பும் மற்ற புராதன வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் தத்துவ அறிஞர்கள் ஸ்ட்ரேபோ மற்றும் போசிடோனியஸ் ஆவார்கள்.[17]

பிலாட்டோவின் கருத்துகளை கிண்டல் செய்யும் வண்ணம் அதைப் போலவே உள்ள மற்ற கருத்துகள்: டிமாயேஸ் மற்றும் கிரைடியாஸுக்கு சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வரலாற்று ஆர்வலர்கள் கியோஸின் தியோபோம்பஸ் பெருங்கடலைத் தாண்டி உள்ள மெரோபிஸ் என அழைக்கப்படும் ஒரு இடத்தைப் பற்றி எழுதியுள்ளார். இந்த விவரம் அவரது பெரிய படைப்பான ஃபிலிப்பிகா என்பதன் 8வது புத்தகத்தில் சேர்க்கப்பட்டது. இதில் டியோனிசஸின் நண்பனான சிலினஸ் மற்றும் கிங் மிடாஸ் ஆகியோரிடையே நடந்த பேச்சு வார்த்தையும் இடம் பெற்றது. சிலினஸ் மெரோபிட்ஸ் என்பவர்கள் சாதாரண அளவை விட இரண்டு மடங்கு வளரக்கூடியவர்கள் என விவரித்து, அவர்கள் மெரோபிஸ் என்ற தீவில் இரண்டு நகரங்களில் இருந்தனர் என்றும் கூறுகிறார் (காஸ்?): யூசிபெஸ் (Εὐσεβής“பயஸ் டவுன்”) மற்றும் மாசிமோஸ் (Μάχιμος“சண்டையிடும் டவுன்”). பத்து மில்லியன் வீரர்கள் பெருங்கடலைக் கடந்து ஹைபர்போரியாவை கைப்பற்ற சென்றனர் ஆனால் ஹைபர்போரியர்கள் பூமியிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று தெரிந்தவுடன் தங்கள் எண்ணத்தை கைவிட்டனர் என்றும் அவர் கூறுகிறார். பிலாட்டோவின் கருத்துகளை பொய்யாக்கும் நோக்கோடு, சிலீனியஸ் கதை பற்றிய இந்த மற்றும் மற்ற விவரங்கள் போலியானவை அல்லது அதிகப்படுத்திக் கூறுவது என்றும் ஹைண்ஸ்–கந்தர் நெசர்லாத் வாதாடுகிறார்.[18]

பிலாட்டோவின் அட்லாண்டிஸ் பற்றிய கருத்துகளை சார்ந்து, ஸோடிகஸ் என்ற நியோபிளாடோனிஸ்ட், 3ம் நூற்றாண்டு கிபியின் தத்துவ அறிஞர், ஒரு பெரிய பாடலை எழுதினார்.[19]

முதல் நூற்றாண்டு பிசியில் எழுதிக் கொண்டிருந்த வரலாற்று அறிஞர் டிமேஜன்ஸின் தொலைந்து போன எழுத்தை ஆதாரமாகக் கொண்டு 4ம் நூற்றாண்டு கிபி வரலாற்று அறிஞர் அமியானஸ் மார்சிலீனஸ், தூரத்தில் உள்ள தீவுகளில் இருந்து கால் நகரத்தில் வசிப்பவர்கள் இங்கு வந்து தங்கினார்கள் என்று கால் நகரின் ட்ரூட்ஸ் கூறினார்கள் என எழுதுகிறார். சிலர் அமியான்ஸின் சான்று, அட்லாண்டிஸ் கடலுக்குள் மூழ்கிய போது அதில் வசித்தவர்கள் மேற்கு ஐரோப்பாவிற்கு சென்று விட்டனர் எனக் கூறுவதாகக் கருதினர்; ஆனால் அமியான்ஸின் கூறுவது என்னவெனில் “ ரையினைத் (ரெஸ் ஜெச்டே 15.9) தாண்டி உள்ள நிலங்கள் மற்றும் தீவுகளில் இருந்தும் மற்றவர்கள் இடம் பெயர்ந்தனர் மற்றும் மக்கள் தொகையின் ஒரு பகுதியினர் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்று டிராசிடே (ட்ரூட்ஸ்) நினைவு கூறுகின்றனர்”. இதிலிருந்து தெரிவது, இடம் பெயர்ந்தவர்கள் அட்லாண்டிக் கடலில் இருப்பதாக யூகிக்கப்படும் இடத்திலிருந்து தென்மேற்குக்கு வந்தவர்கள் அல்ல மாறாக காலுக்கு வடக்கிலிருந்து (பிரிட்டன், நெதர்லாந்து அல்லது ஜெர்மணி) வந்தவர்கள்.[20] மாறாக, சமுத்திரத்தின் ஓரத்தில் வாழ்ந்த செல்ட்ஸ், சமுத்திரத்திலிருந்து எழும்புவது போல் தோன்றிய இரட்டைத் தெய்வங்களை (டியாஸ்காரி) வணங்கியதாக அறிவிக்கப்படுகிறது.[21]

கிபி 1378/79 தேதியிடப்பட்ட கணிப்பு வானியல் பற்றிய ஒரு எபிரேய ஆய்வுக்கட்டுரையில் தீர்க்க ரேகைக்கான பூஜ்ஜியப் புள்ளிகளை நிர்ணயிப்பதைப் பற்றிய ஒரு விளக்கவுரையில் அட்லாண்டிஸ் புராணம், குறிப்பிடப்பட்டிருக்கிறது:

Some say that they [the inhabited regions] begin at the beginning of the western ocean [the Atlantic] and beyond. For in the earliest times [literally: the first days] there was an island in the middle of the ocean. There were scholars there, who isolated themselves in [the pursuit of] philosophy. In their day, that was the [beginning for measuring] the longitude[s] of the inhabited world. Today, it has become [covered by the?] sea, and it is ten degrees into the sea; and they reckon the beginning of longitude from the beginning of the western sea.[22]

அட்லாண்டியன் சாம்ராஜ்ஜியத்தின் விரிவு எல்லை பற்றிய ஒரு படம் இக்னேசியஸ் எல். டோனெலியின் அட்லாண்டிஸிலிருந்து : த ஆண்டிடிலூவியன் வேர்ல்டு 1882

நவீன கால வரலாறு[தொகு]

ஃபிரான்சிஸ் பேகனின் 1627ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கட்டுரையான தி நியூ அட்லாண்டிஸ் என்பதில் அவர் பென்சலேம் என்று அழைக்கும் ஒரு யுடோபியன் சமூகம் அமெரிக்காவின் மேற்குக் கரைக்கு அப்பால் இருந்ததாக விவரிக்கிறார். அந்த வர்ணனையில் வரும் ஒரு கதாபாத்திரம் பிலாட்டோவுக்கு ஒத்த அட்லாண்டிஸின் வரலாறை கொடுத்து, அட்லாண்டிஸ் அமெரிக்காவில் இருப்பதாகக் கூறுகிறது. பேகன் என்பது வடக்கு அல்லது தெற்கு அமெரிக்காவை குறிக்கிறதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. 1728ஆம் ஆண்டில் ஐசாக் நியூட்டனின் தி க்ரோனோலோஜி ஆஃப் த ஏன்ஷியன்ட் கிங்டம்ஸ் அமெண்டட் அட்லாண்டிஸுடன் உள்ள கற்பனையான பல தொடர்பை ஆராய்கிறது.[23] 19ம் நூற்றாண்டின் நடுவில் மற்றும் முடிவில், அட்லாண்டிஸ் ஏதாவது வகையில் மயான் மற்றும் ஆஸ்டெக் கலாச்சாரத்துக்கு தொடர்புடையது என சார்லஸ் எடீன் ப்ராசியர் த போர்போர்க் தொடங்கி எட்வர்ட் ஹெர்பர்ட் தாம்ப்ஸோனாந்த் அகஸ்டஸ் லே ப்ளாண்ஜியான் உள்ளிட்ட பிரபலமான மீசோ அமேரிக்கன் அறிஞர்கள் கூறுகின்றனர். 1882ஆம் ஆண்டில் இக்னாசியஸ் எல். டோனெலியின் Atlantis: the Antediluvian World வெளியீடு அட்லாண்டிஸ் பற்றிய மிக அதிகமான ஆர்வத்தை தூண்டியது. டோனெலி பிலாட்டோவின் அட்லாண்டிஸ் பற்றிய கருத்துகளை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு, அனைத்து அறியப்பட்ட புராதன கலாச்சாரங்கள் உயரிய நியோலிதிக் கலாச்சாரத்தில் இருந்து வந்தவை என்பதை உணர்த்த முயற்சித்தார்.

இக்னேசியஸ் எல். டோனெலி, அமெரிக்க காங்கிரஸ்மேன் மற்றும் அட்லாண்டிஸ் பற்றிய எழுத்தாளர்.

19ம் நூற்றாண்டில், அட்லாண்டிஸின் சிறந்த இயல்பு மூ மற்றும் லெமூரியா போன்ற தொலைந்த கண்டங்கள் குறித்த கதைகளோடு இணைக்கப்பட்டது. தி சீக்ரட் டாக்ட்ரினில் ஹெலீனா ப்ளாவாட்ஸ்கி அட்லாண்டியர்கள் கலாச்சார கதாநாயகர்கள் (அவர்களை பிரதானமாக இராணுவ அபாயமாக விவரித்த பிலாட்டோவிற்கு எதிர்மறையாக) என்றும் அவர்கள் “ஆரிய இனத்தால்" பின்பற்றப்பட்ட நான்காவது “வேர் இனம்” என்று எழுதுகிறார். அட்லாண்டிஸின் கலாச்சாரம் 1,000,000 மற்றும் 900,000 ஆண்டுகளுக்கு இடையே உச்சத்தை அடைந்தது ஆனால் அங்கு வசிப்பவர்களின் மாயாஜால சக்திகளின் அபாயகரமான உபயோகத்தால் மூண்ட உள்சண்டைகளால் தானாகவே அழிந்தது என்றும் தியோசோஃபிஸ்ட்கள் நம்புகிறார்கள். இதே போல அட்லாண்டிஸின் கலாச்சார வளர்ச்சி குறித்து ருடோல்ஃப் ஸ்டைனரும் எழுதினார்.[சான்று தேவை] 1923ஆம் ஆண்டில் எட்கார் கேய்ஸ் அட்லாண்டிஸ் பற்றி முதலில் குறிப்பிட்டார் [24] மற்றும் அது முதலில் அஸோரசில் இருந்து பஹாமாஸ் வரையிலான கண்டம் போன்ற அளவுடைய பகுதியாக இருந்தது என்றும் ஒரு மர்மமான சக்தி உடைய கிரிஸ்டலினால் இயங்கும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் கொண்ட அதிகப்படியாக வளர்ச்சி பெற்ற கலாச்சாரமாக இருந்தது என்றும் கூறுகிறார். அவர் அட்லாண்டிஸின் சில பகுதிகள் 1968 அல்லது 1969ல் வெளியே வரும் என்றும் யூகித்தார். பஹாமாஸில் உள்ள வடக்கு பிமினி தீவுகளுக்கு அப்பால் பெரிய நீண்ட சதுர வடிவிலான கற்களின் புதையுண்ட கல் அமைப்பான பிமினி சாலை, தொலைந்த கலாச்சாரத்தின் ஆதாரமாக ராபர்ட் ஃபெரோ மற்றும் மைக்கேல் க்ரம்லீயால்[25] கருதப்படுகிறது.

ஹீரோடோடஸின் படி (சுமார் 430 பி சி), ஃபேரோ நீகோவின் கட்டளைப்படி ஒரு ஃபிணீசியன் பயணம் ஆப்பிரிக்காவை சுற்றி வந்து, இந்தியப் பெருங்கடல் மற்றும் செங்கடலில் தெற்கு நோக்கி பயணித்து மற்றும் அட்லாண்டிக்கில் வடக்கில் பயணித்து, ஹெர்குலஸின் தூண்கள் வழியாக மத்தியத்தரைக் கடலுக்குள் மறுமுறை நுழைந்தது. அவரின் வடமேற்கு ஆப்பிரிக்கா பற்றிய விவரிப்பு, தற்போது ஹெர்குலஸ் தூண்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக சுட்டிக்காட்டியது என்பதை தெள்ளத் தெளிவாக விவரிக்கிறது. ஆயினும், ஈரோடோஸ்தெனஸுக்கு முன்பாக ஸ்ட்ரைட் ஆஃப் சிஸிலியில் அவை இருந்தது என்ற நம்பிக்கை சில அட்லாண்டிஸ் பற்றிய கட்டுரைகளில் கூறப்படுகிறது.

அமெரிக்க மனநோய் நிபுணர், எட்கர் கேய்ஸ் 1910

நாசி ஆன்மீகம்[தொகு]

அட்லாண்டிஸ் பற்றிய கருத்து நாசி எழுத்தாளர்களைக் கவர்ந்தது. ஆரிய அட்லாண்டியர்களைத்[சான்று தேவை] தேடி 1939ம் ஆண்டு திபெத்திற்கு ஒரு ஜெர்மன் பயணத்தை ஹென்ரிக் ஹிம்லர் என்ற எஸ் எஸ் அதிகாரி 1938ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்தார். ஆயினும், இந்தப் பரிந்துரை சரியானது அல்ல[26] என்றும் இந்த பயணம் ‘யூரோபிட்' இனத்தின் தொடக்கத்தை அறிய அல்லது ஒரு பொதுவான உயிரியல் சார்ந்த பயணம்[27] தான் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. 1934ஆம் ஆண்டில் எழுதிய ஜூலியஸ் இவோலாவின் படி,[28] அட்லாண்டியர்கள் வட துருவத்தில் உருவான ஹைபர்போரியண்ஸ் – நார்டிக் சூப்பர்மென்கள்.(தியூலை காண்க). இதே போல, ஆல்ஃபிரட் ரோசன்பர்க் (த மித் ஆஃப் த ட்வெண்டியத் செஞ்சுரி , 1930) “நார்டிக்-அட்லாண்டியன்” அல்லது “ஆர்யண்-நார்டிக்” தலைமை இனத்தைப் பற்றி பேசுகிறார்.

சமீபத்திய காலங்கள்[தொகு]

கண்ட இழுப்புகள் 1960களில் பெரிதும் ஒத்துக்கொள்ளப்பட தொடங்கியதனால் மற்றும் பிளேட் டெக்டானிக்ஸ் பற்றிய அதிகரித்த புரிதல்கள் தற்போதைய புவியியலில் ஒரு தொலைந்த கண்டம் இருப்பது சாத்தியம் இல்லை என்று விளக்கியதனால், அட்லாண்டிஸ் பற்றிய பல “தொலைந்த கண்டம்” பற்றிய எழுத்துகளின் மதிப்பு குறையத் தொடங்கியது. மாறாக, பிலாட்டோவின் கதையில் உள்ள கற்பனை விஷயங்கள் அதிகமாக பேசப்பட்டது.

இந்த விஷயத்தைப் பற்றி பிலாட்டோ அறிஞரும் அரிசோனா பல்கலைக் கழகத்தின் தத்துவ பேராசிரியருமான டாக்டர். ஜூலியா ஆனாஸ் கூறுவதாவது:

The continuing industry of discovering Atlantis illustrates the dangers of reading Plato. For he is clearly using what has become a standard device of fiction—stressing the historicity of an event (and the discovery of hitherto unknown authorities) as an indication that what follows is fiction. The idea is that we should use the story to examine our ideas of government and power. We have missed the point if instead of thinking about these issues we go off exploring the sea bed. The continuing misunderstanding of Plato as historian here enables us to see why his distrust of imaginative writing is sometimes justified.[29]

டிமாயேஸில் உள்ள கிரைடியாஸ் பற்றிய கதை ஒரு முக்கியமான ஆதாரம் என்று கென்னத் ஃபெடர் சுட்டிக் காட்டுகிறார். வசனத்தில், சாக்ரடீஸின் கற்பனை சமூகத்தைக் குறிப்பிட்டு கிரைடியாஸ் கூறுவதாவது:

And when you were speaking yesterday about your city and citizens, the tale which I have just been repeating to you came into my mind, and I remarked with astonishment how, by some mysterious coincidence, you agreed in almost every particular with the narrative of Solon. ...[30]

ஃபெடர் ஏ.ஈ. டெய்லரை எழுதியதை குறிப்பிடுகிறார் “ பாதிரியார்களுடனான சோலானின் பேச்சுவார்த்தை பற்றிய வர்ணனை மற்றும் அட்லாண்டிஸ் பற்றிப் பாடல் எழுதும் எண்ணம் ஆகியவை பிலாட்டோவின் கற்பனையில் உருவானவை என்று இதை விட தெளிவாக கூற இயலாது”.[31]

இடம் பற்றிய கருத்துகள்[தொகு]

பிலாட்டோவின் கருத்தில் இருந்து விலகி பொதுவான கருத்தாக அது மாறும் வரை டோனெலியின் நாட்களில் இருந்து, அட்லாண்டிஸின் இடமாக பல டஜன் இடங்கள் கூறப்பட்டன. கூறப்பட்ட இடங்களில் பல இடங்கள் அட்லாண்டிக்கில் இல்லை என்பதே இந்த கருத்தை பிரதிபலிக்கிறது. தற்போது உள்ளவற்றில் சில மட்டுமே அறிவான அல்லது தொல்பொருள் ஆய்வு தொடர்பான கருத்துகளாகும். மற்றவை கற்பனை அல்லது அறிவியலுக்கு அப்பாற்பட்ட முறையிலான கருத்துகளாகும். முன்மொழியப்பட்ட பல இடங்கள் அட்லாண்டிஸ் கதையில் கூறியுள்ளவற்றின் குணங்களில் (தண்ணீர், விபத்து முடிவு, சரியான கால நேரம்) சிலவற்றை ஒத்து இருந்தாலும், எதுவும் உண்மையான வரலாற்று சிறப்புள்ள அட்லாண்டிஸ் என்பதை உறுதிப்படுத்தவில்லை.

மத்தியத்தரைக் கடலில் அல்லது அருகில்[தொகு]

சண்டோரினி தீவுகள் பற்றிய விண்கல படம்.இந்த இடம் அட்லாண்டிஸின் இடமாகக் கூறப்பட்ட பல இடங்களில் ஒன்றாகும்.

வரலாற்று ரீதியாக கூறப்பட்ட பல இடங்கள் மத்தியத்தரைக் கடலின் அருகில் அல்லது அதனுள் உள்ளது: சார்டினியா, க்ரெடே மற்றும் சாண்டோரினி, சிஸிலி, சைப்ரஸ் மற்றும் மால்டா ஆகிய தீவுகள்; நில ஆதாரமான நகரங்கள் அல்லது மாநிலங்களான ட்ராய், டார்டெஸாஸ் மற்றும் டாண்டலாஸ் (மனீசியா மாகாணத்தில்), துருக்கி; மற்றும் இஸ்ரேல் சினாய் அல்லது கானான் ஆகியவையாகும்.[சான்று தேவை] கிமு 17 வது அல்லது 16வது நூற்றாண்டு என தேதியிட்ட தேரா கொந்தளிப்பு (எரிமனை வெடிப்பு), ஒரு பெரிய சுனாமியை ஏற்படுத்தி அருகில் உள்ள தீவான க்ரேடேவில் இருந்த மினோவன் கலாச்சாரத்தை அழித்ததாக நிபுணர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தே கதை எழுத ஆர்வத்தை ஏற்படுத்தியதாக சிலரால் நம்பப்படுகிறது.[32] எகிப்தியன் மொழியில் இருந்து கிரேக்க மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்படும் போது கால அளவு மாற்றமடைந்திருக்கலாம், இதன் காரணமாக “நூறு” என்பதற்கு பதிலாக “ஆயிரங்கள்” என்று ஆகியிருக்கலாம் என்று ஏ.ஜி.கலானேபோலாஸ் வாதாடினார்; இதே தவறு காரணமாக பிலாட்டோவின் அட்லாண்டிஸ் ராஜ்ஜியத்தின் அளவு மாறி அதை க்ரேடேவின் அளவாக ஆகிறது, இதனால் தேராவில் ஒரு கிரேடர் அளவுக்கு நகரம் மாறிவிடும்; சோலானுக்கு முன் 900 வருடங்கள் என்பது 15வது நூற்றாண்டாகும்[33] கருங்கடலின் பகுதிகளில் கீழ் கண்ட இடங்கள் கூறப்படுகிறது: போஸ்போரஸ் மற்றும் அண்கோமா (ட்ரேப்சோன் அருகே உள்ள ஒரு பிரபலமான இடம்). 2003ல் அசோவ் கடல் பரிந்துரைக்கப்பட்டது.[34]

அட்லாண்டிக் பெருங்கடலில்[தொகு]

அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரில் உள்ள ஒற்றுமை காரணமாக அட்லாண்டிஸ் அட்லாண்டிக் பெருங்கடலில் இருப்பது ஓரளவு ஒத்துக் கொள்ளப்படுவதாக உள்ளது. பிரபலமான கலாச்சாரங்கள் அட்லாண்டிஸ் அங்கே தான் இருந்ததாகக் கூறுகிறது, இது பிலாட்டோவின் கருத்தை எதிர்ப்பதாக உள்ளது. பல கருத்துகள், இந்த மூழ்கிய தீவு, ஸ்வீடன் உள்ளிட்ட வட ஐரோப்பாவில் இருப்பதாகக் கூறுகிறது அல்லது (அட்லாண்டாவில் உள்ள ஓலொஃப் ரட்பெக், 1672-1702) வடக்கடலில் இருப்பதாகக் கூறுகிறது. செல்டிக் ஷெல்ஃப் மற்றும் ஆண்டலூசியா என்ற இடங்களையும் இருக்கக் கூடியவையாகவும் மற்றும் அயர்லாந்துக்கும் தொடர்பு இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.[35] கேனரி தீவுகள் கூட இருக்கக் கூடியதாகக் கண்டறியப்படுகிறது, ஸ்ட்ரைட் ஆஃப் கிப்ரால்டரின் மேற்கு பக்கம் ஆனால் மத்தியத்தரைக் கடலின் அருகில் உள்ளது. அட்லாண்டிக்கில் உள்ள பல தீவுகள் மற்றும் தீவுக் குழுக்கள் கூட இருக்கக் கூடிய இடங்களாகக் கருதப்படுகிறது, குறிப்பாக அசோரஸ் அது போன்று கருதப்படுகிறது. ஆயினும் கேனரி தீவுகள், அசோரஸ் மற்றும் அதை சுற்றியுள்ள கடல் மட்டங்கள் ஆகியவற்றில் செய்யப்பட்ட விரிவான புவியியல் ஆய்வுகளில், இந்த தீவுகள் இருந்த கால கட்டத்தில், எந்த நேரத்திலு,ம் அங்கு விபத்தின் மூலம் இவை மூழ்கியதற்கான ஆதாரங்கள் சுத்தமாக இல்லை என கண்டறிந்தது. அவற்றை சுற்றி உள்ள பெருங்கடல் மட்டம் எந்த காலத்திலும் காய்ந்து இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்பதையும் கண்டறிந்தது.[36] ஸ்ட்ரைட் ஆஃப் கிப்ரால்டரின் அருகில் ஸ்பார்டெல் என்ற மூழ்கிய தீவும் பரிந்துரைக்கப்படுகிறது.[37]

மற்ற இடங்கள்[தொகு]

அட்லாண்டிஸ் இருந்த இடங்களாக கரீபியன் இடங்களான க்யூபா, பஹாமாஸ் மற்றும் பெர்முடா டிரையாங்கில்[38] ஆகிய இடங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்தோனேசியா, மலேசியா அல்லது இரண்டும் (அதாவது சுண்டலாண்ட்) உட்பட பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலிலுள்ள இடங்களும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவை அடுத்து "குமரிக்கண்டம்" என்று காணாமற்போன ஒரு கண்டத்தின் கதைகளும் அட்லாண்டிஸோடு ஒப்புமைப்படுத்த சிலரை ஊக்கமளித்துள்ளது. ஜப்பானின் யோனகுனி நினைவுச் சின்னமும் அவ்வாறே கூறப்படுகிறது. அண்டார்ட்டிக்காவும் கூட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கலை, இலக்கியம் மற்றும் பிரபலமான கலாச்சாரம்[தொகு]

அட்லாண்டிஸ் பற்றிய கருத்துகள் பல புத்தகங்கள், படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளையாட்டுகள், பாடல்கள் மற்றும் பல வித்தியாசமான படைப்புகளில் இடம் பெற்றுள்ளது. திரையில் அட்லாண்டிஸுக்கான தற்போதைய உதாரணங்கள் – டிஸ்னி அசைவுக்காட்சி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடரான ஸ்டார்கேட் அட்லாண்டிஸ் .Atlantis: The Lost Empire முதல் டூம்ப் ரைடர் வீடியோ விளையாட்டில் அட்லாண்டிஸை அடிப்படைக் களமாகவும் அதன் இடங்கள் அதன் முடிவுக்காகவும் உபயோகித்துள்ளது. இது அதிகமாகவும் அதே சமயம் ஓரளவு தத்துவ ரீதியாகவும் ராபர்ட் ஆண்டன் வில்சன் மற்றும் ராபர்ட் ஷியாவின் த இல்யூமினாடஸ்! ட்ரைலாஜியில் இடம்பெற்றுள்ளது மற்றும் இது புது உலக தத்துவங்களின் அடிப்படைக் கொள்கையாகும்.

குறிப்புகள்[தொகு]

 1. பிலாட்டோவின் டிமாயேஸ் பொதுவாக 360 கிமு என தேதியிடப்படுகிறது; அவரது கிரைடியாஸ் இதனைத் தொடர்கிறது.
 2. ஆலென் கேமரூன், கீரீக் மிதோக்ரஃபி இன் த ரோமன் வேர்ல்டு, ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்ஸிடி பிரஸ் (2004) ப.124
 3. Timaeus 24e–25a, R. G. Bury translation (Loeb Classical Library).
 4. புளூடார்க், லைஃப் ஆஃப் சோலன் ,
 5. அட்லாண்டிஸ் – பிரிட்டாணிகா ஆன்லைன் எண்சைக்ளோபிடியா
 6. கிரைடியாஸ் 113, பரி மொழிபெயர்ப்பு
 7. கிரைடியாஸ் 116a, பரி மொழிபெயர்ப்பு.
 8. இந்த பெயர் கேட்ஸ் என்பதன் பின்-வடிவமைப்பாகும். இது கேடிஸ் என்பதற்கான கிரேக்கப் பெயர்.
 9. கிரைடியாஸ் 116bc
 10. Timaeus 25c–d, Bury translation.
 11. நெசல்ராத் (2005), ப. 161–171.
 12. டிமாயேஸ் 24a: τὰ γράμματα λαβόντες.
 13. கேமரூன் 2002
 14. காஸ்டில்டன் 2001, ப,168
 15. 15.0 15.1 கேமரூன் 1983
 16. ப்ராக்லஸ், கமெண்டரி ஆன் பிலாட்டோஸ் டிமாயேஸ் , ப. 117.10–30 (=FGrHist 671 F 1), மொழிபெயர்ப்பு. டேய்லர், நெசல்ராத்).
 17. ஸ்டிராமோ 2.3.6
 18. நெசல்ராத் 1998, ப. 1–8.
 19. பார்ஃபிரி, லைஃப் ஆஃப் பிலாண்டினஸ் , 7=35.
 20. ஃபிட்ஸ்பாட்ரிக்-மேத்யூ, கெயித். தொலைந்த கண்டங்கள்: அட்லாண்டிஸ்.
 21. [1] பிப்லியோத்தீக்கா ஹிஸ்டோரிக்கா - டியடோரஸ் சிகுலஸ் 4.56.4: “மேலும் எழுத்தாளர்கள் இவைகளைக் குறித்தும் ஆதாரங்களை அளிக்கிறார்கள்; சமுத்திரத்தின் ஓரத்தில் வாழ்ந்த செல்ட்ஸ், எல்லா தெய்வங்களுக்கு மேலாக டியாஸ்காரியை ஏற்றி வணங்கினார்கள்; ஏனென்றால் இந்த தெய்வங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பிவருவதாக அவர்களுக்குத் தோன்றியதாக பண்டைய காலங்களிலிருந்து வழிவழியாக ஒரு பாரம்பரியம் அவர்கள் மத்தியில் நிலவி வந்தது. மேலும், சமுத்திரத்தின் ஓரத்திலுள்ள நாடு, அர்கொனாட்ஸ் மற்றும் டியாஸ்காரி என்ற பெயர்களிலிருந்து பெறப்பட்ட பல பெயர்களினால் அழைக்கப்பட்டதாகவும் கூறினர்.”
 22. Selin, Helaine 2000, Astronomy Across Cultures: The History of Non-Western Astronomy, Kluwer Academic Publishers, Netherlands, pg 574. ISBN 0-7923-6363-9
 23. ஐசக் நியூட்டன் (1728). த க்ரோனோலோஜி ஆஃப் ஏன்ஷியன்ட் கிங்டம்ஸ் அமெண்டட்
 24. ராபின்சன், லிடில் 1972, எட்கர் கேய்ஸஸ் ஸ்டோரி ஆஃப் த ஆரிஜின் அண்ட் டெச்டினி ஆஃப் மேன் , பெர்க்லி புக்ஸ், நியூயார்க், ப.51
 25. ஃபெரோ அண்ட் க்ரும்லி, அட்லாண்டிஸ்: த ஆடோபயோகிராஃபி ஆஃப் எ சேர்ச் (நியூயார்க்: டபுள்டே) 1970
 26. ஃபார்டீன் டைம்ஸ், அக்டோபர் 2003, கிரிஸ்டொஃபர் ஹேல், பக்கம் 31
 27. ஃபார்டீன் டைம்ஸ், அக்டோபர் 2003, கிரிஸ்டொஃபர் ஹேல், பக்கம் 38
 28. ஈவோலா, ரெவோல்ட் அகைன்ஸ்ட் த மாடர்ன் வேர்ல்டு, 1934
 29. J. Annas, Plato: A Very Short Introduction (OUP 2003), p.42 (emphasis not in the original)
 30. Timaeus 25e, Jowett translation.
 31. ஃபெடர், கென்னத் L., ஃப்ராட்ஸ், மித்ஸ் அண்ட் மிஸ்டரீஸ்: சயிண்ஸ் அண்ட் சுயூடோ சயிண்ஸ் இன் ஆர்கியோலோஜி , மேஃபீல்ட் வெளியீடு, 1999, ப.164
 32. த வேவ் தட் டெச்ட்ராய்டு அட்லாண்டிஸ் ஹார்வே லிலி, BBC நியூஸ் ஆன்லைன் 2007-04-20. 2007-7-21 மீட்கப்பட்டது.
 33. கேலனோபோலஸ், ஆஞெலொஸ் ஜார்ஜியோஅண்ட் எட்வர்ட் பேகன், அட்லாண்டிஸ்: த ட்ரூத் பிஹைண்ட் த லெஜண்ட் , இண்டியானாபோலிஸ் : பாப்ஸ்-மெரில் 1969.
 34. ஈகிள், விண்ட், அட்லாண்டிஸ் மதர்லேண்ட் , மாய், ஹெச்.ஐ: காஸ்மிக் வோர்டெக்ஸ், 2003 ISBN 0-9719580-0-9
 35. Lovgren, Stefan (2004-08-19). "Atlantis "Evidence" Found in Spain and Ireland". National Geographic. பார்த்த நாள் 2007-12-05.
 36. அட்லாண்டிஸின் இடம் சார்ந்த கருத்துகள்
 37. http://antiquity.ac.uk/projgall/kuhne300/ "அட்லாண்டிஸுக்கு" ஓர் இடமா? ரேய்னர் டபுல்யூ. கூஹேனே ஆண்டிக்குவிட்டி தொகுப்பு 78 எண் 300 ஜூன் 2004
 38. ஹான்சன், பில். த அட்லாண்டிஸ் டிரையாங்கிள் 2003.

மேலும் படிக்க[தொகு]

புராண கால ஆதாரங்கள்[தொகு]

நவீன கால ஆதாரங்கள்[தொகு]

 • பிக்லர், ஆர் (1986). 'Athen besiegt Atlantis. Eine Studie über den Ursprung der Staatsutopie', கேனோபஸ் , தொகுப்பு. 20, எண். 51, ப. 71–88.
 • கேமரூன், ஏலன் (1983). 'க்ரேண்டர் மற்றும் போசிடோனியஸ் ஆன் அட்லாண்டிஸ்’, த கிளேஸிகல் குவார்டர்லி , தொகுப்பு-33, எண் 1 (1983), ப.81-91
 • கேய்ஸ், எட்கர் எவான்ஸ் (1968). எட்கார் கேய்சஸ் அட்லாண்டிஸ் . ISBN 0071380760.
 • • க்ரௌலி, அலீஸ்டர் – தொலைந்த கண்டம்
 • டி கேம்ப், எல்.எஸ் (1954). தொலைந்த கண்டங்கள்: வரலாறு, அறிவியல் மற்றும் இலக்கியங்களில் உள்ள அட்லாண்டிஸ் கருப்பொருள்கள் , நியூயார்க்: ஜினோம் பிரஸ்.
 • கேஸில்டென், ரோட்னீ (2001) அட்லாண்டிஸ் டெஸ்ட்ராய்ட்’, லண்டன்: ரூலேட்ஜ்
 • டோனெலி. ஐ (1882). Atlantis: The Antediluvian World , நியூ யார்க் :ஹார்பர் & பீரதர்ஸ். ப்ராஜெக்ட் குடன்பர்கிலிருந்து 2001ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி மீட்கப்பட்டது.
 • எல்லீஸ், ஆர் (1998). இமேஜிங்க் அட்லாண்டிஸ் , நியூ யார்க்: நாஃப். ISBN 0-679-44602-8
 • எர்லிங்சன், யூ (2004). அட்லாண்டிஸ் ஃப்ரம் ஏ ஜியோக்ராஃபர்ஸ் பெர்ஸ்பெக்டிவ்: மேப்பிங்க் த ஃபேரி லேண்ட் , மியாமி: லிண்டார்ம் ISBN 0-9755946-0-5
 • ஃப்லெம்-ஏத் ஆர், வில்சன் சி (2001). த அட்லாண்டிஸ் புளூபிரிண்ட்: அன்லாக்கிங்க் ஏண்சியண்ட் மிஸ்டரீஸ் ஆஃப் எ லாங்க்-லாஸ்ட் சிவிலைசேஷன் , டெலாகார்டே பிரஸ்
 • ஃப்ரா, எஸ் (2002). Le Colonne d'Ercole: Un'inchiesta , Rome: Nur neon. ISBN 88-900740-0-0
 • ஜில், சி (1976). ‘த ஆரிஜின் ஆஃப் த அட்லாண்டிஸ் மித்’, ட்ரிவியம் , தொகுப்பு-11, பக்கம். 8–9.
 • கார்டன், ஜே.எஸ். (2008). 'த ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் அட்லாண்டிஸ் : அண்ட் த மிஸ்டீரியஸ் ஆரிஜின்ஸ் ஆஃப் ஹ்யூமன் சிவிலைசேஷன்’, வாட்கின்ஸ் வெளியீடு, லண்டன். ISBN 978-1-905857-24-1
 • ஜார்ஜ்மான்ஸ், ஹெச் (2000). 'Wahrheit und Fiktion in Platons Atlantis-Erzählung', ஹெர்ம்ஸ் , தொகுப்பு- 128, ப. 405–420.
 • க்ரிஃபித்ஸ், ஜே.பி (1985). 'அட்லாண்டிஸ் அண்டு ஈஜிப்ட்', ஹிஸ்டோரியா , தொகுப்பு 34, ப.35எஃப்.
 • ஹேடெல், டபுல்யூ. ஏ (1933). 'எ சஜெஷன் கண்செர்னிங்க் பிளேடோன்ஸ் அட்லாண்டிள்’, தேடாலஸ் , தொகுப்பு- 68, ப. 189–228.
 • யாக்கோலியவிஜ், ராங்கோ (2005) Gvozdena vrata Atlantide , IK Beoknjiga பெல்கிரேட். ISBN 86-7694-042-8
 • யாக்கோலியவிஜ், ராங்கோ (2008) Atlantida u Srbiji IK Pesic i sinovi பெல்கிரேட். ISBN 978-86-7540-091-2
 • ஜோர்டன், பி (1994). த அட்லாண்டிஸ் சிண்ட்ரோம் , ஸ்டிரவுட்: சட்டன் வெளியீடு. ISBN 0-7509-3518-9
 • கிங், டி. (1970). ஃபைண்டிங் அட்லாண்டிஸ்: எ ட்ரூ ஸ்டோரி ஆஃப் ஜீனியஸ், மேட்நஸ் அண்ட் ஏன் எக்ஸ்ட்ரா ஆர்டினரி க்வஸ்ட் ஃபார் எ லாஸ்ட் வேர்ல்டு. ஹார்மணி புக்ஸ், நியூ யார்க். ISBN 1-4000-4752-8
 • லூஸ், ஜே.வி (1982). எண்ட் ஆஃப் அட்லாண்டிஸ்: நியூ லைட் ஆண் ஏன் ஓல்ட் லெஜண்ட் , எஃப்ஸ்டாதியாடிஸ் குழு; கிரீஸ்
 • மார்டின், டி.ஹெச் [1841] (1981). டி.ஹெச் மார்டினில் உள்ள ‘டிஸர்டேஷன் சுர் ஐ’அட்லாண்டைட்’, Études sur le Timée de Platon , பாரிஸ்: லிப்ராய்ரி ஃபிளோசோஃபிக் ஜே. வ்ரின், ப. 257–332.
 • மார்கன், கே.ஏ (1998). 'டிசைனர் ஹிஸ்டரி: பிளேடோஸ் அட்லாண்டிஸ் ஸ்டோரி அண்ட் ஃபோர்த்- சென்சுவரி ஐடியாலஜி’, ஜர்ணல் ஆஃப் ஹெலனிக் ஸ்டடீஸ் தொகுப்பு. 118, ப. 101–118.
 • மக், ஓடோ ஹென்ரிச், த சீக்ரெட் ஆஃப் அட்லாண்டிஸ் , மொழிப்பெயர்ப்பு செய்தது ஃப்ரெட் பிரேட்லி ஆஃப் ஆலஸ் உபர் அட்லாண்டிஸ் (Econ Verlag GmbH, Düsseldorf-Wien, 1976), டைம்ஸ் புக்ஸ், எ டிவிஷன் ஆஃப் குவாட்ராங்கில்/த நியூயார்க் டைம்ஸ் புக் கோ,. இங்க்., த்ரீ பார்க் அவென்யூ, நியூயார்க், என்.ஒய். 10016, 1978
 • நெசில்ராத், ஹெச்.ஜி (1998). 'தியோபாம்பஸ் மெரோபிஸ் அண்ட் பிளேடோன்: Nachahmung und Parodie', Göttinger Forum für Altertumswissenschaft , தொகுப்பு- 1, ப. 1–8.
 • நெசில்ராத், ஹெச்.ஜி (2001a). 'Atlantes und Atlantioi: Von Platon zu Dionysios Skytobrachion', ஃபிலொலோகஸ் , தொகுப்பு. 145, ப. 34–38.
 • நெசில்ராத், ஹெச்.ஜி (2001b). 'Atlantis auf ägyptischen Stelen? Der Philosoph Krantor als Epigraphiker', Zeitschrift für Papyrologie und Epigraphik , தொகுப்பு. 135, ப. 33–35.
 • நெசில்ராத், ஹெச்.ஜி (2002). Platon und die Erfindung von Atlantis , München/Leipzig: KG Saur Verlag. ISBN 3-598-77560-1
 • நெசில்ராத், ஹெச்.ஜி (2005). 'வேர் த லார்ட் ஆஃப் த சீ கிராண்ட்ஸ் பெசேஜ் டு சைலர்ஸ் த்ரூ த டீப் – புளூ மியர் நோ மோர்: த கிரீக்ஸ் அண்ட் த வெஸ்டர்ன் சீஸ்', கிரீஸ் & ரோம் , தொகுப்பு. 52, ப. 153–171.
 • ஃபிலிப்ஸ், ஈ.டி (1968). 'ஹிஸ்டோரிகல் எலிமண்ட்ஸ் இன் த மித் ஆஃப் அட்லாண்டிஸ்'. யூஃப்ரோசைன் , தொகுப்பு-2, ப. 3–38
 • ராமேஜ், ஈ.எஸ் (1978). அட்லாண்டிஸ்: ஃபேக்ட் ஆர் ஃபிக்ஷன்? புளூமிங்டன்: இண்டியானா யூனிவர்சிடி பிரஸ். ISBN 0-253-10482-3
 • செட்டிகாஸ்ட், எம். (1987 பிலாட்டோ ப்ரீஹிஸ்டோரியன்: 10,000 டூ 5000 பி.சி இன் மித் அண்ட் ஆர்கியோலோஜி , கேம்ப்ரிட்ஜ், MA, ரோடண்பர்க் பிரஸ்
 • ஸ்பென்ஸ், எஸ் [1926] (2003). த ஹிஸ்டரி ஆஃப் அட்லாண்டிஸ் , மினியோலா, NY: டோவர் வெளியீடுகள். ISBN 0-486-42710-2
 • Stiebing, William H., Jr. (1984). Ancient Astronauts, Cosmic Collisions and Other Popular Theories about Man's Past. Amherst, New York: Prometheus Books. ISBN 0-87975-285-8. .
 • Szlezák, TA (1993). 'Atlantis und Troia, Platon und Homer: Bemerkungen zum Wahrheitsanspruch des Atlantis-Mythos', ஸ்டடியா ட்ரோய்கா , தொகுப்பு - 3, ப. 233–237.
 • விடால்-நாக்வேட், பி (1986). 'ஏதென்ஸ் அண்ட் அட்லாண்டிஸ்: ஸ்ட்ரக்சர் அண்ட் மீனிங் ஆஃப் எ பிளேடோனிக் மித், இன் P விடால்-நாகுவெட், த பிளேக் ஹண்டர் , பால்டிமோர்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுணிவர்சிடி பிரஸ் ப. 263–284. ISBN 0-8018-7450-5
 • வில்சன், கோலின் (1996). ஃபிரம் அட்லாண்டிஸ் டு த ஸ்ஃபிண்க்ஸ் ISBN 1-85227-526-X
 • சாங்கர், ஈ (1993). த ஃபிளட் ஃபிரம் ஹெவன்: டெசிஃபரிங்க் த அட்லாண்டிஸ் லெஜண்ட் , நியூ யார்க்: வில்லியம் மாரோ அண்ட் கம்பெனி ISBN 0-688-11350-8
 • சீரோவ், நிகோலாய் எஃப்., அட்லாண்டிஸ் – அட்லாண்டோலோஜி பேசிக் பிராப்லம்ஸ் , டேவிட் விர்ஸ்கியால் ரஷியனில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது, பிராக்ரஸ் பப்ளிஷர்ஸ், மாஸ்கோ, 1970.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்லாண்டிஸ்&oldid=2010888" இருந்து மீள்விக்கப்பட்டது