குந்தி நகரம்

ஆள்கூறுகள்: 23°04′52″N 85°16′39″E / 23.081026°N 85.277446°E / 23.081026; 85.277446
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குந்தி நகரம்
குந்தி நகரம் is located in சார்க்கண்டு
குந்தி நகரம்
குந்தி நகரம்
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் குந்தி நகரத்தின் அமைவிடம்
குந்தி நகரம் is located in இந்தியா
குந்தி நகரம்
குந்தி நகரம்
குந்தி நகரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°04′52″N 85°16′39″E / 23.081026°N 85.277446°E / 23.081026; 85.277446
நாடு இந்தியா
மாநிலம்ஜார்கண்ட்
மாவட்டம்குந்தி
ஏற்றம்
611 m (2,005 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்29,271
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
 • வட்டார மொழிமுண்டாரி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
835210
தொலைபேசி குறியீடு06528
வாகனப் பதிவுJH-23
இணையதளம்http://khunti.nic.in/

குந்தி நகரம் (Khunti), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் தெற்கில் அமைந்த குந்தி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். மாநிலத் தலைநகர் ராஞ்சிக்கு வடமேற்கே 75 கிலோ மீட்டர் தொலைவில் குந்தி நகரம் உள்ளது.

இந்நகரம் பிர்சா முண்டா இயக்கத்தின் மையமாக விளங்கியது. இந்தியாவின் சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் குந்தி நகரமும் ஒன்றாகும். இந்நகரம் மழைக் காடுகளால் சூழ்ந்தது. இந்நகராம் சூலை முதல் செப்டம்பர வரை அதிக மழைப்பொழிவு பெறுகிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 16 வார்டுகளும், 7245 வீடுகளும் கொண்ட குந்தி நகரத்தின் மக்கள் தொகை 36,390 ஆகும். அதில் ஆண்கள் 18,566 மற்றும் பெண்கள் 17,824 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.09% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 83.12% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 51.85%, இசுலாமியர் 10.53%, கிறித்தவர்கள் 20.32% மற்றும் பிறர் 2.31% ஆகவுள்ளனர். [1]

போக்குவரத்து[தொகு]

குந்தி நகரத்திலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் பிர்சா முண்டா வானூர்தி நிலையம் உள்ளது.

குந்தி பழங்குடியினர் நடனம்

பொருளாதாரம்[தொகு]

இந்நகரத்தின் பெரும்பாலான மக்கள் பழங்குடியினர் ஆவார். இம்மக்கள் மலைக்காடுகளில் சிறுதானியங்களை வேளாண்மை செய்து வருகின்றனர். உணவுத் தட்டுப்பாடு காரணமாக பல பழங்குடி மக்கள் குந்தி நகரத்தை விட்டு வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து செல்கின்றனர். இந்நகரம் சிவப்பு தாழ்வாரப் பகுதியில் உள்ளதால் மக்கள் போராளிகளுக்கு அஞ்சி வாழும் சூழ்நிலை உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Ranjan, Mukesh (22 March 2022). "This Jharkhand village becomes perfect example for 'Atmanirbhar Bharat' as it builds back its water wealth". The New Indian Express.


"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்தி_நகரம்&oldid=3515560" இலிருந்து மீள்விக்கப்பட்டது