காட்டாங்குளத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காட்டாங்குளத்தூர், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்[1] அமைந்த வளர்ந்து வரும் ஊராகும்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த இவ்வூர் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், காட்டாங்குளத்தூர் தொடருந்து நிலையம் ஆகும்.[2] காட்டாங்குளத்தூரில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

சென்னை புறநகர் இருப்புவழி சேவைகள், சென்னைக் கடற்கரை தொடருந்து நிலையத்திலிருந்து, காட்டாங்குளத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை உள்ளது. சென்னையிலிருந்து மறைமலை நகருக்குச் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகள் காட்டாங்குளத்தூர் வழியாக நின்று செல்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "CTM - Kattangulatur Railway Station". மூல முகவரியிலிருந்து 2021-03-03 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டாங்குளத்தூர்&oldid=3239288" இருந்து மீள்விக்கப்பட்டது