பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம்
பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம் | |
---|---|
துவங்கியது | 1937 |
வகை | ஆன்மீக அமைப்பு |
தலைமையகம் | அபு மலை, ராஜஸ்தான், இந்தியா |
அலுவல் மொழிகள் | இந்தி, ஆங்கிலம் |
தொடங்குனர் | தாதா லேக்ராஜ் (1876–1969), "பிரம்மபாபா" என அழைக்கப்பட்டார் |
முக்கிய நபர்கள் | தாதி ஜானகி, தாதி இருதயமோகினி |
வலைத்தளம் | பன்னாட்டு , இந்தியா |
பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம் 1937-களில் பிரித்தானிய இந்தியாவில் தொடக்கப்பட்ட ஆன்மீக இயக்கமாகும்.[1][2][3] பிரம்ம குமாரிகள் இயக்கம் தாதா லேக்ராஜ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.[4][5] பின்னாளில் இவரை பிரம்ம பாபா என அழைத்தனர்
இந்த அமைப்பு இராஜ யோக தியானம், ஆத்மா மற்றும் பரமாத்மாவைப் (சீவ-பரமாத்மா) பற்றி போதிக்கின்றது. இது அனைத்து ஆத்மாக்களும் உயர்வான நிலையையும் நல்ல பண்புகளையும் கொண்டதாக வலியுறுத்துகின்றது.[6]
தொடக்க வரலாறு
[தொகு]பிரம்ம குமாரிகள் அமைப்பு ஆரம்பகாலத்தில் "ஓம் மண்டலி" என்ற பெயருடன் இந்தியாவின், அன்றைய சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டது.[7] இப்பெயர் இதன் பின்பற்றுனர்கள் தமது ஒவ்வொரு ஆன்மீக வெளிப்படுத்தலின் போதும் "ஓம் சாந்தி" என சங்கல்பம் எடுத்துக் கொள்வதால் ஏற்பட்டது. இது பகவத் கீதையுடன் தொடர்புபட்ட சங்கல்பமாகும்.[5] இதை தொடங்கின தாதா லேக்ராஜ் (ஓம் பாபா என அழைக்கப்பட்டவர்), நகை வணிகத்தில் ஈடுபட்ட சமூகத்தில் பெரிதும் மதிக்கப்பட்ட ஒருவராவார்.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Summary of movement. censamm.org
- ↑ What Does Brahma Kumaris Mean? brahmakumaris.org
- ↑ Monier-Williams, Monier (1899) Sanskrit Dictionary. Clarendon Press, Oxford. p. 292
- ↑ Melton, J. Gordon, ed. (2002). Religions of the world: a comprehensive encyclopedia of beliefs and practices. Santa Barbara, Calif.: ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-223-3.
- ↑ 5.0 5.1 Tomlinson, Matt; Smith, Wendy; Manderson, Lenore (2012). "4. Brahma Kumaris: Purity and the Globalization of Faith". Flows of Faith: Religious Reach and Community in Asia and Pacific. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-2931-5.
- ↑ Religions of the World. A Comprehensive Encyclopedia of Beliefs and Practices. J Gordon Melton and Martin Baumann. Facts on File Inc, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-5458-4
- ↑ Matt Tomlinson; Wendy Smith; Lenore Manderson (2012). "4. Brahma Kumaris: Purity and the Globalization of Faith". Flows of Faith: Religious Reach and Community in Asia and Pacific. Springer Science + Business Media. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-2931-5.
{{cite book}}
: Missing|author1=
(help) - ↑ Matt Tomlinson; Wendy Smith; Lenore Manderson (2012). "4. Brahma Kumaris: Purity and the Globalization of Faith". Flows of Faith: Religious Reach and Community in Asia and Pacific. Springer Science + Business Media. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-2931-5.
{{cite book}}
: Missing|author1=
(help)