மதுரை வானூர்தி நிலையம்
| மதுரை விமான நிலையம் | |||
|---|---|---|---|
| IATA: none – ICAO:
|
|||
| சுருக்கமான விபரம் | |||
| வானூர்திநிலைய வகை | Public | ||
| உரிமையாளர்/இயக்குனர் | இந்திய விமான நிலைய ஆணையம் | ||
| சேவை புரிவது | மதுரை & தெற்கு தமிழ்நாடு | ||
| அமைவிடம் | மதுரை, தமிழ்நாடு, இந்தியா | ||
| உயரம் AMSL | 459 அடி / 140 மீ | ||
| ஆள்கூறுகள் | |||
| ஓடுபாதைகள் | |||
| திசை | நீளம் | மேற்பரப்பு | |
| அடி | மீ | ||
| 09/27 | 7,500 | 2,286 | நிலக்கீல் |
| புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2010 முதல் மார்ச் 2011 வரை) | |||
| உள்நாட்டு பயணிகள் இயக்கங்கள் | 388,574 [1] | ||
| உள்நாட்டு விமான இயக்கங்கள் | 5763 [2] | ||
மதுரை விமான நிலையம் தமிழ்நாட்டில் உள்ள சுங்கத்தீர்வு அந்தஸ்து பெற்ற வானூர்தி நிலையம் .இது மதுரை மற்றும் தென் தமிழ்நாட்டிற்கு தனது சேவையை வழங்குகிறது.[3] இந்த விமான நிலையம் மதுரை இரயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 12 கிமீ (7.5 மை) தொலைவில் நகருக்கு தெற்கே அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
இரண்டாம் உலகப் போரின் போது ராணுவ விமானதளமாக மதுரை விமானநிலையம் இருந்தது. பின், மதுரையில் இருந்த பிரிட்டன் அதிகாரிகளின் போக்குவரத்திற்கும், அவர்களுக்கு பத்திரிகைகள் எடுத்துவரவும் விமான போக்குவரத்து துவங்கியது. ராணுவ விமானதளமாக இருந்த மதுரை விமானநிலையம், 1960க்கு பின் உள்நாட்டு விமான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் அவ்வப்போது மதுரை வந்து செல்லும். பின்னர் சில ஆண்டுகளில், தினமும் மும்பையிலிருந்து சென்னை வழியாக மதுரை, மீண்டும் அதே மார்க்கமாக மும்பைக்கு விமானம் சென்றது. இடையில் தனியார் நிறுவனங்கள் சிறியரக விமானங்களை இயக்கி, தொடர முடியாமல் விட்டு விட்டன.
பயணிகள் முனையம் [தொகு]
129 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் 12 செப்டம்பர் 2010 அன்று தொடங்கப்பட்டது[4] 17,560 சதுர மீட்டர் அளவு கொண்ட இரண்டடுக்கு முனையத்தில் ஒரே நேரத்தில் 500 பயணிகளை கையாளும் திரண் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.[5] புதிய முனையத்தின் சில அம்சங்கள் : [6]
- 16 சோதனை கவுண்டர்கள்
- 3 சாதன வார்கள் (47 மீ ஒவ்வொன்றும்)
- 2 பேக்கேஜ்க்கான எக்ஸ்ரே ஸ்கேனர்
- பாதுகாப்பு சோதனை அலகுகள் = 1
- 3 விமான பாலம்
- மொத்தம் விமானம் நிற்க இடம் = 7
- 3 B737-800W/A320-200
- 2 ATR 72-500
- 1 B767-400
- 1 A310-300
விமான சேவைகள் மற்றும் இலக்குகள் [தொகு]
| விமான சேவைகள் | இலக்குகள் |
|---|---|
| ஜெட் ஏர்வேஸ் | சென்னை |
| ஸ்பைஸ் ஜெட் | சென்னை, டில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, விஜயவாடா |
| ஏர் இந்தியா | சென்னை, மும்பை, கொச்சி |
நிகழ்வுகள் [தொகு]
- மதுரைக்கு 1965ல் "டகோடா(டி.சி.,3)' ரக விமானம் சென்னையிலிருந்து வந்து சென்றது. அதில் 26 பேர் செல்லலாம். பின் 40 பேர் பயணம் செய்யும் "போக்கர் பிரண்ட்ஷிப்' ரக விமானம் மதுரை வந்தது.
- 1970 களில் மதுரை வந்த "ஆவ்ரோ' ரக விமானத்தில் 48 பேர் பயணம் செய்தனர். சென்னை-மதுரை- திருவனந்தபுரம் மற்றும் சென்னை-மதுரை-பெங்களூரு என இரு விமான சேவை நடந்தது.
- 1980க்கு பின் "போயிங் 737' ரக விமானம் மதுரை வந்தது. அதில் 147 பேர் பயணம் செய்ய வசதி இருந்தும், ரன்வே பலவீனமாக இருந்ததால், குறைந்த அளவு பயணிகளே அனுமதிக்கப்பட்டனர். அதன்பின், என்.இ.பி.சி., தனியார் நிறுவனம் "ஏ.டி.ஆர்.,' ரக விமானத்தை சென்னை- மதுரை போக்குவரத்திற்கு பயன்படுத்தியது.
- ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ் தனியார் நிறுவனம் "போயிங்' ரக விமானத்தில் மும்பை-மதுரை போக்குவரத்தை துவக்கியது. சில ஆண்டுகளுக்கு பின் இரு நிறுவனமும் போக்குவரத்தை ரத்து செய்தது.
- இந்திய விமான நிறுவனம் "ஏர்பஸ் 320' ரக விமானத்தை பயன்படுத்துகிறது. இதில் குறைந்தது 170 பயணிகள் செல்லலாம். தற்போது மதுரை வரும் சிறிய ரக விமானங்களுக்கு இடையே "ஏர்பஸ் 320 ' ரக விமானம் ஜாம்பவானாக உள்ளது.
- தனியாருக்கு அனுமதி அளித்ததும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏ.டி.ஆர்., ரக விமானத்துடன் மதுரையில் போக்குவரத்தை துவக்கியது. சென்னை-மதுரை மீண்டும் சென்னை என சேவையை துவக்கியது. பின், ஏர் டெக்கான் நிறுவனம் சென்னை-மதுரை-சென்னை, சென்னையிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடி என ஏ.டி.ஆர்., ரக விமான போக்குவரத்தை துவக்கியது.
வெளியிணைப்புக்கள் [தொகு]
•மதுரை வானூர்தி நிலையத்தின் இணையத்தளம்
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.aai.aero/traffic_news/mar2k11annex3.pdf
- ↑ http://www.aai.aero/traffic_news/mar2k11annex2.pdf
- ↑ "Customs facility for Madurai airport". The Hindu (Chennai, India). 2011-01-06. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article1037271.ece. Retrieved 2011-01-06.
- ↑ "Madurai Airport new terminal inauguration". The Hindu. 12 September 2010. http://www.thehindubusinessline.com/todays-paper/tp-logistics/article1003852.ece?ref=archive. Retrieved 4 February 2012.
- ↑ "Airports Authority of India". Aai.aero (2011-01-06). பார்த்த நாள் 2012-01-29.
- ↑ "Airports Authority of India". Aai.aero (2011-01-06). பார்த்த நாள் 2012-02-17.