தமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம்
முந்தைய பெயர் | தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் |
---|---|
குறிக்கோளுரை | பயிற்சி பண்படுத்தும் |
வகை | அரசு பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 2013 |
நிறுவுனர் | ஜெ. ஜெயலலிதா |
வேந்தர் | தமிழக முதல்வர் |
துணை வேந்தர் | டாக்டர். ப்ரமீலா குருமூர்த்தி |
அமைவிடம் | இராஜா அண்ணாமலைபுரம், சென்னை, 600 028 , , |
சுருக்கப் பெயர் | த.நா.ஜெ.இ.க.க.ப |
இணையதளம் | tnmfau |
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் (The Tamil Nadu Dr. J. Jayalalithaa Music and Fine Arts University - TNJMFAU), தமிழக இசை மற்றும் நுண்கலைகளை வளர்ப்பதற்காக 2013-இல் தமிழ்நாடு அரசு சென்னையில் நிறுவிய பல்கலைக்கழகம் ஆகும். [1][2][3] தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகம் என்ற பெயரை, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரில் செப்டம்பர், 2019 முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[4] 31 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த இசைப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட, 11 டிசம்பர் 2020 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.[5][6]
பியிற்றுக்கும் படிப்புகள்
[தொகு]இளங்கலை மற்றும் முதுகலை இசை (M. A (Music)
[தொகு]இளங்கலை மற்றும் முதுகலை நுண்கலைகள் (M. F. A)
[தொகு]பட்டயப் படிப்புகள் (3 ஆண்டுகள்)
[தொகு]- இசை மற்றும் கவின் கலைகள்
சான்றிதழ் படிப்புகள் (2 ஆண்டுகள்)
[தொகு]- வாய்ப்பாட்டு
- வீணை
- வயலின்
- மிருதங்கம்
தொடர்பு முகவரி
[தொகு]தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம், டாக்டர். டி. ஜி. எஸ். தினகரன் சாலை, சென்னை - 600 028 தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044-24629036 மின்னஞ்சல்: tnmfauvc@gmail.com
இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பு நிறுவனங்கள்
[தொகு]- தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, சென்னை
- தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, மதுரை
- தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, கோயம்புத்தூர்
- தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, திருவையாறு
- தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி
- அரசு சிற்பக் கல்லூரி
- எம். ஜி. ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்
- இராணி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரி
- சிறீ அன்னை காமாட்சி கலைக்கூடம்
- பிரிட்ஜ் கவின் கலைகள் அகாதமி
- கலைக்காவேரி கவின் கலைகள் கல்லூரி
- அரசு கவின் கலைகள் கல்லூரி
- தியாகராசர் இசைக் கல்லூரி
- ரவிராஜ் கவின் கலைகள் கல்லூரி
- மெக்கன்ஸ் ஊட்டி கட்டிடவடிவமைப்பு நிறுவனம்
- அழகப்பா நிகழ்த்துக் கலைக் கல்லூரி
- சென்னை திரைப்பட தொழில் பள்ளி
- ஸ்ரீ ரேகானுகாம்பாள் கவின் கலைகள் மற்றும் கைவினைக் கல்லூரி
- பால்மி டியோர் திரைப்பட மற்றும் ஊடக கல்லூரி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State University ,Tamil Nadu". University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
- ↑ "Tamil Nadu government to set up music and fine arts university". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 October 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
- ↑ "Sign up for Off-Campus Music, Art Diploma Courses". New Indian Express. 26 August 2015. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
- ↑ தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றம்: ஜெயலலிதா பல்கலைக்கழகம் என மாற்றி தமிழக அரசு ஆணை
- ↑ தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக புதிய கட்டடத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
- ↑ தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக புதிய கட்டடத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்