உள்ளடக்கத்துக்குச் செல்

பூலாய் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூலாய் (P161)
மலேசிய மக்களவைத் தொகுதி
 ஜொகூர்
Pulai (P161)
Federal Constituency in Johor
பூலாய் மக்களவைத் தொகுதி
(P161 Pulai)
மாவட்டம்ஜொகூர் பாரு மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை166,653 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிபூலாய் தொகுதி
முக்கிய நகரங்கள்கங்கார் பூலாய்; இசுகந்தர் புத்திரி; கெலாங் பாத்தா; முத்தியாரா ரினி; தஞ்சோங் பெலப்பாஸ்
பரப்பளவு73 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்சுகாய்சான் காயாட்
(Suhaizan Kayat)
மக்கள் தொகை291,876 (2020)[4][5]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

பூலாய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pulai; ஆங்கிலம்: Pulai Federal Constituency; சீனம்: 埔来国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P161) ஆகும்.[6]

பூலாய் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து பூலாய் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]

இசுகந்தர் மலேசியா

[தொகு]

பூலாய் மக்களவைத் தொகுதி என்பது ஜொகூர் மாநிலத்தில் அமைந்துள்ள இசுகந்தர் மலேசியா வளர்ச்சி மண்டலத்தின் ஒரு தொகுதி ஆகும். இசுகந்தர் மலேசியா, தெற்கு ஜொகூர் பொருளாதார வளர்ச்சி மண்டலம் (South Johor Economic Region) (SJER) என்றும் அழைக்கப் படுகிறது.[8]

2006 நவம்பர் 6-ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, மலேசியாவின் முதல் பொருளாதார வளர்ச்சி மண்டலம் ஆகும். பல பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்குக் கணிசமான அளவிற்கு வளர்ச்சியை வழங்கும் வகையில் இந்தப் பொருளாதார மேம்பாட்டு மண்டலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இசுகந்தர் மலேசியா சுமார் 2,217 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மண்டலத்தில் ஜொகூர் பாரு மாநகரம், தெற்கு பொந்தியான், கூலாய், பாசிர் கூடாங், இசுகந்தர் புத்திரி ஆகிய பகுதிகள் உள்ளன.[9][10]

பூலாய் மக்களவைத் தொகுதி

[தொகு]




பூலாய் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[11]

  மலாயர் (44.5%)
  சீனர் (40.2%)
  இதர இனத்தவர் (3.1%)





பூலாய் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (50.31%)
  பெண் (49.69%)

பூலாய் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (6.89%)
  21-29 (21.11%)
  30-39 (20.66%)
  40-49 (19.32%)
  50-59 (14.7%)
  60-69 (10.32%)
  70-79 (5.01%)
  80-89 (1.5%)
  + 90 (0.49%)
பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பூலாய் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P113 1974–1978 முகமட் ரகுமாட்
(Mohamed Rahmat)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P131 1986–1990
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P142 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004 அப்துல் காதிர் அனுவார்
(Abdul Kadir Annuar)
11-ஆவது மக்களவை P161 2004–2008 நூர் ஜசுலான் மொகமட்
(Nur Jazlan Mohamed)
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022 சலாவுதீன் அயூப்
(Salahuddin Ayub)
பாக்காத்தான் அரப்பான்
(அமாணா)
15-ஆவது மக்களவை 2022–2023
2023–தற்போது வரையில் சுகாய்சான் காயாட்
(Suhaizan Kayat)

தேர்தல் முடிவுகள்

[தொகு]

இடைதேர்தல் 2023

[தொகு]
பூலாய் இடைதேர்தல் 2023
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
சுகாய்சான் காயாட்
(Suhaizan Kayat)
பாக்காத்தான் அரப்பான்48,28361.546.22 Increase
சுல்கிப்லி ஜபார்
(Zulkifli Jaafar)
பெரிக்காத்தான் நேசனல்29,64237.7820.15 Increase
சும்சுதீன் முகமட் பவுசி
(Samsudin Mohamad Fauzi)
சுயேச்சை5280.670.67 Increase
மொத்தம்78,453100.00
செல்லுபடியான வாக்குகள்78,45399.46
செல்லாத/வெற்று வாக்குகள்4290.54
மொத்த வாக்குகள்78,882100.00
பதிவான வாக்குகள்1,66,65347.3323.63
Majority18,64123.774.51
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [12]

பொதுத் தேர்தல் 2022

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
சலாவுதீன் அயூப்
(Salahuddin Ayub)
பாக்காத்தான் அரப்பான்64,90055.338.48
நூர் ஜசுலான் முகமட்
(Nur Jazlan Mohamed)
பாரிசான் நேசனல்31,72627.053.47
லோ காயோங்
(Loh Kah Yong)
பெரிக்காத்தான் நேசனல்20,67717.6317.63 Increase
மொத்தம்1,17,303100.00
செல்லுபடியான வாக்குகள்1,17,30399.06
செல்லாத/வெற்று வாக்குகள்1,1110.94
மொத்த வாக்குகள்1,18,414100.00
பதிவான வாக்குகள்1,65,31370.9611.96
Majority33,17428.285.01
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "PRU-15: Parlimen Tebrau pengundi paling ramai di Johor [METROTV]". 27 October 2022.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 28 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  8. "Iskandar Malaysia is an ambitious economic initiative which aims to develop a substantial and valuable growth corridor in Malaysia's Johor region, stretches over a designated region of 4,749 sq km – almost six-times the entire area of nearby neighbour Singapore". பார்க்கப்பட்ட நாள் 31 August 2022.
  9. Iskandar Regional Development Authority & Iskandar Malaysia Information Pack, 23 February 2007, Khazanah Nasional, pg 3, retrieved 3 March 2009
  10. "Iskandar Malaysia growth corridor doubles in size". பார்க்கப்பட்ட நாள் 22 February 2019.
  11. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  12. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.
  13. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூலாய்_மக்களவைத்_தொகுதி&oldid=4107802" இலிருந்து மீள்விக்கப்பட்டது