உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன்ட் மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்ட் மேன்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுடேல்ஸ் டு ஆஸ்டோனிஷ் #35 (செப்டம்பர் 1962)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
லாரி லிபர்
ஜாக் கிர்பி
கதை தகவல்கள்
மாற்று முனைப்புஹாங்க் பிம்
ஸ்காட் லாங்
எரிக் ஓ கிராடி
குழு இணைப்புஅவென்ஜர்ஸ்
திறன்கள்
  • மனித சக்திக்கு அப்பாற்பட்டவன் மற்றும் சுறுசுறுப்பு
  • எறும்பியல் ஆராய்ச்சியில் சிறப்பு மிக்கவர்
  • சிறு உருவத்திலிருந்து 100 அடி பிரம்மாண்டமாக அளவு மாறுதல்
  • சுருங்கிய நிலையில் சாதாரண அளவின் வலிமையைப் பரிமாறுதல்

ஆன்ட் மேன் (எறும்பு மனிதன்) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இப்பாத்திரம் எழுத்தாளர்களான ஸ்டான் லீ, லாரி லிபர் மற்றும் ஜாக் கிர்பி ஆகியோரால் உருவாக்கப்பட்டது. ஆன்ட் மேனின் முதல் தோற்றம் செப்டம்பர் 1962 இல் இருந்தது டேல்ஸ் டு ஆஸ்டோனிஷ் #35 இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

எறும்பு மனிதன் கதாப்பாத்திரமான ஸ்காட் லாங் ஒரு புத்திசாலியான விஞ்ஞானி. இவரும் இவரின் குழுவும் அளவை மாற்றக்கூடிய ஒரு பொருளைக் கண்டுபிடித்தனர். ஒரு விபத்தில் இருந்து மீநாயகன் எறும்பு மனிதன் கதாபாத்திரமாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். ஆண்ட்-மேன் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் இவரின் கதாபாத்திரம் அறியப்பட்டது.

கற்பனையான கதாபாத்திர வாழ்க்கை வரலாறு

[தொகு]

பல ஆண்டுகளாக பல்வேறு கதாபாத்திரங்கள் எறும்பு மனிதன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டன, அவற்றில் பெரும்பாலானவை அவென்ஜர்ஸ்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஹாங்க் பிம்

[தொகு]

அசல் ஆன்ட் மேன் உயிர் இயற்பியலாளர் மற்றும் பாதுகாப்பு செயல்பாட்டு மைய நிபுணர். தனது முதல் மனைவி மரியா ட்ரோவயாவின் மரணத்திற்குப் பிறகு ஒரு மீநாயகனாக மாற முடிவு செய்தார்.[1][2]

ஸ்காட் லாங் ஒரு திருடன், அவர் தனது மகள் கசாண்ட்ரா "காஸ்ஸி" லாங்கை இதய நோயிலிருந்து இருந்து காப்பாற்ற எறும்பு மனிதன் உடையை திருடிய பிறகு ஆன்ட் மேன் ஆனார்.[3] தனது குற்ற வாழ்க்கையிலிருந்து சீர்திருத்தப்பட்ட லாங் என்பவர் ஹாங்க் பிம்மின் உதவியுடன் முழுநேர எறும்பு மனித வாழ்க்கையை மேற்கொண்டார். இவர் முதலில் பென்டாஸ்டிக் போர் குழுவுடன் உடன் இணைந்தார், பின்னர் அவென்ஜர்ஸ் குழுவில் முழுநேர உறுப்பினரானார்.[4]

எரிக் ஓ கிராடி

[தொகு]

எரிக் ஓ கிராடி ஆண்ட்-மேன் பட்டத்தை எடுக்கும் மூன்றாவது பாத்திரம். இவரின் வாழ்வில் மூன்று நெறிகள் பொய், ஏமாற்று, திருட மற்றும் கையாள விரும்பும் எரிக் தன்னுடைய சுயநலத் திட்டங்களுக்காக எறும்பு மனிதன் கவசத்தைத் திருடினார். அதில் பெண்களை கவர்ந்திழுக்க "மீநாயகன்" என்ற அந்தஸ்தைப் பயன்படுத தொடங்கினார்.

திரைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Henry Pym Biography". IGN. Archived from the original on சனவரி 26, 2013. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 18, 2011. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Secret Invasion Illumination". Marvel.com. May 30, 2008. Archived from the original on January 28, 2013. பார்க்கப்பட்ட நாள் April 18, 2011.
  3. "Ant Man (Scott Lang) Biography". IGN. Archived from the original on செப்டெம்பர் 2, 2012. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 18, 2011. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "Take 10: Replacement FF Members". Marvel.com. ஆகத்து 25, 2010. Archived from the original on ஏப்பிரல் 12, 2011. பார்க்கப்பட்ட நாள் ஏப்பிரல் 18, 2011.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்ட்_மேன்&oldid=3791925" இலிருந்து மீள்விக்கப்பட்டது