பயனர் பேச்சு:கி.மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தகவல்சட்டம்: புதிய பகுதி
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 327: வரிசை 327:


ஊர்கள் பற்றிய கட்டுரையில் உள்ள தகவல்சட்டத்த்தில் உள்ள தகவல்களையும் தமிழில் தாருங்கள். உ+ம்: [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D&type=revision&diff=1990930&oldid=1990894]. நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 05:25, 1 சனவரி 2016 (UTC)
ஊர்கள் பற்றிய கட்டுரையில் உள்ள தகவல்சட்டத்த்தில் உள்ள தகவல்களையும் தமிழில் தாருங்கள். உ+ம்: [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D&type=revision&diff=1990930&oldid=1990894]. நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 05:25, 1 சனவரி 2016 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Science Barnstar Hires.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அறிவியல் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | அறிவியல் சார்ந்த கட்டுரைகளை அருமையாக உருவாக்கி விரிவாக்கி வரும் தங்களுக்கு விக்கிப்பீடியர்கள் சார்பாக இப்பதக்கம் --[[பயனர்:L.Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:L.Shriheeran|பேச்சு]]) 08:59, 2 சனவரி 2016 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#3|பதிகை]])</small>
|}

08:59, 2 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்


IUPAC பெயரீடு

IUPAC பெயரீட்டில் நேரேற்றக் கூற்றின் பெயருக்கும் ஒட்சியேற்ற எண்ணைக் குறிக்கும் அடைப்புக்கும் இடையே இடைவெளி வராது. வனேடியம்(II) புரோமைட்டில் செய்த திருத்தத்தைக் கவனிக்கவும். மேலும் "மூலக்கூற்று வாய்பாடுடன்" என்று எழுத வேண்டாம். மூலக்கூற்று வாய்பாட்டுடன் என்றெழுதுங்கள். --மதனாகரன் (பேச்சு) 13:49, 2 சூலை 2015 (UTC)[பதிலளி]

மதனாகரன் திருத்திக் கொள்கிறேன். நன்றி!--கி.மூர்த்தி 15:04, 2 சூலை 2015 (UTC)[பதிலளி]

மதனாகரன், வழிமாற்றுகளை வைத்திருப்பதில் நட்டமில்லை.--Kanags \உரையாடுக 21:18, 2 சூலை 2015 (UTC)[பதிலளி]

மதனாகரன், இவர் தனது பேச்சுப் பக்கத்தை பரணில் இடுவதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:58, 2 சூலை 2015 (UTC) Y ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 16:10, 2 சூலை 2015 (UTC)[பதிலளி]

சில ஆலோசனைகள்

டெக்கேன் கட்டுரையில் நான் செய்துள்ள இந்த மாற்றங்களைக் கவனியுங்கள். மேலும், வெளிப்புற இணைப்புகள் என்பதிலும் பார்க்க வெளி இணைப்புகள் என்பது கூடுதல் பொருத்தமாக உள்ளது. வெளி, புறம் இரண்டும் ஒரே கருத்துச் சொற்கள்.--Kanags \உரையாடுக 05:31, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

உதவி...

வணக்கம்! அரிமானம் எனும் கட்டுரையினை வாய்ப்பு கிடைக்கும்போது விரிவாக்கித் தருமாறு வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:55, 5 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:19, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]

வேதியியல் கட்டுரைகள்

வணக்கம், வேதியியலில் அடிப்படையான கட்டுரைகள் சில எழுத வேண்டியுள்ளது. உ+ம்: ஒற்றைப் பிணைப்பு, இரட்டைப் பிணைப்பு, முப்பிணைப்பு, சிக்மா பிணைப்பு ... போன்றவை. நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 02:07, 12 சூலை 2015 (UTC)[பதிலளி]

ClF

குளோரின் ஒற்றைபுளோரைடு என்பது தமிழக வழக்கா? இலங்கையில் mono என்பதற்கு ஒரு என்று பயன்படுத்தப்படுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 10:07, 15 சூலை 2015 (UTC)[பதிலளி]

மதன், mono என்ற சொல்லுக்கு இணையாக, குளோரின் ஒருபுளோரைடு என்பதைக் காட்டிலும் ஒற்றைபுளோரைடு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். என்னுடைய தனிப்பட்ட முடிவுதான் இது .தமிழக வழக்கில் மோனோ என்றே எழுதுகிறார்கள். பொருட்பிழை ஏதுமில்லையே? இனி ”ஒரு” என்றே எழுதலாமா? அன்புடன் --கி.மூர்த்தி 11:22, 15 சூலை 2015 (UTC)

ஒற்றை என்பதனைப் பொதுவாக Single என்பதற்கு ஈடாகவே பயன்படுத்துவண்டு. Mono என்பதற்குப் பதிலாக ஒரு என்பதனை இயற்பியலிலும் பயன்படுத்துவதுண்டு. ஒரு என்று பயன்படுத்துவது நன்று. வேதியியலில் -de, -te என்பவற்றைத் தமிழ்நாட்டில் முறையே -டு, -ட்டு என்றும் இலங்கையில் முறையே -ட்டு, -ற்று என்றும் பயன்படுத்துகின்றனர். எனவே, குழப்பம் நேராதிருக்க, -de, -te என்பவற்றுக்குப் பதிலாக, முறையே -டு, -ற்று எனப் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. தங்கள் கருத்தையும் தெரியப்படுத்துங்கள். சிறீதரன் கூறிய கட்டுரைகளை உடனே தொடங்கியதற்கு நன்றி. --மதனாகரன் (பேச்சு) 11:33, 15 சூலை 2015 (UTC)[பதிலளி]

trichloride - tetrachloride, pentachloride, hepta, octa , nona, decca, dodecca, என்று தொடரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையாக எப்படி எழுதலாம்?--கி.மூர்த்தி 11:52, 15 சூலை 2015 (UTC)'

முக்குளோரைடு, நாற்குளோரைடு, ஐங்குளோரைடு, அறுகுளோரைடு, எழுகுளோரைடு, எண்குளோரைடு, ஒன்பதின்குளோரைடு, பதின்குளோரைடு, பதினொருகுளோரைடு என எழுதிச் செல்லலாம். --மதனாகரன் (பேச்சு) 12:07, 15 சூலை 2015 (UTC)[பதிலளி]

//குறில் எழுத்துகளின் விகாரமே மெய்யெழுத்துகள் என்பதால்// என்று மேற்கூறிய கட்டுரையின் மூன்றாவது பந்தியில் குறிப்பிட்டுள்ளீர்கள். மெய்யெழுத்துகள் என்பதற்குப் பதிலாக நெடிலெழுத்துகள் என வர வேண்டுமென நினைக்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 03:01, 17 சூலை 2015 (UTC)[பதிலளி]

நன்றி மதன். திருத்தி விட்டேன்--கி.மூர்த்தி 06:50, 17 சூலை 2015 (UTC)

வேண்டுகோள்

வணக்கம். நன்னூல் வார்ப்புருவில் சிவப்பு இணைப்புகளாக இருந்த சில கட்டுரைகளை தொடங்கியிருக்கிறேன். ஆனால் அவற்றில் அத்தலைப்புகளைக் குறித்து அதிகமாக என்னால் உள்ளடக்கங்களை சேர்க்கமுடியவில்லை. முடிந்தவரை அத்தியாவசியமான தகவல்களை இணைத்து அவற்றை மேம்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:36, 17 சூலை 2015 (UTC)[பதிலளி]

கண்டிப்பாக முயற்சிக்கிறேன் தோழர். --கி.மூர்த்தி 15:44, 17 சூலை 2015 (UTC

உளங்கனிந்த நன்றி!

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:24, 25 சூலை 2015 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன் நிகழ்வு மிகச்சிறப்பாக இருந்தது. நன்றியும் வாழ்த்துகளும்! --கி.மூர்த்தி 10:26, 26 சூலை 2015 (UTC)[பதிலளி]

கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்

--Natkeeran (பேச்சு) 15:12, 28 சூலை 2015 (UTC)[பதிலளி]

Heterocyclic compound

Heterocyclic compound என்பதை எவ்வாறு எழுதலாம்? விக்சனரியில் உள்ளவாறு வேற்றணு வளையச்சேர்மம் எனலாமா?--Kanags \உரையாடுக 07:32, 1 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

பல்லின வளையச் சேர்மம் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். Bis(trimethylsilyl)sulfide இதை எவ்வாறு தமிழ்ப்படுத்தலாம்?--கி.மூர்த்தி 07:36, 1 ஆகத்து 2015 (UTC)
நன்றி.--Kanags \உரையாடுக 08:31, 1 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
இரு(மும்மெதைல்சிலைல்) சல்பைடு எனலாம். --மதனாகரன் (பேச்சு) 08:10, 1 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
Bis என்பது ஐயூபிஏசி பெயரீடு. இதனை இரு என மாற்றுவது சரியாகத் தெரியவில்லை. இரு என்பது ஏற்கனவே di- என்பதற்கும் பயன்படுத்துகிறோம். பிசு(மும்மெத்தைல்சிலைல்)சல்பைடு?--Kanags \உரையாடுக 08:31, 1 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
பதிலீட்டினுள் (பிரதியீடு) அமைந்த பதிலீட்டைக் குறிக்க bis, tris என்றவாறு பயன்படுத்துகின்றனர். இரு என்பதனை ஏற்கெனவே, di, bi (bicarbonate-இருகாபனேற்று) ஆகிய இரண்டுக்கும் பயன்படுத்தி வருகிறோம். சிறீதரன் கூறியபடி, பிசு எனலாம். மெதைல் (இலங்கை வழக்கு) அல்லது மீத்தைல் (தமிழக வழக்கு) என்பதைப் பயன்படுத்தலாம். மெத்தைல் பொருத்தமாகத் தெரியவில்லை. --மதனாகரன் (பேச்சு) 08:54, 1 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
நன்றி! மதன், பாசுபரசு ஐஞ்சல்பைடு என்பது சரியா? --கி.மூர்த்தி 09:06, 1 ஆகத்து 2015 (UTC)
ஆம். --மதனாகரன் (பேச்சு) 09:16, 1 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

செயரத்தினாவின் கருவி

வணக்கம், விக்கியில் கட்டுரைகள் எழுதுவதற்கு பயனர்:Jayarathina/iwt என்ற கருவியைப் பயன்படுத்துகிறீர்களா? இதுவரையில் பயன்படுத்தவில்லை என்றால் இக்கருவியை நிறுவும் படி கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக ஆங்கில விக்கியில் இருந்து கட்டுரைகள் மொழிபெயர்ப்பவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.--Kanags \உரையாடுக 02:20, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

வணக்கம். நான் எந்தக் கருவியையும் பயன்படுத்தவில்லை. எப்படி நிறுவிக் கொள்வது? பயன் என்ன?--கி.மூர்த்தி 02:23, 16 ஆகத்து 2015 (UTC)
நான் தந்துள்ள இணைப்பில் விளக்கமாக உள்ளது. படித்து விட்டு installation பகுதியில் உள்ளவாறு கருவியை நிறுவிக் கொள்ளுங்கள்.--Kanags \உரையாடுக 03:49, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
இக்கருவி பயன்படுத்தும் முறை பற்றி தகவலுழவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.--Kanags \உரையாடுக 01:47, 30 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு...

வணக்கம்! தாங்கள் நாள்தோறும் கட்டுரைகள் எழுதிவருவதால், இந்தத் திட்டத்தில் இணையலாமே?! ஏற்கனவே இணைந்துள்ள 3 பயனர்கள் புதிய ஊக்கத்தினைப் பெறுவார்கள்.

பின்குறிப்பு: இங்கு எதுவும் கட்டாயமன்று. அறியத் தந்துள்ளேன்; அவ்வளவே! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:00, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

அலுவலக்ப் பணி நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டியிருக்குமென்பதால் என்னால் தொடர்ந்து நூறுநாட்கள் பங்களிக்க இயலுமா என உறுதியாகத் தெரியவில்லை. அதனால்தான் திட்டத்தில் இணையவில்லை.வீட்டுக்கு வந்துவிடும் படி அல்லது உள்ளூரில் நான் இருக்கும் நாளெல்லாம் கண்டிப்பாக ஒரு கட்டுரையாவது எழுதிக்கொண்டுதானிருப்பேன். ஆகத்து 1 முதல் நான் 100 விக்கிநாட்களில் தானே இருக்கிறேன். அழைப்புக்கு நன்றி. --கி.மூர்த்தி 12:18, 16 ஆகத்து 2015 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல்

வணக்கம் மூர்த்தி. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/கி. மூர்த்தி என்ற பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் என்ற பக்கத்திலுள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவலையோ ஒளிப்படத்தையோ பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும் காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 12:10, 19 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

"இவர் வேதியியல் தொடர்பான கட்டுரைகளில் முதன்மையாகப் பங்களித்து வருகிறார்." என்னும் வரியைச் சேர்த்து விடலாம். தாங்கள் தொடங்கிய சிறந்த கட்டுரைகளில் 6-7 கட்டுரைகளைக் குறிப்பிட்டால், அவற்றையும் இணைத்திடலாம். --மதனாகரன் (பேச்சு) 14:11, 20 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

மதனாகரன், அசிட்டிக் நீரிலி, விக்டர் மேயர் உபகரணம், காலவரிசையில் வேதித்தனிமங்கள் கண்டுபிடிப்பு, யானைப் பற்பசை, சோவனிகக் கலாச்சாரம், மதராசியக் கலாச்சாரம், பெங்கோ திறப்பு, ஓயாமல் முற்றுகை, இந்திய விண்மீன் குழாம், தற்காலிக ஓய்வூதியம். --கி.மூர்த்தி 15:51, 20 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

இங்கேயுள்ள அறிமுகத்தை ஒருமுறை சரிபார்க்க முடியுமா? மாற்றங்கள் இருந்தால் குறிப்பிடுங்கள். ஆகத்து 23இலிருந்து இரு கிழமைகளுக்குக் காட்சிப்படுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 13:09, 21 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

ஆலோமீத்தேன்

ஆலோமீத்தேன், கட்டுரையில் சில பகுதிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது, கவனிக்கவும். வேதியியல் குறித்த கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு நன்றி.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:53, 19 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

முதற்பக்க அறிமுகம்

தங்கள் முதற்பக்க அறிமுகம் இன்றிலிருந்து (ஆகத்து 23) இரு கிழமைகளுக்கு முதற்பக்கத்தில் இடம்பெறுகின்றது. --மதனாகரன் (பேச்சு) 18:43, 22 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 01:40, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 02:01, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 05:48, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:01, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்! - உங்கள் அறிமுகம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். தொடர்ந்து சிறப்புடன் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 17:40, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் -தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:19, 27 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 09:22, 27 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

உங்கள் மின்மடல் பார்க்கவும்

உங்களுக்கு ஒரு விக்கிப்பீடியா மின்மடல் அனுப்பியுள்ளேன். கவனிக்க வேண்டுகிறேன். அல்லது என் எண்ணுக்கு அழைக்க வேண்டுகிறேன். என் எண் 9986 99 3336. நன்றி. --இரவி (பேச்சு) 14:45, 28 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

இரவி, என்னுடைய மின்முகவரிக்கு மின்மடல் எதுவும் வரவில்லையே? murthy.vellore@yahoo.com --கி.மூர்த்தி 15:48, 28 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்...

வணக்கம்!

செயரத்தினாவின் கருவி...

வணக்கம்! செயரத்தினாவின் கருவி குறித்து உங்களுக்கு நேரடியாக பயிற்சி தருமாறு கனக்சு என்னைக் கேட்டுள்ளார். என்னால் இயலும். இது குறித்து பேச எனது நகர்பேசிக்கு (99625 50506) அழைக்க இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:40, 30 செப்டம்பர் 2015 (UTC)

கருவியை ஏற்கனவே நிறுவியுள்ளார் என நினைக்கிறேன். ஆனால் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சிறு விளக்கத்தைக் கொடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 21:23, 30 செப்டம்பர் 2015 (UTC)

தொடர்பு கொள்கிறேன்

விடுமுறை நாளில் கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன். த்ற்பொழுது தினசரி சென்னை பயனம். இரவில் வீடு திரும்ப 10.30 ஆகிவிடுகிறது. எனவே விடுமுறை நாளில் செவ்வாய் கோளை முயற்சிக்கிறேன்.--கி.மூர்த்தி 17:01, 30 செப்டம்பர் 2015 (UTC)

பதிலுரைக்கு நன்றி! (அக்டோபர் 2,3,4 நாட்களில் என்னை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:40, 30 செப்டம்பர் 2015 (UTC)

ஆயிரம் கட்டுரைகள்

ஆயிரவர் பதக்கம்
மூர்த்தி, தமிழ் விக்கிப்பீடியாவில் 1000 கட்டுரைகளைத் தொடங்கி எழுதியிருப்பதற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றில் பெருமளவு வேதியியல் சார்ந்த விரிவான கட்டுரைகள் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பு. அண்மையில், சேலம் பெரியார் பல்கலையில் நடந்த கருத்தரங்கில் உங்கள் கட்டுரைகளை எடுத்துக்காட்டாக காட்டி, துறை சார் வல்லுநர்கள் பலரும் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க தமிழ் விக்கிப்பீடியர் சார்பாக வாழ்த்துகிறேன். --இரவி (பேச்சு) 07:07, 21 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

இரவி (பேச்சு) சார்,

இந்திய விக்கிமீடியா கிளையின் திட்டமிடல் இயக்குநரான இரவி என்னை அறிமுகப்படுத்தி வாழ்த்தியதற்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொழுது போக்காக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்த நான் இன்று பல சிறிய கட்டுரைகளும் சில பெரிய கட்டுரைகளுமாக மொழிபெயர்த்து இன்று காலை 1000 என்ற எண்ணிக்கையைத் தொட்டிருக்கின்றேன். அக்டோபர் 21 என்ற மறக்கமுடியாத நாளுக்கு என்னுடைய அத்தனை கட்டுரைகளையும் சமர்ப்பிக்கின்றேன். மனநிலையும் உடல்நிலையும் சரியாக இருக்குமானால் அடுத்த அக்டோபர் 21 க்குள் 2000 என்ற எண்ணிக்கையைத் தொட முயற்சிப்பேன். கனக்சு, அன்டன், மதன், உழவன், செல்வ சிவகுருநாதன், நந்தகுமார், செல்வா, தினேசு, ஆதவன்,சிபி ஆகியோருக்கும் தங்களுக்கும் என் நன்றிகள்.--கி.மூர்த்தி 07:15, 21 அக்டோபர் 2015 (UTC)
உங்கள் அடுத்த இலக்கு நிறைவேற வாழ்த்துகள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை நானும் உங்களைப் போல் உடன் இருந்து பங்களிப்பவன் தான். எனவே, அருள்கூர்ந்து நேரடியாக என் பணிக்குத் தொடர்பில்லாத இடங்களில் பணிப்பொறுப்பைக் குறிப்பிட்டு என்னை அந்நியப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் :)--இரவி (பேச்சு) 07:17, 21 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே! --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 07:43, 21 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் மூர்த்தி ! உங்கள் பணி மேன்மேலும் வளர்ந்தோங்கிட வாழ்த்துகின்றேன்.--மணியன் (பேச்சு) 07:59, 21 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் வாழ்த்துகள்!--AntanO 08:01, 21 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் மூர்த்தி!--நந்தகுமார் (பேச்சு) 08:18, 21 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
தங்களின் அயராத உழைப்பிற்கு எனது நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:35, 21 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் மூர்த்தி. அயராத, அசத்த வைக்கும் பங்களிப்புகள் உங்களுடையவை.--Booradleyp1 (பேச்சு) 05:50, 22 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 05:33, 27 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:50, 27 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

தமிழாக்கம்

Chalcogenides, Chalcogens இவற்றை எவ்வாறு தமிழில் கூறலாம்?--Kanags \உரையாடுக 06:51, 22 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

சால்கோசெனைடுகள், சால்கோசென்கள் என்பதில் தவறில்லை என நினைக்கிறேன். --கி.மூர்த்தி 06:56, 22 அக்டோபர் 2015 (UTC)

வேண்டுகோள்

வேதியியல் சேர்மங்கள் பற்றிய கட்டுரைகள் எழுதும் போது, அவற்றின் உள்ளே அடிக்கடி சிகப்பு இணைப்புகளாக வரக்கூடிய அடிப்படைக் கருதுகோள்கள் பற்றிய கட்டுரைகளையும் ஒரு புறம் தொடர்ந்து எழுதி வரக் கேட்கிறேன். இதன் மூலம் வேதியியல் தொடர்பான முழுமையான களஞ்சியத்தை உருவாக்க முடியும். நீங்கள் ஏற்கனவே இது தொடர்பாக செயல்பட்டு வருகிறீர்கள் என்றாலும், முறையாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் :) நன்றி.--இரவி (பேச்சு) 07:07, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

தங்களுக்கு ஒரு பரிசு!!!

புதிய கருவிக்கு நன்றி! ஒரு சிறு திருத்தம் தேவை.}}}} என நான்கு முறை வருகிறது. இரண்டுமுறை வருமாறு உருவாக்குங்கள்.--கி.மூர்த்தி 07:51, 28 அக்டோபர் 2015 (UTC)

கருவியைப் பயன்படுத்துவதில் மகிழ்ச்சி. }}}} எனவருவது கருவியில் உள்ள பிழை இல்லை. பொத்தானை இரண்டு முறை அழுத்தினால் மட்டும் தான் இப்பிரச்சினை வரும். ஒருதரம் அழுத்தச்சரி!! முயன்று பார்க்க. நன்றி!!! --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:05, 28 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம், 2015

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

கட்டுரை தேவை

en:Pearson symbol பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள். அவசரமில்லை. நன்றி.--Kanags \உரையாடுக 04:09, 11 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Kanags சார், போடம் சாகோர் என்ற கட்டுரையின் பகுப்பைப் பார்த்து சரிசெய்ய உதவுங்கள்--கி.மூர்த்தி 06:02, 11 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

கருவி

செயரத்தினாவின் கருவி பற்றி அறிந்தீர்களா? பயன்படுத்துகிறீர்களா?--Kanags \உரையாடுக 01:18, 21 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

--Kanags சார், கருவியைப் பற்றி அறிந்தேன். அவ்வப்போது பயன்படுத்துகிறேன். நன்றி --கி.மூர்த்தி 02:49, 21 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
குறிப்பாக இந்தத் தவறுகள் வருவதற்கு சந்தர்ப்பமில்லை. குறைந்தது பகுப்புகளுக்கு மட்டுமாவது அக்கருவியைப் பயன்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 03:11, 21 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

சோடியம் குளோரைடு என்ற கட்டுரையை உருவாக்க வேண்டுகிறேன். உப்பு என்ற கட்டுரை உள்ளது எனினும், ஆங்கில விக்கிப்பீடியாவில் சோடியம் குளோடுக்கு தனிப்பக்கம் உள்ளது. இச்சொல், இந்த வார்ப்புருவில் பயன்படுவதால் இந்த வேண்டுகோளை முன் வைக்கிறேன். மேலும் இவ்வார்ப்புரு பல கட்டுரைகளில் பயன்படுத்தப்படுகிறது. காண்க: சிறப்பு:WhatLinksHere/வார்ப்புரு:Nutritionalvalue.--உழவன் (உரை) 08:52, 21 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

கட்டுரையை உருவாக்கியமைக்கு நன்றி. லாக்டோசு, நார்ப்பொருள் ஆகிய கட்டுரைகளையும் மேற்கூறிய வார்ப்புருவுக்கு உருவாக்கினேன். பல உணவு குறித்த கட்டுரைகள் உருவாக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. ஊட்டம் குறித்த பல சர்க்கரை கட்டுரைகள் உருவாக்கவும், உள்ள கட்டுரைகளை மேம்படுத்தவும் கேட்டுக் கொள்கிறேன். --உழவன் (உரை) 01:46, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

குளுக்கோசு என்ற கட்டுரையிலுள்ள பல அடிப்படைச் சொற்களுக்கு கட்டுரைகள் இல்லை. அதனை உருவாக்கக் கோருகிறேன். நமது உணவால், நமக்குக் கிடைக்கும் உணவு வேதிப்பொருட்களைக் குறித்து, அனைவரும் அறிந்து கொள்ளுதல் அவசியமென்பதால், இக்கோரிக்கையை வைக்கிறேன். ஏற்கனவே உள்ள கட்டுரைகளையும் ஒரு பார்வை பாருங்கள். பகுப்பு:இனிப்பூட்டிகள் என்ற பகுப்பில் நூற்றுகணக்கான கட்டுரைகள் உருவாக்கப்பட்டால் அடிப்படை உணவு வேதியியலை அனைவரும் அறிய வாய்ப்புண்டு.--உழவன் (உரை) 02:30, 4 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

சிடீவியா (பேரினம்) கட்டுரையை உருவாக்கியுள்ளேன். இதன் 240 செடி வகைகளில் இருந்து, சிடீவியால் கிளைகோசைடு (Steviol glycoside) என்ற சர்க்கரைப் பதிலீடு கிடைக்கிறது. --உழவன் (உரை) 03:12, 4 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

மின்பூச்சு

மின்பூச்சு என்ற கட்டுரை enamel பற்றியதா? இதனை விக்கிக்கேற்ப மாற்ற முடியுமா? --AntanO 15:57, 29 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று --@AntanO:--கி.மூர்த்தி 02:34, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
 நன்றி!--AntanO 03:53, 1 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
விக்கிப்பீடியாவில் வரும்போதெல்லாம் நான் அதிகமாக அண்மைய மாற்றங்களில் உங்களுடைய பெயரையே காண்கிறேன். களைப்படையாமல் புதிய கட்டுரைகளை உருவாக்கும் உங்களுக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.  மாதவன்  ( பேச்சு  ) 17:19, 9 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

 நன்றி!--மாதவன்--கி.மூர்த்தி 17:27, 9 திசம்பர் 2015 (UTC)

இணைப்பற்ற பகுப்புக்கள்

கட்டுரைகளில் பகுப்புக்கள் உருவாக்கும்போது அவை இணைப்பற்ற பகுப்புக்களாக அல்லது சிவப்பு இணைப்புள்ள பகுப்புக்காக உருவாக்குவதைவிடுத்து, ஏற்கெனவே உள்ள பொருத்தமான பகுப்புக்களில் இணையுங்கள். இதனால், பாராமரிப்பு, அணுகுதல் என்பவற்றுக்கு இலகுவாக இருக்கும். எ.கா: விக்டோரியா நினைவிட இல்லம் - இங்குள்ள 3 பகுப்புக்களும் இணைப்பற்ற பகுப்புக்கள். --AntanO 10:37, 13 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

@கி.மூர்த்தி: விக்டோரியா நினைவிட இல்லம் குறித்த செய்திகளை ஆங்கில விக்கியில் கட்டுரை உருவாக்கியவரிடம் வேண்டியுள்ளேன், கிடைத்தவுடன் சரிசெய்வோம். அதுவரை பொருத்தருள்க ! - ʋɐɾɯnபேச்சு 14:42, 14 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

சிடீவியால் கிளைகோசைடு (Steviol glycoside)

சிடீவியால் கிளைகோசைடு (Steviol glycoside) என்ற சர்க்கரைப் பதிலீடு, சிடீவியா (பேரினம்) என்பதன் <200 சிற்றினங்களில் கிடைக்கிறது. அதுபற்றி கட்டுரைகள் எழுத எண்ணியுள்ளேன். எனவே, அதனையும் உருவாக்கக் கோருகிறேன். --உழவன் (உரை) 12:25, 16 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--கி.மூர்த்தி 17:45, 16 திசம்பர் 2015 (UTC)

ஐயம்

த. இ. க. வில் இருந்து நேரடியாக அலுவல் முறையில் பங்களிக்கும் பொறுப்பில் இருந்து விலகிய பிறகும், தாங்கள் வழமையாக உருவாக்கும் கட்டுரைகளை விக்கிப்பீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டு முயற்சி பகுப்பின் கீழ் இட்டு வருவதன் காரணத்தை அறிய விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:26, 17 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டு முயற்சி பகுப்பின் கீழ் நான் எழுதுவதால் ஏதேனும் சிக்கலா? --கி.மூர்த்தி 06:38, 17 திசம்பர் 2015 (UTC)
சிக்கல் ஏதும் இல்லை. இப்பகுப்பு இக்கூட்டு முயற்சியின் நேரடித் தாக்கத்தை அளப்பதற்காக உருவாக்கப்பட்டது. அலுவல் முறையில் நீங்கள் அதில் பங்களித்த போது, நீங்கள் உருவாக்கும் இக்கட்டுரைகள் இப்பகுப்பில் வருவது தகுந்ததாக இருந்தது. ஆனால், தற்போது தங்களது வழமையான பங்களிப்புகளே தொடர்கின்றன என்பதால், அதற்கான தேவை இல்லை என்பதுடன் தாக்கத்தை அளவிடுவதிலும் குழப்பத்தை ஏற்படுத்தும். நன்றி. --இரவி (பேச்சு) 06:45, 17 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
உங்கள் கட்டுரைகளில் கூட்டு முயற்சி வார்ப்புருவை இடுவதைத் தவிர்க்கலாம்.--Kanags \உரையாடுக 08:42, 19 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
Kanags சார், த.இ.க. அலுவலகத்தில் அமர்ந்து செய்து கொண்டிருந்த பணியை நான் தற்பொழுது வேலூரில் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். தொடர் பயணத்தை தவிர்த்து, உடல்நலம் காத்து த.இ.க. சார்பாக பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது த.இ.க இயக்குநர் அவர்களின் விருப்பம். அவருடைய அணுகுமுறை எனக்குப் பிடித்திருந்தது. பிடிக்கிறது. பிடிக்கும். எனவே என்மீது அவர் கொண்டுள்ள அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டியது என் கடமை. தவிர, நான் தமிழக அரசுத்துறையில் பணிபுரிகின்ற ஊழியன். தமிழக அரசில் பணிபுரிகின்ற் நான் எந்த ஊரில் பணிபுரிந்தாலும் த.இ.க.வின் பணியாளனே. எனவே கூட்டு முயற்சியில் இறுதி வரை நான் த.இ.க.வின் கரம்பிடித்தே இயங்குவேன். என்னுடைய போக்கில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
மூர்த்தி, தனிப்பட்ட முறையில் உங்கள் கட்டுரைப் பங்களிப்புகளை எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் காட்ட இது போன்ற புள்ளிவிவரப் பக்கங்கள் உதவும். இங்கு சோதனைக்கு ஏதேனும் உள்ளடக்கத்தை இட்டு வைத்தால், இந்தத் தளத்தில் மாதம் வாரியாக உங்கள் பங்களிப்புகளைக் காணலாம்.
ஒரு வேளை, த. இ. க. வழியாகப் புதிதாகப் பங்களிக்கத் தொடங்கியிருந்த பயனர் ஒருவர் இவ்வாறு வார்ப்புரு இடுவாரெனில் அதில் ஒரு ஏரணம் இருக்கிறது. நீங்கள் ஏற்கனவே ஒரு விக்கிப்பீடியராகப் பங்களித்து இடையில் அலுவல் முறையில் செயற்பட்டு தற்போது மீண்டும் தன்னார்வப் பணிக்குத் திரும்பியிருப்பதால் இவ்வார்ப்புரு இடுவது தேவையற்றது. விக்கிப்பீடியா செயற்பாடுகளைப் பொருத்தவரை நாம் அனைவருமே விக்கிப்பீடியர்கள் தாம். நம்முடைய சொந்தப் பணி, பிடிப்புகளை ஆகியவற்றை ஒதுக்கி வைத்தே இத்தன்னார்வப் பணிக்கு வருகிறோம். எனவே, இந்த விக்கிப் பண்பாட்டைக் காப்பது நம் கடமை.
த. இ. க., தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னேற்றத்தில் பெரும் ஆர்வம் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. தகுந்த வழியில் முறையான கட்டற்ற ஆதாரங்களைப் பெற்று இன்னும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை உருவாக்கி இந்தக் கூட்டு முயற்சியை நாம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். அதில் பரப்புரை முதலிய பணிகளில் நீங்கள் ஈடுபடவும் முடியும். ஆனால், அலுவல் பணியையும் விக்கியின் தன்னார்வப் பணியையும் இணைத்துச் செயற்படுவது இக்கூட்டு முயற்சி குறித்த நம்பகத்தன்மையையும் ஆதரவையும் மற்ற விக்கிப்பீடியர்களிடத்துக் குறைக்க வாய்ப்புண்டு. நீண்டகால நோக்கில் இது நல்லதன்று. எனவே, இவ்வார்ப்புரு இடும் செயற்பாட்டைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --இரவி (பேச்சு) 12:42, 19 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

திருத்தங்கள்

இந்த மாற்றங்களைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 05:10, 24 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்


விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:07, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

தகவல்சட்டம்

ஊர்கள் பற்றிய கட்டுரையில் உள்ள தகவல்சட்டத்த்தில் உள்ள தகவல்களையும் தமிழில் தாருங்கள். உ+ம்: [1]. நன்றி.--Kanags \உரையாடுக 05:25, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]

பதக்கம்

அறிவியல் பதக்கம்
அறிவியல் சார்ந்த கட்டுரைகளை அருமையாக உருவாக்கி விரிவாக்கி வரும் தங்களுக்கு விக்கிப்பீடியர்கள் சார்பாக இப்பதக்கம் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:59, 2 சனவரி 2016 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:கி.மூர்த்தி&oldid=1992632" இலிருந்து மீள்விக்கப்பட்டது