சச்சிந்திர சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சச்சிந்திர சவுத்ரி

சச்சிந்திர சவுத்ரி (Sachindra Chaudhuri 24 பிப்பிரவரி 1903) என்பவர் சட்ட அறிஞர், அரசியல்வாதி, இந்திய நடுவணரசின் நிதி அமைச்சர் ஆவார். 1965 முதல் 1967 வரை லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி அமைச்சரவைகளில் நிதி அமைச்சராக இருந்தவர்.[1] பல குழுமங்களில் இயக்குநராகவும், பாரத ஸ்டேட் வங்கியின் போர்டு உறுப்பினராகவும், சட்டக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நடைபெற்ற போது இந்தியாவின் சார்பில் அங்கு சென்ற குழுவில் இடம் பெற்றார். ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்தார்.

கொல்கத்தாவில் பிறந்த சச்சிந்திர சவுத்ரி கொல்கத்தா ராணி பாபானி பள்ளியிலும், பிரசிடென்சி கல்லூரியிலும் பின்னர் கேம்பிரிச் பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்றார். சமசுகிருத, ஆங்கில  இலக்கியங்களைப் படிப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகம். ஐரோப்பா, அமெரிக்க போன்ற பல நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார்.

சான்றாவணம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சிந்திர_சவுத்ரி&oldid=3285720" இருந்து மீள்விக்கப்பட்டது