The content is as wide as possible for your browser window.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓத்து என்பதன் விளக்கம் என்பது, ஒரு நூலில் கூறப்படும் கருத்துகளை எவ்வாறு வரிசைப்படுத்தித் தொகுப்பது என்பதை விளக்க நன்னூல் கூறும் விதியாகும்.
ஒன்றோடொன்று பொருந்தக்கூடிய ஓரினமான மணிகளை வரிசையாகப் பதித்து அடுக்கி அணிகலன் தொடுப்பது போல ஓரினமான பொருள்களை ஓரிடத்தில் அமைத்து ஒருசேரத் தொகுத்து நூலை ஆக்கவேண்டும் என உயர்ந்த மொழி பேசும் அறிஞர்கள் கூறுவர்.[1]