தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, சென்னை
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, சென்னை (Tamil Nadu Government Music College, Chennai) தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில், தமிழ்நாட்டில் சென்னையில் இயங்கிவருகின்ற கல்லூரியாகும்.
பிற கல்லூரிகள்
[தொகு]தமிழ்நாட்டில் இசைக் கல்லூரிகள் மதுரை, திருவையாறு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ளன.
துவக்கம்
[தொகு]தமிழகத்தின் உயரிய இசைப் பாரம்பரியத்தை பாதுகாத்து, வளர்க்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் 1949இல் திட்டமிட்டது. இசைக்கல்வியகம் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய, மாநில அரசுகளின் நிதி ஆதரவில் ஆகஸ்ட் 1949இல் மத்திய கர்நாடக சங்கீத கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது. திரு.பி.சாம்பமூர்த்தி ஆலோசனைக்குழுவின் பொறுப்பாளரனார். இக்கல்லூரி தொடக்கத்தில் சாந்தோமில் இரண்டு ஆண்டுகள் செயல்பட்டது. பின்னர் அடையாறில் உள்ள பிரிட்ஜ் ஹவுஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு ஐந்து ஆண்டுகள் இயங்கியது. மீண்டும் இக்கல்லூரி கிரீன் வேஸ் சாலையில் பிராடி கேஸ்டில் என்னும் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு அதே இடத்தில் தற்பொழுது வரை இயங்கி வருகின்றது. 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றது.[1]
பட்டப்படிப்புகள்
[தொகு]இக்கல்லூரிகளில் மூன்று ஆண்டு, இரண்டாண்டு, ஓராண்டு பட்டயம், மூன்று ஆண்டு இளங்கலை ஆகிய வகுப்புகள் நடத்தப்பெறுகின்றன. வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம், தவில், நாதசுரம், கடம், கஞ்சீரா, முகர்சிங், பரதநாட்டியம், நாட்டுப்புறக் கலை, நட்டுவாங்கம், குரலிசை போன்ற பாடங்கள் முதன்மை மற்றும் துணைப்பாடங்களாக அமைந்துள்ளன.[1]