டி. ஆர். ராமண்ணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
| website = |
| website = |
||
}} |
}} |
||
'''தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் ராமசந்திரன்''' (1923 - மே 22, 1997) என்பதை சுருக்கமாக '''டி. |
'''தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் ராமசந்திரன்''' (1923 - மே 22, 1997) என்பதை சுருக்கமாக '''டி.ஆர்.ராமண்ணா''' அல்லது '''ராமண்ணா''' ஒரு புகழ்பெற்ற [[தென்னிந்தியா|தென்னிந்திய]] [[திரைப்பட இயக்குநர்]], தயாாிப்பாளர் ஆவார். இவர் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தை]] சேர்ந்தவராவார். [[தமிழ்த் திரைப்படத்துறை]]யில் முன்னணி [[நடிகை]]களில் ஒருவராகத் திகழ்ந்த [[டி. ஆர். ராஜகுமாரி]] இவரது மூத்த சகோதரி ஆவார். |
||
== திரை வாழ்க்கை == |
== திரை வாழ்க்கை == |
03:42, 23 மே 2020 இல் நிலவும் திருத்தம்
டி. ஆர். ராமண்ணா | |
---|---|
பிறப்பு | தஞ்சாவூர் இராதாகிருஷ்ணன் இராமச்சந்திரன் (டி.ஆர்.ராமண்ணா)[1] 1923 தஞ்சாவூர், சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | 22 மே 1997 (அகவை 74)[2][3] சென்னை தமிழ்நாடு |
செயற்பாட்டுக் காலம் | 1953 - 1987 |
பெற்றோர் | இராதாகிருஷ்ணன், இரங்கநாயகி |
பிள்ளைகள் | வித்யா, கீதா, சித்ரா, விஜயலட்சுமி, கணேஷ், சாந்தி |
தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் ராமசந்திரன் (1923 - மே 22, 1997) என்பதை சுருக்கமாக டி.ஆர்.ராமண்ணா அல்லது ராமண்ணா ஒரு புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட இயக்குநர், தயாாிப்பாளர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவராவார். தமிழ்த் திரைப்படத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த டி. ஆர். ராஜகுமாரி இவரது மூத்த சகோதரி ஆவார்.
திரை வாழ்க்கை
- ராமண்ணா சிட்டி ஸ்டுடியோவில் ஒலிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக ஒரு திரைப்பட இயக்குனராக வளர்ந்தார்.
- தனது சகோதரி டி. ஆர். ராஜகுமாரியுடன் இணைந்து ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இதற்கு, தனது பெயரின் முதல் எழுத்தையும், தனது சகோதரி பெயரின் முதல் எழுத்தையும் கொண்டு ஆர். ஆர். பிக்சர்சு என பெயர் சூட்டினார்.
- அதில் குறிப்பிடத்தக்க படங்களான வாழப்பிறந்தவள், கூண்டுக்கிளி, குலேபகாவலி, புதுமைப்பித்தன், காத்தவராயன், ஸ்ரீ வள்ளி, பாசம், பெரிய இடத்துப் பெண், பணக்கார குடும்பம், அருணகிரிநாதர், பணம் படைத்தவன், நீ, குமரிப் பெண், பறக்கும் பாவை, நான், மூன்றெழுத்து, தங்கசுரங்கம், சொர்க்கம், வீட்டுக்கு ஒரு பிள்ளை, சக்தி லீலை, பாக்தாத் பேரழகி, என்னைப்போல் ஒருவன், குப்பத்து ராஜா, கன்னித்தீவு, குலக்கொழுந்து, சட்டம் சிரிகிறது, இலங்கேஸ்வரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கினார்
- மேலும் இவரது தயாரித்த திரைப்படங்களான மணப்பந்தல், துலாபாரம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும்.
- தமது சொந்த திரைப்பட நிறுவனமான ஆர். ஆர்.பிக்சர்ஸ், விநாயகா பிக்சர்ஸ், கணேஷ் கிரியேஷன்ஸ் ஆகிய படத்தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இவர் தயாரித்த திரைப்படங்களில் பெரும்பாலானவை மாறுபட்ட கதைகளம் கொண்ட சிறந்த வெற்றி திரைப்படங்களாகும்.
- இவர் தனது திரைப்படங்களில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினிகாந்த் ஆகிய அன்றைய முன்னனி நடிகர்களையும்
- எம். ஆர். ராதா, எஸ். ஏ. அசோகன், இரா. சு. மனோகர், ஆகிய நடிகர் இவரது திரைப்படங்களில் இடம் பெரும் வில்லன்கள் ஆவார்.
- மேலும் நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், எம். ஆர். ஆர். வாசு, என்னத்த கன்னையா, ஆகியோர் இவரது திரைப்படங்களில் இடம் பெரும் நகைசுவை நடிகர்கள் ஆவார்
- டி. ஆர். ராஜகுமாரி, பி. எஸ். சரோஜா, ஈ. வி. சரோஜா, சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி, கே. ஆர். விஜயா, ஜெ. ஜெயலலிதா, சாரதா, உஷாநந்தினி, சி. ஐ. டி. சகுந்தலா, ஆலம் ஆகிய கதாநாயகி இவரது திரைப்படங்களில் தவறாமல் இடம் பெரும் நடிகைகள் ஆவார்கள்
இயக்கி, தயாரித்த தமிழ் திரைப்படங்கள்
- வாழப்பிறந்தவள் (1953)
- கூண்டுக்கிளி (1954)
- குலேபகாவலி (1955)
- புதுமைப்பித்தன் (1957)
- காத்தவராயன் (1958)
- இரத்னபுரி இளவரசி (1960)
- ஒன்று பட்டால் உண்டு வாழ்வு (1960)
- ஸ்ரீ வள்ளி (1961)
- பாசம் (1962)
- பெரிய இடத்துப் பெண் (1963)
- பணக்கார குடும்பம் (1964)
- அருணகிரிநாதர் (1964)
- பணம் படைத்தவன் (1965)
- நீ (1965)
- குமரிப் பெண் (1966)
- பறக்கும் பாவை (1966)
- பவானி (1967)
- நான் (1967)
- மூன்றெழுத்து (1968)
- நீயும் நானும் (1968)
- அத்தை மகள் (1969)
- தங்கசுரங்கம் (1969)
- ஏன் (1970)
- சொர்க்கம் (1970)
- வீட்டுக்கு ஒரு பிள்ளை (1971)
- சக்தி லீலை (1972)
- பாக்தாத் பேரழகி (1973)
- மறுபிறவி (1973)
- வைரம் (1974)
- சொர்க்கத்தில் திருமணம் (1974)
- அவளுக்கு ஆயிரம் கண்கள் (1975)
- தாலியா சலங்கையா (1977)
- என்னைப்போல் ஒருவன் (1978)
- குப்பத்து ராஜா (1979)
- நீச்சல் குளம் (1979)
- கன்னித்தீவு (1981)
- குலக்கொழுந்து (1981)
- சட்டம் சிரிகிறது (1982)
- சங்கரி (1984)
- இலங்கேஸ்வரன் (1987)
- தயாரித்த படங்கள் :-
- மணப்பந்தல் (1961)
- துலாபாரம் (1969)
மேற்கோள்கள்
- ↑ Guy, Randor (26 April 2014). "Manapandhal (1961)". The Hindu. https://www.thehindu.com/features/cinema/cinema-columns/manapandhal-1961/article5951258.ece. பார்த்த நாள்: 25-10-2018.
- ↑ "Kannada Director T R Ramanna". nettv4u (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-11-22.
- ↑ "Tamil cinema 1997 -- year highlights". dinakaran.com. Archived from the original on 9 February 1999. பார்க்கப்பட்ட நாள் 25-10-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)