உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சோங் பியாய் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சோங் பியாய் (P165)
மலேசிய மக்களவைத் தொகுதி
 ஜொகூர்
Tanjung Piai (P165)
Federal Constituency in Johor
தஞ்சோங் பியாய் மக்களவைத் தொகுதி
(P165 Tanjung Piai)
மாவட்டம்ஜொகூர் பாரு மாவட்டம்; பொந்தியான் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை70,679 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிதஞ்சோங் பியாய் தொகுதி
முக்கிய நகரங்கள்தஞ்சோங் பியாய்; பொந்தியான் கிச்சில்; குக்குப் தீவு; குக்குப், பெக்கான் நானாஸ்
பரப்பளவு486 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2003
கட்சி      பாரிசான் நேசனல்
மக்களவை உறுப்பினர்வீ செக் செங்
(Wee Jeck Seng)
மக்கள் தொகை91,540 (2020)[4][5]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2004
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

தஞ்சோங் பியாய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tanjung Piai; ஆங்கிலம்: Tanjung Piai Federal Constituency; சீனம்: 丹绒比艾国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டம்; பொந்தியான் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P165) ஆகும்.[6]

தஞ்சோங் பியாய் மக்களவைத் தொகுதி 2004-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2004-ஆம் ஆண்டில் இருந்து தஞ்சோங் பியாய் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]

தஞ்சோங் பியாய்

[தொகு]

தஞ்சோங் பியாய் என்பது ஜொகூர் மாநிலத்தின் பொந்தியான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று இடம் ஆகும். தீபகற்ப மலேசியாவின் தென்முனையில் ஐரோப்பா; ஆசியா கண்டங்களை இணைக்கும் ஐரோவாசியாவின் (Eurasia) தென்முனை நிலப் பகுதி இந்த இடத்தில்தான் அமைந்து உள்ளது.

தஞ்சோங் பியாய் துறைமுகப் பட்டினம் பொந்தியான் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சோங் பியாய் கடலோரச் சதுப்புநிலம், அனைத்துலக அளவில் ஒரு முக்கியமான ராம்சார் தளமாகும். ராம்சார் ஒப்பந்தத்தின் கீழ், சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்பை உறுதிப்படுத்த இந்த இடம் அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.[8]

காட்டு மரங்களால் கட்டப்பட்ட படகுத் துறைகள்; அரிதான கடற்கரையோரச் சூழல்; மற்றும் மாசு மறுவற்றச் சதுப்புநிலக் காடுகளால் சூழப்பட்டுள்ள இந்த இடம் தீபகற்ப மலேசியாவின் சொர்க்க வாசல் என்றும் புகழப் படுகிறது.

தஞ்சோங் பியாய் மக்களவைத் தொகுதி

[தொகு]




தஞ்சோங் பியாய் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[9]

  மலாயர் (58.5%)
  சீனர் (40.2%)
  இதர இனத்தவர் (0.3%)





தஞ்சோங் பியாய் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (50.74%)
  பெண் (49.26%)

தஞ்சோங் பியாய் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (5.84%)
  21-29 (20.39%)
  30-39 (20.86%)
  40-49 (17.21%)
  50-59 (15.29%)
  60-69 (11.39%)
  70-79 (6.22%)
  80-89 (2.27%)
  + 90 (0.54%)
தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
தஞ்சோங் பியாய் தொகுதி 2003-ஆம் ஆண்டில்
பொந்தியான் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
தஞ்சோங் பியாய் தொகுதி
11-ஆவது மக்களவை P165 2004–2008 ஓங் கா திங்
(Ong Ka Ting)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
12-ஆவது மக்களவை 2008–2013 வீ செக் செங்
(Wee Jeck Seng)
13-ஆவது மக்களவை 2013–2018
தஞ்சோங் பியாய் தொகுதி
14-ஆவது மக்களவை P165 2018–2019 மொகமட் பாரிட் ரபிக்
(Mohamed Farid Rafik)
பாக்காத்தான் அரப்பான்
(பெர்சத்து)
2019–2022 வீ செக் செங்
(Wee Jeck Seng)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
வீ செக் செங்
(Wee Jeck Seng)
பாரிசான் நேசனல்23,59343.2222.38
லிம் வெய் ஜியெட்
(Lim Wei Jiet)
மூடா17,23331.5731.57 Increase
நஜ்வா அலிமா அலிம்
(Najwah Halimah Alim)
பெரிக்காத்தான் நேசனல்13,76225.2125.21 Increase
மொத்தம்54,588100.00
செல்லுபடியான வாக்குகள்54,58899.06
செல்லாத/வெற்று வாக்குகள்5180.94
மொத்த வாக்குகள்55,106100.00
பதிவான வாக்குகள்70,67977.232.80 Increase
Majority6,36011.6527.21
      பாரிசான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "PRU-15: Parlimen Tebrau pengundi paling ramai di Johor [METROTV]". 27 October 2022.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 30 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  8. "Tanjung Piai Ramsar site draws international nature lovers". youth.bernama.com. பார்க்கப்பட்ட நாள் 9 June 2021.
  9. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  10. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]