பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடல் பகுதிகளில் சர்வதேச உரிமைகள்

பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி அல்லது பொருளாதாரத் தனியுரிமை வலயம் (ஆங்கிலத்தில் exclusive economic zone) என்பது ஓர் நாடு, கடலை ஆய்வு செய்வது குறித்தும், காற்று மற்றும் நீரிலிருந்து வடிக்கப்படும் மின்சாரம் உள்ளிட்ட பல கடல் சார் வளங்களைப் பயன்படுத்துவது குறித்தும் பெறும் சிறப்பு உரிமைகளை வரையறுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் பரிந்துரைக்கும், கடல் மண்டலம்/பகுதி ஆகும். [1] இப்பகுதி கரையோர அடிக்கோட்டிலிருந்து வெளியே 200 கடல் மைல்கள் வரை நீளும். பெருவழக்கில் இப்பகுதி கண்டத் திட்டையும் உள்ளடக்கியதாகவும் வழங்கப்படுகின்றபோதும் இது பிராந்தியக் கடலையோ, 200 கடல் மைல்களுக்கப்பாலுள்ள கண்டத் திட்டையோ உள்ளடக்கியதன்று. பிராந்தியக் கடல் பகுதியில் ஒரு நாட்டிற்கு முழு இறைமை உண்டு, ஆனால் பொருளாதாரத் தனியுரிமைப் பகுதியிலோ கடற்பரப்பிற்குக் கீழுள்ளவற்றிற்கான இறைமை உரிமை மட்டுமே கடற்கரையோர நாட்டிற்கு வழங்கப்படும் . இப்பகுதியின் கடற்பரப்பு பன்னாட்டு நீர்ப்பரப்பாகவே கருதப்படும்.[2]

விளக்கம்[தொகு]

உலகின் பொருளாதாரத் தனியுரிமைப் பகுதிகள் கருநீலநிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன

பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரத் தனியுரிமை பகுதி, கரையோர அடிக்கோட்டில் இருந்து 200 கடல் மைல்கள் (370 கி.மீ) வரை நீண்டிருக்கும். இரு நாடுகளின் தனியுரிமை பகுதிகள் மேற்குவிந்து கவிந்திருக்கும் தருவாயில் இவ்விதி விலக்கப்படும்; அதாவது இரு நாட்டின் கரையோர அடிக்கோடுகளும் 400 கடல் மைல்களுக்கும்(740 கி.மீ) குறைவான இடைவெளியில் அமைந்திருக்கும் சூழல். மேற்குவிப்பு நிகழும்போது வழக்கிற்கான கடல் எல்லை, தொடர்புடைய இரு நாடுகளையும் பொருத்து அமைக்கப்படும்[3] பொதுவாக, மேற்குவிப்புப் பகுதியுள் அமையும் எந்த இடமும் அதன் அருகாமையில் உள்ள நாட்டையே சாரும்.[4]

பரப்பு வாரியான தரவரிசை[தொகு]

அன்டார்டிகா தவிர்த்த, இறைமை தாங்கிய நாடுகளுள் அடங்கிய சார்பு மண்டலங்கள் (குடியேற்றமில்லா பகுதிகள் உட்பட), பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி + மொத்த உள்நாட்டு பரப்பு (மொ.உ.ப.) என்றறியப்படும் பொருளாதார தனியுரிமை கூடுதல் பகுதியையும் இப்பட்டியல் உள்ளடக்கியது.

நாடு பொ.த.ப கி.மீ2[5] திட்டு கி.மீ2 பொ.த.ப+மொ.உ.ப. கி.மீ2
 ஐக்கிய அமெரிக்கா 11,351,000 2,193,526 21,814,306
 பிரான்சு 11,035,000 389,422 11,655,724
 ஆத்திரேலியா 8,505,348 2,194,008 16,197,464
 உருசியா 7,566,673 3,817,843 24,664,915
 ஐக்கிய இராச்சியம் 6,805,586 722,891 7,048,486
 இந்தோனேசியா 6,159,032 2,039,381 8,063,601
 கனடா 5,599,077 2,644,795 15,607,077
 சப்பான் 4,479,388 454,976 4,857,318
 நியூசிலாந்து 4,083,744 277,610 4,352,424
 சீனா 2,287,969 831,340 13,520,487
 சிலி 3,681,989 252,947 4,431,381
 பிரேசில் 3,660,955 774,563 12,175,832
 கிரிபட்டி 3,441,810 7,523 3,442,536
 மெக்சிக்கோ 3,269,386 419,102 5,141,968
 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 2,996,419 19,403 2,997,121
 டென்மார்க் 2,551,238 495,657 4,761,811
 பப்புவா நியூ கினி 2,402,288 191,256 2,865,128
 நோர்வே 2,385,178 434,020 2,770,404
 இந்தியா 2,305,143 402,996 5,592,406
 மார்சல் தீவுகள் 1,990,530 18,411 1,990,711
 போர்த்துகல் 1,727,408 92,090 3,969,498
 பிலிப்பீன்சு 1,590,780 272,921 1,890,780
 சொலமன் தீவுகள் 1,589,477 36,282 1,618,373
 தென்னாப்பிரிக்கா 1,535,538 156,337 2,756,575
 சீசெல்சு 1,336,559 39,063 1,337,014
 மொரிசியசு 1,284,997 29,061 1,287,037
 பிஜி 1,282,978 47,705 1,301,250
 மடகாசுகர் 1,225,259 101,505 1,812,300
 அர்கெந்தீனா 1,159,063 856,346 3,939,463
 எக்குவடோர் 1,077,231 41,034 1,333,600
 எசுப்பானியா 1,039,233 77,920 1,545,225
 மாலைத்தீவுகள் 923,322 34,538 923,622
 பெரு 906,454 82,000 2,191,670
 சோமாலியா 825,052 55,895 1,462,709
 கொலம்பியா 808,158 53,691 1,949,906
 கேப் வர்டி 800,561 5,591 804,594
 ஐசுலாந்து 751,345 108,015 854,345
 துவாலு 749,790 3,575 749,816
 வனுவாட்டு 663,251 11,483 675,440
 தொங்கா 659,558 8,517 660,305
 பஹமாஸ் 654,715 106,323 668,658
 பலாவு 603,978 2,837 604,437
 மொசாம்பிக் 578,986 94,212 1,380,576
 மொரோக்கோ 575,230 115,157 1,287,780
 கோஸ்ட்டா ரிக்கா 574,725 19,585 625,825
 நமீபியா 564,748 86,698 1,388,864
 யேமன் 552,669 59,229 1,080,637
 இத்தாலி 541,915 116,834 843,251
 ஓமான் 533,180 59,071 842,680
 மியான்மர் 532,775 220,332 1,209,353
 இலங்கை 532,619 32,453 598,229
 அங்கோலா 518,433 48,092 1,765,133
 கிரேக்க நாடு 505,572 81,451 637,529
 தென் கொரியா 475,469 292,522 575,469
 வெனிசுவேலா 471,507 98,500 1,387,950
 வியட்நாம் 417,663 365,198 748,875
 அயர்லாந்து 410,310 139,935 480,583
 லிபியா 351,589 64,763 2,111,129
 கியூபா 350,751 61,525 460,637
 பனாமா 335,646 53,404 411,163
 மலேசியா 334,671 323,412 665,474
 நவூரு 308,480 41 308,501
 எக்குவடோரியல் கினி 303,509 7,820 331,560
 தாய்லாந்து 299,397 230,063 812,517
 எகிப்து 263,451 61,591 1,265,451
 துருக்கி 261,654 56,093 1,045,216
 ஜமேக்கா 258,137 9,802 269,128
 டொமினிக்கன் குடியரசு 255,898 10,738 304,569
 லைபீரியா 249,734 17,715 361,103
 ஒண்டுராசு 249,542 68,718 362,034
 தன்சானியா 241,888 25,611 1,186,975
 பாக்கித்தான் 235,999 51,383 1,117,911
 கானா 235,349 22,502 473,888
 சவூதி அரேபியா 228,633 107,249 2,378,323
 நைஜீரியா 217,313 42,285 1,141,081
 சியேரா லியோனி 215,611 28,625 287,351
 காபொன் 202,790 35,020 470,458
 பார்படோசு 186,898 426 187,328
 ஐவரி கோஸ்ட் 176,254 10,175 498,717
 ஈரான் 168,718 118,693 1,797,468
 மூரித்தானியா 165,338 31,662 1,190,858
 கொமொரோசு 163,752 1,526 165,987
 சுவீடன் 160,885 154,604 602,255
 செனிகல் 158,861 23,092 355,583
 நெதர்லாந்து 154,011 77,246 192,345
 உக்ரைன் 147,318 79,142 750,818
 உருகுவை 142,166 75,327 318,381
 கயானா 137,765 50,578 352,734
 வட கொரியா 132,826 54,566 253,364
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 131,397 1,902 132,361
 சமோவா 127,950 2,087 130,781
 சுரிநாம் 127,772 53,631 291,592
 எயிட்டி 126,760 6,683 154,510
 அல்ஜீரியா 126,353 9,985 2,508,094
 நிக்கராகுவா 123,881 70,874 254,254
 கினி-பிசாவு 123,725 39,339 159,850
 கென்யா 116,942 11,073 697,309
 குவாத்தமாலா 114,170 14,422 223,059
 அன்டிகுவா பர்புடா 110,089 4,128 110,531
 தூனிசியா 101,857 67,126 265,467
 சைப்பிரசு 98,707 4,042 107,958
 எல் சல்வடோர 90,962 16,852 112,003
 பின்லாந்து 87,171 85,109 425,590
 வங்காளதேசம் 86,392 66,438 230,390
 சீனக் குடியரசு 83,231 43,016 119,419
 எரித்திரியா 77,728 61,817 195,328
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 74,199 25,284 79,329
 கிழக்குத் திமோர் 70,326 25,648 85,200
 சூடான் 68,148 19,827 1,954,216
 கம்போடியா 62,515 62,515 243,550
 கினியா 59,426 44,755 305,283
 குரோவாசியா 59,032 50,277 115,626
 ஐக்கிய அரபு அமீரகம் 58,218 57,474 141,818
 செருமனி 57,485 57,485 414,599
 மால்ட்டா 54,823 5,301 55,139
 எசுத்தோனியா 36,992 36,992 82,219
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 36,302 1,561 36,691
 பெலீசு 35,351 13,178 58,317
 பல்கேரியா 34,307 10,426 145,186
 பெனின் 33,221 2,721 145,843
 கத்தார் 31,590 31,590 43,176
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 31,017 7,982 373,017
 போலந்து 29,797 29,797 342,482
 டொமினிக்கா 28,985 659 29,736
 லாத்வியா 28,452 27,772 93,011
 கிரெனடா 27,426 2,237 27,770
 இசுரேல் 26,352 3,745 48,424
 உருமேனியா 23,627 19,303 262,018
 கம்பியா 23,112 5,581 34,407
 சியார்சியா 21,946 3,243 91,646
 லெபனான் 19,516 1,067 29,968
 கமரூன் 16,547 11,420 491,989
 செயிண்ட். லூசியா 15,617 544 16,156
 அல்பேனியா 13,691 6,979 42,439
 டோகோ 12,045 1,265 68,830
 குவைத் 11,026 11,026 28,844
 சிரியா 10,503 1,085 195,683
 பகுரைன் 10,225 10,225 10,975
 புரூணை 10,090 8,509 15,855
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 9,974 653 10,235
 மொண்டெனேகுரோ 7,745 3,896 21,557
 சீபூத்தீ 7,459 3,187 30,659
 லித்துவேனியா 7,031 7,031 72,331
 பெல்ஜியம் 3,447 3,447 33,975
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 1,606 1,593 2,346,464
 சிங்கப்பூர் 1,067 1,067 1,772
 ஈராக் 771 771 439,088
 மொனாகோ 288 2 290
 பலத்தீன் 256 256 6,276
 சுலோவீனியா 220 220 20,493
 யோர்தான் 166 59 89,508
 பொசுனியா எர்செகோவினா 50 50 51,259
 கசக்கஸ்தான் 2,724,900
 மங்கோலியா 1,564,100
 சாட் 1,284,000
 நைஜர் 1,267,000
 மாலி 1,240,192
 எதியோப்பியா 1,104,300
 பொலிவியா 1,098,581
 சாம்பியா 752,612
 ஆப்கானித்தான் 652,090
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 622,984
 தெற்கு சூடான் 619,745
 போட்சுவானா 582,000
 துருக்மெனிஸ்தான் 488,100
 உஸ்பெகிஸ்தான் 447,400
 பரகுவை 406,752
 சிம்பாப்வே 390,757
 புர்க்கினா பாசோ 274,222
 உகாண்டா 241,038
 லாவோஸ் 236,800
 பெலருஸ் 207,600
 கிர்கிசுத்தான் 199,951
 நேபாளம் 147,181
 தஜிகிஸ்தான் 143,100
 மலாவி 118,484
 அங்கேரி 93,028
 அசர்பைஜான் 86,600
 ஆஸ்திரியா 83,871
 செக் குடியரசு 78,867
 செர்பியா 77,474
 சிலவாக்கியா 49,035
 சுவிட்சர்லாந்து 41,284
 பூட்டான் 38,394
 மல்தோவா 33,846
 லெசோத்தோ 30,355
 ஆர்மீனியா 29,743
 புருண்டி 27,834
 ருவாண்டா 26,338
 மாக்கடோனியக் குடியரசு 25,713
 சுவாசிலாந்து 17,364
 கொசோவோ[a] 10,887
 லக்சம்பர்க் 2,586
 அந்தோரா 468
 லீக்கின்ஸ்டைன் 160
 சான் மரீனோ 61
 வத்திக்கான் நகர் 0.44

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "(ஆங்கிலம்) பகுதி 5 - பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி, கட்டுரை 56". கடல் சட்டம். ஐக்கிய நாடுகள். பார்க்கப்பட்ட நாள் 2011-08-28.
  2. "(ஆங்கிலம்) பகுதி 5 - பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி, கட்டுரைகள் 55, 56". கடல் சட்டம். ஐக்கிய நாடுகள்.
  3. வில்லியம் ஆர். சுலோமேன்சன், 2006. (ஆங்கிலம்)பன்னாட்டு சட்டம் குறித்த அடிப்படை கண்ணோட்டம், 5-ஆவது பதிப்பு, பெல்மான்ட், கலிபோர்னியா: தாம்சன்-வாட்ஸ்வர்த், 294.
  4. ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்.
  5. "Seaaroundus.org". Archived from the original on 2006-12-29. பார்க்கப்பட்ட நாள் 2015-05-08.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Exclusive economic zones
என்பதில் ஊடகங்கள் உள்ளன.