விக்டோரியா நினைவிட இல்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்டோரியா நினைவிட இல்லம்
Victoria Memorial Home
Map
பொதுவான தகவல்கள்
வகைகருணை இல்லம்
கட்டிடக்கலை பாணிஐதராபாத் தெக்கான்
இடம்ஐதராபாத், தெலுங்கானா, இந்தியா
நிறைவுற்றது1901
திறக்கப்பட்டது1 சனவரி 1903

விக்டோரியா நினைவிட இல்லம் அல்லது யாதீம் கானா – இ- விக்டோரியா அல்லது விக்டோரியா நினைவிட இல்ல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி (Victoria Memorial Home or Yateem Khana-e-Victoria or Victorial Memorial Home Residential High School) என்பது இந்திய நாட்டின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருக்கும் சாரூநகரில் அமைந்துள்ள ஒரு கருணை இல்லம் ஆகும்.[1][2] இவ்வில்லம் எழுபது ஏக்கர் பரப்பளவுள்ள வளாகத்தில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

சாரூநகர்-இ-மகால் 1901 ஆம் ஆண்டில் ஆறாவது நிசாம் மிர் மகபூப் அலி கான் அவர்களுக்காக கட்டப்பட்ட அரண்மனையாகும். ஆனால் அது விக்டோரியா ராணியின் பெயர் சூட்டப்பட்டு கருணை இல்லத்திற்காக தானமாக வழங்கப்பட்டது.

வெகுசனப் பயன்பாடு[தொகு]

தெலுங்கு மற்றும் இந்திமொழித் திரைப்படங்களில் எதிர்நாயகர்களுக்கான புகலிடமாக விக்டோரியா நினைவிட இல்லம் காட்டப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. TNN 24 Feb 2013, 02.17AM IST (2013-02-24). "Manmohan Singh in Hyderabad today – Times Of India". The Times of India. Archived from the original on 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2013-05-16.
  2. Special Correspondent (2013-02-23). "Manmohan to visit Hyderabad blast site today". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-05-16.

புற இணைப்புகள்[தொகு]