உள்ளடக்கத்துக்குச் செல்

லாபிஸ் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாபிஸ் (P142)
மலேசிய மக்களவை தொகுதி
 ஜொகூர்
Labis (P142)
Federal Constituency in Johor
லாபிஸ் மக்களவைத் தொகுதி
(P142 Labis)
மாவட்டம்சிகாமட் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை42,404 (2020)[1][2]
வாக்காளர் தொகுதிலாபிஸ் தொகுதி
முக்கிய நகரங்கள்லாபிசு; தெனாங்; சாஆ; பெக்கோக்
பரப்பளவு1,374 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்பாங் கோக் லியோங்
(Pang Hok Liong)
மக்கள் தொகை49,846 (2022)[4][5]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

லாபிஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Labis; ஆங்கிலம்: Labis Federal Constituency; சீனம்: 拉美士国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் சிகாமட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P142) ஆகும்.[6]

லாபிஸ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து லாபிஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]

லாபிஸ் நகரம்

[தொகு]

லாபிஸ் நகரம் ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். தீபகற்ப மலேசியாவின் பழைய வடக்கு-தெற்கு கூட்டரசு நெடுஞ்சாலை, லாபிஸ் நகரின் வழியாகச் செல்கிறது. சிங்கப்பூர்; ஜொகூர் பாரு மாநகரங்களுக்குப் பயணிப்பவர்கள் இந்த நகரைக் கடந்து செல்ல வேண்டும்.

மலேசியாவின் முதன்மைத் தொடருந்து சேவையான மலாயா தொடருந்து நிறுவனம், தெற்கில் இருக்கும் ஜொகூர் மாநிலத் தலைநகர் ஜொகூர் பாரு நகருடன் இந்த நகரத்தை இணைக்கின்றது.

முன்பு காலத்தில், கம்போங் பாயா மேரா (Kampung Paya Merah) என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமமாக லாபிஸ் இருந்தது. இங்கு அதிகமாகக் காணப்பட்ட நன்னீர் ஆமைகளில் இருந்து இந்த இடத்திற்கு லாபிஸ் என்று பெயர் வந்தது.

லாபிஸ் மக்களவை தொகுதி

[தொகு]




2022-இல் செகிஜாங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[8]

  மலாயர் (43.9%)
  சீனர் (39.2%)
  இதர இனத்தவர் (1.7%)
லாபிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
லாபிஸ் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P099 1974–1978 மூசா ஈத்தாம்
(Musa Hitam)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986 பகாரி அருண்
(Bahari Haron)
7-ஆவது மக்களவை P118 1986–1990¹ லிங் லியோங் சிக்
(Ling Liong Sik)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P128 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P142 2004–2008 சுவா சோய் லெக்
(Chua Soi Lek)
2008 காலி[9]
12-ஆவது மக்களவை 2008–2013 சுவா தி யோங்
(Chua Tee Yong)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022 பாங் கோக் லியோங்
(Pang Hok Liong)
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

லாபிஸ் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
பாங் கோக் லியோங்
(Pang Hok Liong)
பாக்காத்தான் அரப்பான்16,13346.435.74
சுவா தி யோங்
(Chua Tee Yong)
பாரிசான் நேசனல்13,30038.283.25
அல்வின் சாங் தெக் கியாம்
(Alvin Chang Teck Kiam)
பெரிக்காத்தான் நேசனல்5,31215.2915.29 Increase
மொத்தம்34,745100.00
செல்லுபடியான வாக்குகள்34,74598.51
செல்லாத/வெற்று வாக்குகள்5261.49
மொத்த வாக்குகள்35,271100.00
பதிவான வாக்குகள்49,84669.701.06
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "PRU-15: Parlimen Tebrau pengundi paling ramai di Johor [METROTV]". 27 October 2022.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 21 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  8. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  9. "Chua resigns after sex scandal". The Star Online (in ஆங்கிலம்). 2008-01-02. பார்க்கப்பட்ட நாள் 2019-12-30.
  10. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாபிஸ்_மக்களவைத்_தொகுதி&oldid=4107851" இலிருந்து மீள்விக்கப்பட்டது