சிந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மராத்திய அரச குலங்கள்
சிந்தியா அல்லது சிண்டே – (शिंदे)
குலப் பெயர் சிந்தியா அல்லது சிண்டே
Caste 96k Maratha
வம்சம் நாகர் வம்சத்தின் கிளை
Heraldic Title: பிரபாகர வர்மா
சமயம்: இந்து
Original kingdom ரந்தம்பூர்
பிற இராச்சியங்கள் குவாலியர், உஜ்ஜைன்,
தலைநகரங்கள் சாத்தாரா
நிறம் சிவப்பு
சின்னம் பாம்புக் கொடி
குல தெய்வம் மகாதேவர்
குல தேவதை துளஜா பவானி
குரு கௌண்டின்யர்.
கோத்திரம் கௌண்டின்ய கோத்திரம்
வேதம் ரிக் வேதம்
மந்திரம் காயத்திரி மந்திரம்
பிரவார் ஆங்கீரசர், பிரகஸ்பதி மற்றும் கௌண்டின்யர்
வெற்றிக்கான ஆயுதம் வாள்
குஹ்யசூத்திரம் பராஸ்கா
வாழ்விடங்கள் மகாராட்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் இராஜஸ்தான்
மொழிகள் மராத்தி, குஜராத்தி, இந்தி மற்றும் சமஸ்கிருதம்
ரனோஜி சிந்தியா
அரண்மனையிலிருந்து குவாலியர் மன்னர், யானை மீது வருதல்
குவாலியர் மகாதாஜி சிந்தியா

சிந்தியா (Scindia/[[Shinde) மராத்திய அரச குலங்களில் ஒன்றாகும்.[1] மராத்திய சிந்திய வம்சத்தவர்கள், மராத்திய கூட்டமைப்பு பகுதிகளில் ஒன்றான குவாலியர், மால்வா மற்றும் உஜ்ஜைன் பகுதிகளைக் கொண்ட குவாலியர் அரசை 1731 முதல் 1948 முடிய ஆண்டனர்.

1817 – 1818ல் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாம் ஆங்கிலேய-மராட்டியப் போரில், குவாலியர் படைகளுடன், போன்சலே, ஓல்கர் மற்றும் கெயிக்வாட் வம்ச மன்னர்களின் படைகளும் கலந்து கொண்டனர். இப்படைகள் கிழக்கிந்தியக் கம்பெனி படைகளிடம் தோற்றது. பின்னர் ஆங்கிலேயர்கள் வகுத்த துணைப்படைத் திட்டத்தை சிந்தியா வம்சத்தவர்கள் ஏற்றுக் கொண்டு, 1818 முதல் சுதேச சமஸ்தான மன்னர்களாக தங்கள் நாட்டை ஆண்டனர். பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948ல் இந்தியாவுடன் சிந்தியா வம்சத்தின் குவாலியர் அரசு இணைக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

சிந்தியா வம்சத்தை நிறுவியவர் மராத்தியப் பேரரசின் படைத்தலைவர் ரானோஜி சிந்தியா ஆவார். மராத்தியப் பேரரசை விரிவாக்கம் செய்வதற்கு பேஷ்வா பாஜிராவின் ஆனையின் படி, 1726ல் மால்வாவைக் கைப்பற்றி உஜ்ஜைன் நகரத்தை 1731ல் தலைநகராகக் கொண்டு குவாலியர் அரசை நிறுவினார். மூன்று ஆங்கிலேய-மராட்டியப் போர்களை சந்தித்த, சிந்தியா வம்சத்தவர்கள், மேற்கிந்தியா, வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் இராஜபுத்திர மன்னர்களை வென்று மராத்தியப் பேரரசை விரிவாக்கியவர்கள்

1818ல் நடைபெற்ற மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில், கிழக்கிந்திய கம்பெனியிடம் தோல்வி கண்ட சிந்தியா வம்ச மன்னர் தௌலத்ராவ் சிந்தியா, அஜ்மீரை ஆங்கிலேயருக்கு வழங்கி, கம்பெனி ஆட்சியிடம் அடங்கி நடக்கும் சுதேச சமஸ்தான மன்னராக குவாலியர் அரசை ஆண்டார். 1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் சிந்தியா வம்சத்தினர் ஆண்ட குவாலியர் அரசு, 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

குவாலியர் மகாராஜாக்கள்[தொகு]

மராத்திய சிந்தியா குல குவாலியர் இராச்சிய மன்னர்கள் தங்களை மகாராஜாக்கள் என அழைத்துக் கொண்டனர்.

  • 1731 - 19 சூலை 1745 ரானோஜிராவ் சிந்தியா (இறப்பு 1745)
  • 19 சூலை 1745 - 25 சூலை 1755 ஜெயப்பாராவ் சிந்தியா (இறப்பு 1755)
  • 25 சூலை 1755 - 15 சனவரி 1761 ஜன்கோஜிராவ் சிந்தியா (b. 1745 - d. 1761)
  • 25 சூலை 1755 - 10 சனவரி 1760 தத்தாஜி (பொறுப்பு) (d. 1760)
  • 15 சனவரி 1761 - 25 நவம்பர் 1763 (காலிப்பணியிடம்)
  • 25 நவம்பர் 1763 - 10 சூலை 1764 கேதர்ஜிராவ் சிந்தியா
  • 10 சூலை 1764 - 18 சனவரி 1768 மனாஜிராவ் சிந்தியா (d. af.1777)
  • 18 சனவரி 1768 - 12 பிப்ரவரி 1794 முதலாம் மகாதேவ்ராவ் சிந்தியா (b. c.1727 - d. 1794)
  • 12 பிப்ரவரி 1794 - 21 மார்ச் 1827 தௌதத்ராவ் சிந்தியா (b. 1779 - d. 1827)
  • 21 மார்ச் 1827 - 17 சூன் 1827 மகாராணி பாய்ஜா (பெண்) -முகவர் (b. 1787 - d. 1862)
  • 17 சூன் 1827 - 7 பிப்ரவரி 1843 (முதல் முறை)
  • 17 சூன் 1827 - 7 பிப்ரவரி 1843 இரண்டாம் ஜங்கோஜிராவ் சிந்தியா (சிவாஜிராவ் சிந்தியா) (b. 1805 - d. 1843)
  • 17 சூன் 1827 - டிசம்பர் 1832 மகாராணி பாய்ஜா பாய் (f) - முகவர் (s.a.) (இரண்டாம் முறை)
  • 7 பிப்ரவரி 1843 - 20 சூன் 1886 ஜெயாஜிராவ் சிந்தியா (b. 1835 - d. 1886)
  • 7 பிப்ரவரி 1843 - 13 சனவரி 1844 மகாராணி தாரா பாய் - முகவர் (b. 1831 - d. ....)
  • 1843 - சனவரி 1844 தாதா காஷ்ஜிவாலா (கிளர்ச்சிக்குப் பின்)
  • 20 சூன் 1886 - 5 சூன் 1925 இரண்டாம் மாதவராவ் சிந்தியா (b. 1876 - d. 1925)
  • 17 ஆகஸ்டு 1886 - 15 டிசம்பர் 1894 மகாராணி சாக்கிய பாய் - முகவர் (b. 1862 - d. 1919)
  • 5 சூன் 1925 - 15 ஆகஸ்டு 1947 ஜார்ஜ் சிவாஜி ராவ் சிந்தியா (b. 1916 - d. 1961)
  • 5 சூன் 1925 – 23 நவம்பர் 1931 மகாராணி சிங்கு பாய் – முகவர் (d. 1931)
  • 23 நவம்பர் 1931 - 22 நவம்பர் 1936 மகாராணி கஜ்ஜிரா ராஜேபாய் - முகவர் (d. 1943)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தியா&oldid=3850440" இலிருந்து மீள்விக்கப்பட்டது