இந்தியாவின் நிதி அமைச்சர் (Minister of Finance of India) இந்திய அரசின்நிதி அமைச்சின் தலைவர் ஆவார். அமைச்சரவையின் மூத்த அலுவலகம் ஒன்றின் தலைவரான நிதி அமைச்சர் அரசின் நிதிக்கொள்கைக்குப் பொறுப்பானவர் ஆவார். அத்துடன் இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பொது வரவு செலவுத் திட்டங்களின் வரைவாளரும் ஆவார். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, பல்வேறு அமைச்சரவைகளுக்கும், அரசு நிறுவனங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகளை இவரே தீர்மானிக்கிறார். இவருக்கு உதவியாக நிதி இராசாங்க அமைச்சர், துணை நிதி அமைச்சர் ஆகியோர் செயல்படுகின்றனர்.
விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது நிதி அமைச்சராக ஆர். கே. சண்முகம் செட்டியார் இருந்துள்ளார். இவரே இந்தியாவின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். தற்பொழுதைய நிதியமைச்சராக நிர்மலா சீத்தாராமன் பதவியில் உள்ளார்.
ஆர்.கே. சண்முகம் செட்டியார்.--பிறப்பு1892- இறப்பு 1953. விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சர்.
டி.டி. கிருஷ்ணமாச்சாரி.
சி. சுப்பிரமணியம். இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்.1998- ல் பாரத இரத்தினா பெற்றார்.
ஆர். வெங்கட்ராமன்.இந்திய குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
ப. சிதம்பரம். (பிறப்பு 16-9-1945 ----) சிவகங்கை மாவட்டம் காநாடுகாத்தான் ஊரில் பிறந்தார்.சட்டம் பயின்றவர்.இந்திய தேசிய காங்கிரசின் எம்.பி
நிர்மலா சீத்தாராமன். தற்போதைய நிதியமைச்சர். இந்திரா காந்திக்குப் பிறகு இவர் இரண்டாவது பெண் நிதித்துறை அமைச்சர் ஆவார். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் மதுரையில் 1959ஆம் ஆண்டு பிறந்தார். பாஜக மாநிலங்களவை உறுப்பினர்