லுத்யானைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லுத்யானைடீ
Paddletail melb aquarium.jpg
லுத்யானசு கிப்பசு (Lutjanus gibbus)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: லுத்யானைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

லுத்யானைடீ (Lutjanidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை பெரும்பாலும் கடல் மீன்கள் ஆயினும், கயவாய்ப் (ஆற்றுக் கழிமுகம்) பகுதிகளில் வாழும் சில இனங்கள் உணவுக்காக நன்னீருக்குச் செல்கின்றன. இக் குடும்பத்து இனங்கள் பல உணவாகக் கொள்ளப்படுகின்றன.

இவை எல்லாப் பெருங்கடல்களினதும் வெப்பவலய, துணை வெப்பவலயப் பகுதிகளில் காணப்படுகின்றன. பெரும்பாலானவை புறவோட்டு உயிரினங்களை அல்லது பிற மீன்களை இரையாகக் கொள்கின்றன. மிதவைவாழிகளை உணவாகக் கொள்ளும் சில இனங்களும் இக் குடும்பத்தில் உள்ளன. இவை காட்சியகங்களில் வைக்கப்படுவது உண்டு எனினும், இவை மிக விரைவாக வளர்வதால் இவை அதிகம் விரும்பப்படுவது இல்லை. இவை பொதுவாக 450 மீட்டர் ஆழம் வரை வாழ்கின்றன.

வகைப்பாடு[தொகு]

இக் குடும்பத்தில் தற்போது 16 பேரினங்களுக்குள் அடங்கும் 100 இனங்கள் உள்ளன. இப் பதினாறு பேரினங்களும் பின்வருமாறு:


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லுத்யானைடீ&oldid=1374163" இருந்து மீள்விக்கப்பட்டது