உள்ளடக்கத்துக்குச் செல்

பாரிட் சூலோங் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரிட் சூலோங் (P147)
மலேசிய மக்களவைத் தொகுதி
 ஜொகூர்
Parit Sulong (P147)
Federal Constituency in Johor
பாரிட் சூலோங் மக்களவைத் தொகுதி
(P147 Parit Sulong)
மாவட்டம்பத்து பகாட் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை79,484 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிபாரிட் சூலோங் தொகுதி
முக்கிய நகரங்கள்பாரிட் சூலோங்; பத்து பகாட்; பண்டார் பெங்காராம்
பரப்பளவு468 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி      பாரிசான் நேசனல்
மக்களவை உறுப்பினர்நொராயினி அகமட்
(Noraini Ahmad)
மக்கள் தொகை82,399 (2020) [4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

பாரிட் சூலோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Parit Sulong; ஆங்கிலம்: Parit Sulong Federal Constituency; சீனம்: 巴力士隆国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் பத்து பகாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P147) ஆகும்.[5]

பாரிட் சூலோங் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து பாரிட் சூலோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

பத்து பகாட் மாவட்டம்

[தொகு]

பத்து பகாட் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைப்பட்டணமும் முக்கிய நிர்வாக மையமுமான பத்து பகாட் நகரம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 239 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 50 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 52 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 100 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.

இந்த மாவட்டத்திற்கு வடமேற்கில் மூவார் மாவட்டம்; தென்கிழக்கில் குளுவாங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; ஆக வடக்கில் சிகாமட் மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன.

பத்து பகாட் நகரம், அண்மையில் பண்டார் பெங்காராம் (Bandar Penggaram) எனும் புதுப் பெயரைப் பெற்றது. இந்த நகரம் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இப்போது ஜொகூர் பாருவுக்கு அடுத்த நிலையில் ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது.

பாரிட் சூலோங் மக்களவைத் தொகுதி

[தொகு]




2022-இல் பாரிட் சூலோங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[7]

  மலாயர் (81.2%)
  சீனர் (18.2%)
  இதர இனத்தவர் (0.2%)
பாரிட் சூலோங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பாரிட் சூலோங் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை P121 1986–1990 சரிபா டோரா சையட் முகமட்
(Shariffah Dorah Syed Mohammed)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
8-ஆவது மக்களவை 1990–1995 ருகாயினி அகமட்
(Ruhanie Ahmad)
9-ஆவது மக்களவை P131 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P147 2004–2008 சையட் ஊட் சையட் எட்ரோஸ்
(Syed Hood Syed Edros)
12-ஆவது மக்களவை 2008–2013 நொராயினி அகமட்
(Noraini Ahmad)
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

பாரிட் சூலோங் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
நொராயினி அகமட்
(Noraini Ahmad)
பாரிசான் நேசனல்25,74040.898.30
அப்துல் கரீம் தெராமான்
(Abdul Karim Deraman)
பெரிக்காத்தான் நேசனல்23,71937.6837.68 Increase
முகமட் பைசல் டோலா
(Mohd Faizal Dollah)
பாக்காத்தான் அரப்பான்13,49521.4415.01
மொத்தம்62,954100.00
செல்லுபடியான வாக்குகள்62,95498.83
செல்லாத/வெற்று வாக்குகள்7431.17
மொத்த வாக்குகள்63,697100.00
பதிவான வாக்குகள்79,48479.205.99 Increase
      பாரிசான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]