உள்ளடக்கத்துக்குச் செல்

சமரகான் மாவட்டம்

ஆள்கூறுகள்: 01°27′34″N 110°29′56″E / 1.45944°N 110.49889°E / 1.45944; 110.49889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமரகான் மாவட்டம்
Samarahan District
சரவாக்
சமரகான் மாவட்டம் is located in மலேசியா
சமரகான் மாவட்டம்
      சமரகான் மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 01°27′34″N 110°29′56″E / 1.45944°N 110.49889°E / 1.45944; 110.49889
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுசமரகான் பிரிவு
மாவட்டம்சமரகான் மாவட்டம்
நிர்வாக மையம்சமரகான் நகரம்
மாநகராட்சிகள்1. கோத்தா சமரகான் நகராண்மைக் கழகம்
Majlis Perbandaran Kota Samarahan (MPKS)
2. சிமுஞ்சான் மாவட்ட மன்றம்
Majlis Daerah Simunjan (MDS)
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்QC
இணையதளம்mpks.sarawak.gov.my கோத்தா சமரகான் நகராட்சி மன்றம்
சமரகான் மாவட்ட வரைப்படம்

சமரகான் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Samarahan; ஆங்கிலம்: Samarahan District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சமரகான் பிரிவில் ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கோத்தா சமரகான் நகரம்.[1][2]

சமரகான் பிரிவில் நான்கு நிர்வாக மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் சமரகான் மாவட்டமும் ஒன்றாகும்.

பொது

[தொகு]

சமரகான் பிரிவின் நான்கு நிர்வாக மாவட்டங்களின் மொத்த மக்கள் தொகை 246,782 ஆகும். 2015 ஏப்ரல் 11-ஆம் தேதி, ஒரு புதிய பிரிவை உருவாக்குவதற்காக செரியான் மாவட்டம், சமரகான் பிரிவில் இருந்து பிரிக்கப்பட்டது.

சமரகான் பிரிவின் மக்கள்தொகை கலாசார அடிப்படையில் ஒரு கலவையாக உள்ளது. பெரும்பாலும் பிடாயூ, இபான், மலாய்க்காரர், சீனர் இனக்குழுவினர் மிகுதியாக வாழ்கின்றனர்.

கோத்தா சமரகான் நகராண்மைக் கழகம்

[தொகு]

சமரகான் மாவட்டம்; அசா ஜெயா (Asajaya) மாவட்டம்; சாடோங் ஜெயா (Sadong Jaya) துணை மாவட்டம்; ஆகியவை கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தின் (Kota Samarahan Municipal Council) அதிகாரத்தின் கீழ் வருகின்றன.[3]

2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, சமரகான் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 12,724 ஆகும். மேலும் கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தினால் நிர்வகிக்கப்படும் அனைத்து நகரங்களின் மக்கள் தொகை 85,495 ஆகும்.[4]

கோத்தா சமரகான்

[தொகு]

1983 ஆகஸ்டு 19-ஆம் தேதி முவாரா துவாங் எனும் துணை மாவட்டம் முழு மாவட்ட நிலைக்குத் தகுதி உயர்த்தப் பட்டது. அதன் பின்னர் சமரகான் மாவட்டம் என புதுப் பெயரில் மாற்றம் கண்டது.

மாவட்டத் தகுதி உயர்வுக்கு ஏற்ற வகையில், சமரகான் நகர்ப் பகுதியில் இருந்த முவாரா துவாங் சந்தையும் (Muara Tuang bazaar) ஒரு நகரம் எனும் தகுதிக்கு நிலை உயர்த்தப்பட்டது. அந்த வகையில் கோத்தா சமரகான் என்று இப்போது அனைவராலும் அறியப் படுகிறது.

பாத்தாங் சமரகான்

[தொகு]

சமரகான் மாவட்டத்தில், கோத்தா சமரகான் நகரம் மிக முக்கியமான நகரம். கோத்தா சமரகான் என்பது மலாய் மொழியில் சமரகான் நகரம் என்று பொருள்படும்.[5] சமரகான் மாவட்டத்தின் பெயரால் பெயரிடப்பட்டது.

இந்த நகரம் தொடக்கக் காலக் குடியேற்றத்தின் மையப் புள்ளியாக இருந்தது. அப்போது ஒரு முக்கிய நதியாக விளங்கிய பாத்தாங் சமரகான் எனும் பெயரில் இந்த நகரமும் அழைக்கப் படுகிறது.

சமரகான் மாவட்டக் காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Malaysia Districts". Statoids.com.
  2. "Malaysia: Administrative Division". City Population.
  3. "Laman Web Rasmi Majlis Perbandaran Kota Samarahan". mpks.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  4. "Sarawak Statistics Yearbook 2019". Buku Tahunan Perangkaan Sarawak / Yearbook of Statistics Sarawak (Department of Statistics, Malaysia): 17. December 2020. பன்னாட்டுத் தர தொடர் எண்:0128-7613. https://www.dosm.gov.my/. பார்த்த நாள்: 09 December 2021. 
  5. "kota in English". Glosbe.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Samarahan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமரகான்_மாவட்டம்&oldid=3648479" இலிருந்து மீள்விக்கப்பட்டது