வின்ஸ்டன் சர்ச்சில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying ms:Sir Winston Churchill to ms:Winston Churchill
வரிசை 144: வரிசை 144:
[[mn:Уинстон Черчилль]]
[[mn:Уинстон Черчилль]]
[[mr:विन्स्टन चर्चिल]]
[[mr:विन्स्टन चर्चिल]]
[[ms:Sir Winston Churchill]]
[[ms:Winston Churchill]]
[[my:ချာချီ၊ ဆာဝင်စတန်၊ လင်းနတ်၊ စပင်ဆာ]]
[[my:ချာချီ၊ ဆာဝင်စတန်၊ လင်းနတ်၊ စပင်ဆာ]]
[[nap:Winston Churchill]]
[[nap:Winston Churchill]]

15:56, 26 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

சர் வின்சன்ட் சர்ச்சில்
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
பதவியில்
26 அக்டோபர் 1951 – 7 ஏப்ரல் 1955
ஆட்சியாளர்கள்ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜார்ஜ்
ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
Deputyஅந்தோனி ஈடன்
முன்னையவர்கிளமன்ட் அட்லி
பின்னவர்அந்தோனி ஈடன்
பதவியில்
10 மே 1940 – 27 ஜூலை 1945
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜார்ஜ்
Deputyகிளமன்ட் அட்லி
முன்னையவர்நெவிலி சாம்பர்லின்
பின்னவர்கிளமன்ட் அட்லி
பிரிட்டனின் நிதியமைச்சர்
பதவியில்
6 நவம்பர் 1924 – 4 ஜூன் 1929
பிரதமர்ஸ்டான்லி பால்ட்வின்
முன்னையவர்பிலிப் ஸ்நோவ்டன்
பின்னவர்பிலிப் ஸ்நோவ்டன்
உள்துறைச் செயலாளர்
பதவியில்
19 பிப்ரவரி 1910 – 24 அக்டோபர் 1911
பிரதமர்ஹெர்பர்ட் ஹென்றி அஸ்குயிட்
முன்னையவர்ஹெர்பர்ட் கிளாட்ஸ்டோன்
பின்னவர்ரெஜினால்ட் மெக்கெனா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1874-11-30)30 நவம்பர் 1874
பெலன்ஹெய்ம், ஆக்ஸ்போர்ட்ஷயர்,
இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்பு24 சனவரி 1965(1965-01-24) (அகவை 90)
ஹைட் பூங்கா, இலண்டன்,
இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
இளைப்பாறுமிடம்செயின்ட் மார்ட்டின் (சர்ச்)ஆலயம், பிலாடன், இங்கிலாந்து.
தேசியம்ஐக்கிய இராச்சியம்,பிரிட்டிஷ்.
அரசியல் கட்சிகன்சர்வேட்டிவ் கட்சி (ஐ.இரா)
(1900–1904, 1924–1964)
லிபரல் கட்சி (1904–1924)
துணைவர்கிளமன்டைன் சர்ச்சில்
உறவுகள்பமீலா ஹேரிமன், மருமகள்
பிள்ளைகள்டயானா சர்ச்சில்
ரான்டல்ப் சர்ச்சில்
சாரக் டச்சட் ஜெஸ்ஸன்
மேரிகோல்ட் சர்ச்சில்
மேரி சோம்ஸ்
வாழிடம்(s)10 டவுனிங் வீதி (உத்தியோகப்பூர்வமான இல்லம்)
சார்ட்வெல் (தனி இல்லம்)
முன்னாள் கல்லூரிஹேரோ பள்ளி, சாண்டர்ஸ்ட் இராயல் இராணுவக் கல்விக்கழகம்
தொழில்பாராளுமன்ற உறுப்பினர், ஆட்சி வல்லுநர், இராணுவ வீரர், பத்திரிகையாளர், வரலாற்றியலாளர், நூலாசிரியர், வரைவாளர்
கையெழுத்துபடிமம்:Sir Winston Churchill signature.svg

சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் (Sir Winston Leonard Spencer-Churchill) (நவம்பர் 30, 1874 - ஜனவரி 24, 1965) என்ற முழுப்பெயர் கொண்ட இவர், சிறப்புப் பட்டயப் பதவிப் பெயர்களான ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம் (Order of Garter-OG), காமன்வெல்த் சிறப்புத் தகை பட்டயம் (காமன்வெல்த்- மக்கள் அதிகாரம் செலுத்தும் அரசமைப்பு) (Order of Merit-OM), பிரித்தானிய-காமன்வெல்த் தனித்துவப் பட்டயம் (Order of Companions Honour-CH), இலண்டன் அரசனுக்குகந்த சமூகப் பட்டயம் (Royal Society -for the Improvement of Natural Knowledge-FRS), கனடா அரசியாரின் ஆலோசகர் (Queen's Privy Council for Canada-PC (Can)), ஆகிய பட்டயங்களையும் கொண்டுள்ளார். இவர் பிரித்தானிய அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவராவார். ஐக்கிய இராச்சியத்தின் 1940 முதல் 1945 வரை மீண்டும் 1951 முதல் 1955 வரை பிரதமராக பதவி வகித்த சர்ச்சில் இரண்டாம் உலகப்போரில் ஐக்கிய இராச்சியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவராக கருதப்படுகிறார்.

சர்ச்சில் மிகச்சிறந்த பேச்சாளர், பிரித்தானிய இராணுவத்தின் அதிகாரி, வரலாற்றியலாளர், அவரது எழுத்திற்காக நோபல் பரிசு பெற்றவர், வரைவாளர் போன்ற சிறப்புப் பெருமைகளையும் கொண்டவர். போர் தந்திரமிக்கவர் என்பதை இராணுவத்தில் பணிபுரிந்தபோதே நிருபித்தவர். இந்தியா, சூடான், இரண்டாம் போயர் போர்களில் களம் கண்டவர். மேற்கு முன்னணியருடன் முதலாம் உலகப்போரில் பிரித்தானியா போர்புரிந்தபோது ராயல் ஸ்காட் பியூசிலர்ஸ் போரின் 6 வது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கி அதன் வெற்றியில் பங்கு கொண்டார். தீடீரென தோன்றிய இரண்டாம் உலகப்போரின் போது முதல் கோமகனின் கப்பற்படைத் தலைவராக நிவிலி சாம்பர்லின் பதவி விலகலைத் தொடர்ந்து மே 10., 1940 அன்று நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரதமாராகப் பதவியேற்று பிரித்தானிய இராணுவத்தினரை அச்சு சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்தியன் மூலம் வெற்றியை நிலைநாட்டினார்.

1945 ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். மீண்டும் 1951 தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார் 1955 ல் ஒய்வு பெறும் வரை பதவியில் தொடர்ந்தார். இரண்டாம் இராணி எலிசபெத் ஆல் இலண்டன் கோமகன் (Duke of London) பதவி வழங்க விருப்பம் தெரிவித்தார் ஆனால் சர்ச்சிலின் மகன் ராண்டால்ப் சர்ச்சில்- சர்ச்சிலின் மறைவுக்குப் பின் மரபுரிமைப் பெறுவார் என்று எழுந்த எதிர்ப்பலையால் அம்முயற்சி கைவிடப்பட்டது. இராணி சர்ச்சிலின் இறப்பை இராச்சியத்தின் துயரமாக அனுசரிக்க ஆணையிட்டு சர்ச்சிலுக்கு இறுதி மரியாதை செய்தார்.

இலக்கியத்திற்கான நோபெல் பரிசு பெற்ற ஒரே பிரித்தானியப் பிரதமர் இவரே. அதுமட்டுமன்றி ஐக்கிய அமெரிக்காவின் கௌரவ குடியுரிமை வழங்கப்பட்ட இரண்டாவது நபரும் இவரே.



வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்ஸ்டன்_சர்ச்சில்&oldid=1308180" இலிருந்து மீள்விக்கப்பட்டது