முதல் நூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் தோன்றிய நூல்களை அதன் உருவாக்கத்தைக் கருத்தில் கொண்டு இரண்டு வகையாகப் பார்த்தனர். [1] [2] நூலாசிரியர் தாமே ஆய்ந்து கண்ட உண்மைகளைக் கூறும் நூல் முதல்நூல். முதல்நூலைப் பின்பற்றித் தன் கருத்துகளையும் இணைத்து எழுதப்படும் நூல் வழிநூல்.

முதல்நூல்

முதல்நூல் பற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்தை நன்னூல் வழிமொழிகிறது.[3] [4]

அறிவு விளக்கம் பெற்றவன் முனைவன். [5] ஆள்வினை [6], ஊழ்வினை [7], சூழ்வினை [8] எனப்பட்ட வினைகளில் சூழ்வினை இல்லாதவன் இந்த முனைவன். இப்படிப்பட்ட முனைவன் தன் அறிவுக் கண்ணால் கண்ட உண்மைகளை வெளிப்படுத்தும் நூல் முதல்.

நன்னூலை நோக்கத் தொல்காப்பியம் ஒரு முதல்நூல்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
    உரை படு நூல்தாம் இரு வகை இயல
    முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)
  2. முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும் உரை (நன்னூல் 5)
  3. வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
    முனைவன் கண்டது முதல் நூல் ஆகும் (தொல்காப்பியம் 3-640)
  4. அவற்றுள்,
    வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
    முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் (நன்னூல் 6)
  5. ஆராய்ந்து கண்ட உண்மைகளைத் தந்து பெறும் பட்டம் முனைவர் பட்டம்
  6. முயற்சி
  7. தலைவிதி
  8. சூழ்ச்சி செய்து ஏமாற்றும் வினை
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்_நூல்&oldid=1872090" இலிருந்து மீள்விக்கப்பட்டது