பேச்சு:வின்ஸ்டன் சர்ச்சில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg வின்ஸ்டன் சர்ச்சில் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

இதில் சரிதான் மகர ஜோதியை மட்டும் மகர சோதி என்று மாற்றுகிறீர்கள் ஒரே மாதிரி கையாளுங்கள். தீடிரென்று வடமொழி எழுத்தை எடுக்கிறீர்கள் தீடீரென்று சேர்க்கீறீர்கள் ஒன்றுமே புரியவிஃலை--செல்வம் தமிழ் 02:56, 24 பெப்ரவரி 2009 (UTC)

ஒரு வேளை எதாவது நாம் செய்யவேண்டும் என்று செய்கிறீர்களா எனத் தெரியவில்லை.--செல்வம் தமிழ் 02:56, 24 பெப்ரவரி 2009 (UTC)

வெகு நாளாக வின்ஸ்ரன் சேர்ச்சில் என்று இருந்தது நண்பருக்குத் தெரியவில்லை இந்தத் தலைப்பைத் தேடி அலையோ அலை என்று அலைந்தேன். தலைப்புக்களை எதாவது முன்மாதிரி வைத்து ஒரே மாதிரி மாற்றவும் இதனால் பக்கத்திற்கு இணைப்பு கொடுக்கும் பொழுது மிகுந்தச் சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது.--செல்வம் தமிழ் 03:41, 24 பெப்ரவரி 2009 (UTC)

செல்வம் தமிழ், உங்கள் கவலை புரிகின்றது. சோதி என்பது தமிழ் வழக்குதான். ஜோதி என்றும் சிலர் எழுதுகிறார்கள். இதே போல சாதி-ஜாதி, சகன்னாதன் -ஜகன்னாதன் என்று பற்பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. கூடிய மட்டிலும் கிரந்தம் விடுத்து எழுதுவது நல்லது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆகவே மகர சோதி என்று திருத்துகிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சில் என்னும் இத்தலைப்பைக் கூட வின்சிட்டன் சர்ச்சில் என்று எழுதினால் ஒன்றும் குறை இல்லை. தூத்துக்குடியை டூட்டுக்கோரின் என்று ஆங்கிலேயன் எழுதவில்லையா? தலைப்பை வின்சிட்டன் சர்ச்சில் என்று மாற்றலாம். ஆனால் தேடு பொறிகளில் கிட்டுமாறு, வின்ஸ்டன் சர்ச்சில் என்னும் எழுத்துக்கூட்டலுக்கும் வழிமாற்று தரலாம். --செல்வா 03:57, 24 பெப்ரவரி 2009 (UTC)
செல்வம், தேவையில்லாத கிரந்தங்களைத் தவிர்ப்பது நல்லது என்ற கொள்கையே தற்போது தமிழ் விக்கியில் நடைமுறையில் உள்ளது. மகர ஜோதி என்பதை மகர சோதி என்றெழுதினால் தமிழர்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? மகர சோதி என்று எழுதி கூகுளில் தேடிப் பாருங்கள், புரியும். ஹிந்தியை இந்தி என்றெழுதுவது போல. அதற்காக (ஹி)ந்திக்காரர்கள் நம்முடன் கோபித்துக் கொள்ளப் போகிறார்களா?. சரி வின்ஸ்டன் சேர்ச்சிலுக்கு வருவோம். வின்ஸ்ரன் சேர்ச்சில் (ஈழத்து வழக்கு) என்றிருந்ததை நீங்கள் ஒருவருக்கும் சொல்லாமல் வின்சன்ட் சர்ச்சில் என்று மாற்றினீர்கள். ஒரு கிரந்தமும் இச்சொல்லில் இல்லைத் தான். ஆனால் அவரது பெயர் Vincent இல்லை Winston. அதனாலேயே அதனை வின்ஸ்டன் என மாற்றினேன். செல்வா சொன்னது போல வின்சிட்டன் என மாற்றுவதில் எனக்கு உடன்பாடே. இப்படி விக்கியில் இருக்கும் அனைத்து கிரந்த எழுத்துக்களையும் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் போது கவனித்து மாற்ற வேண்டும். மீண்டும் மகர ஜோதிக்கு வருவோம். அதன் தலைப்பை மகர சோதி என மீண்டும் மாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \பேச்சு 10:17, 24 பெப்ரவரி 2009 (UTC)
வின்சிட்டன் சர்ச்சில் என்றும் மகர சோதி என்றும் தலைப்புகளை மாற்றப் பரிந்துரைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 15:03, 24 பெப்ரவரி 2009 (UTC)

கலை இந்தக் கட்டுரையில் உள்ள நோபல் பரிசு பெற்றோர் விவரத் தொகுப்பை நீக்கலாமா? --மகாலிங்கம் (பேச்சு) 05:43, 17 சூன் 2017 (UTC)-

ஏன் நீக்கக் கேட்கிறீர்கள் என்பது புரியவில்லையே. --கலை (பேச்சு) 06:11, 17 சூன் 2017 (UTC)
அவசியம் சேர்க்கப்பட வேண்டியது. சுருக்கிய முறையில் இப்போதுள்ளது போலக் காட்டலாம்.--Kanags \உரையாடுக 06:14, 17 சூன் 2017 (UTC)