யோகசிக உபநிடதம்
யோகசிக | |
---|---|
தேவநாகரி | योगशिखा |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு | யோகசிக |
உபநிடத வகை | யோகக் கலை[2] |
தொடர்பான வேதம் | யசுர் வேதம் அல்லது அதர்வண வேதம் |
அத்தியாயங்கள் | கையெழுத்துப் பிரதிகளால் மாறுபடுகிறது (~10 to 390) |
அடிப்படைத் தத்துவம் | யோகக் கலை, வேதாந்தம்[3] |
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
யோகசிக உபநிடதம் ( Yogashikha Upanishad) என்பது சமசுகிருதத்தில் இயற்றப்பட்ட இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும். [4] இது நான்கு வேதங்களில் உள்ள இருபது யோக உபநிடதங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[5]
இதன் இரண்டு பதிப்புகள் கிடைத்துள்ளன. சில தொகுப்புகளில் அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்ட ஒரு குறிப்பும் காணப்படுகிறது. [6] தெலுங்கு மொழித் தொகுப்புகளில் யசுர் வேதத்துடன் இணைக்கப்பட்ட நீண்ட பதிப்பும் காணப்படுகின்றன. [7] நீண்ட பதிப்பு ஆறு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. [8] இது குறுகிய பதிப்பை விட நாற்பது மடங்கு நீளமானது.[1] குறுகிய பதிப்பு நீண்ட பதிப்பின் முதல் அத்தியாயத்திற்குள் குறுக்கிடப்படுகிறது.[1]
வரலாறு
[தொகு]யோகசிகம் என்பது ஒரு பழங்கால நூல் என உருமேனிய வரலாற்றாசிரியர் மிர்சியா எலியாட் கூறுகிறார். அவர் ஒரு தொடர்புடைய காலவரிசையை பரிந்துரைக்கிறார். பின்வரும் இந்து சமய நூல்கள் இயற்றப்பட்ட அதே காலகட்டத்தை அவர் தேதியிட்டார் - மைத்ராயனிய உபநிடதம், மகாபாரதத்தின் போதனை பகுதிகள், தலைமை சந்நியாச உபநிடதங்கள் மற்றும் பிற ஆரம்பகால யோக உபநிடதங்களான பிரம்மபிந்து, பிரம்மவித்யம், தேஜோபிந்து, யோகதத்வம், நாதபிந்து, சுரிகா, தியானபிந்து மற்றும் அமிர்தபிந்து ஆகியன. [9] யோகசிக உபநிடதத்துடன் கூடிய இந்த நூல்கள், பத்து அல்லது பதினொரு யோக உபநிடதங்களான யோக-குண்டலி, வராகம் மற்றும் பாசுபதபிரம்ம உபநிடதங்களை விட முன்னதாகவே இயற்றப்பட்டவை என்று எலியாட் கூறுகிறார்.[9] கவின் பிளட் இந்த உரையை மற்ற யோக உபநிடதங்களுடன் சேர்த்து, கிமு 100 முதல் கிபி 300 வரை இருக்கலாம் என்று தேதியிட்டார்.[10]
உரையின் சில கையெழுத்துப் பிரதிகள் யோக-சிகோபநிடதம் என்று பெயரிடப்பட்டுள்ளன.[11] 108 உபநிடதங்களின் நவீன சகாப்தத் தொகுப்பில் இராமனால் அனுமனுக்குக் கூறப்பட்ட முக்திகா நியதியின் தொடர் வரிசையில் இது 63 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[12]வட இந்தியாவில் பிரபலமான 52 உபநிடதங்களின் கோல்ப்ரூக்கின் பதிப்பில், இது 22 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[13] தென்னிந்தியாவில் பிரபலமான நாராயண வரிசை, இந்த உபநிடதத்தை பிப்லியோதிகா இண்டிகாவில் 22 வது இடத்தில் கொண்டுள்ளது.[14] 1656 ஆம் ஆண்டு சுல்தான் முகமது தாரா சிக்கோவால் "ஊபனேகட்" என்ற தலைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளது.[15] ஆலன் தேனியலின் கருத்துப்படி, இந்த உபநிடதம் 12 ராஜயோக உபநிடதங்களில் ஒன்றாகும். அவற்றில் ஏழு கிருஷ்ண யசுர் வேதத்துடனும் ஐந்து சுக்ல யசுர்வேதத்துடனும் இணைக்கப்பட்டுள்ளன.[16]
12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்ள கலைக்களஞ்சிய நூலான மனசொல்லாசா, [17] மற்றும் யோகபீஜம் போன்ற ஹத யோக இலக்கியத்தின் பிரிவு 1.2 போன்ற இடைக்கால இந்து இலக்கியங்களில் இந்த உரை தாக்கத்தை ஏற்படுத்தியது. [18]
உள்ளடக்கம்
[தொகு]கவிதை வசன நடையில் உரை இயற்றப்பட்டுள்ளது.[19] அத்தியாயம் 1, மிக நீண்டது, வீடுபேறு அடைவதில் யோகாவின் பங்கு பற்றிய விவாதத்தை உள்ளடக்கியது. அதாவது வாழும் போது விடுதலை ( ஜீவன்முக்தி ), மற்றும் அதை விதேகமுக்தி (மறுவாழ்வில் விடுதலை) உடன் வேறுபடுத்துகிறது.[20][21] முதல் அத்தியாயம் ஓம் என்பது மமூல மந்திரம் என்று வலியுறுத்துகிறது. மேலும் அது ஆண்பால் சிவமாகவும் ஒரு பகுதி பெண் சக்தியாகவும் விவரிக்கிறது.[22] கோபம், பேராசை மற்றும் இத்தகைய உளவியல் நிலைகள் இறுதியில் துக்கத்திற்கு இட்டுச்செல்லும் குறைபாடுகள் என்றும், தூய்மையான உயிரினம் இவற்றுக்கு அப்பாற்பட்டது என்றும், ஒரே நேரத்தில் அறிவு மற்றும் யோகத்தைப் பின்தொடர்வதன் மூலம் மட்டுமே அடைய முடியும் என்றும் அது வலியுறுத்துகிறது. [23]
யோகசிக உபநிடதத்தின் தெலுங்கு மொழித் தொகுப்புப் பதிப்பானது ஞான- யோகம் (அறிவின் பாதை) பற்றிய விவாதத்திற்கு குறிப்பிடத்தக்கது.[24][3]
உரையின் 1 மற்றும் 5 அத்தியாயங்கள் ஆறு வகையான யோகா, குண்டலினி மற்றும் மனித உடலில் உள்ள ஐந்து நெருப்புகளைப் பற்றி விவாதிக்கின்றன. [25][26] ஹத யோகப் பயிற்சியுடன் ஆறு சக்கரங்கள் பற்றிய விழிப்புணர்வு ஆன்மீக அனுபவத்தின் ஒரு வடிவம் என்று அது வலியுறுத்துகிறது. [27] மனித உடலை, பிரம்மமாக, விஷ்ணுவின் கோவிலாக (உருவகமாக) உரையை வலியுறுத்துகிறது.[21][28] ஒருவரின் நித்திய ஆன்மா தற்காலிக உடலைப் போலவே இருப்பதாகக் கருதுவது தவறானது.[29][30]
மூலாதார சக்கரத்தில் அமைந்துள்ள குண்டலினியின் முதல் முடிச்சு, பிரம்ம கிரந்தி என்று உபநிடதம் விளக்குகிறது.[31] தாந்த்ரீக நூல்கள் யோகாசிக உபநிடதத்தில் இருந்து வேறுபட்டவை என்று ஹரிஷ் ஜோஹ்ரி கூறுகிறார். ஏனெனில் அவை பிரம்ம கிரந்தியை மூன்றாவது சக்கரமான மணிப்பூர சக்கரத்தில் நிலைநிறுத்துவதை அடையாளப்படுத்துகின்றன.[31] யோகக் கலை என்பது ஒரு பயணம். மேலும் ஒரு குருவுடன் ஒரு நிலையான ஆன்மீக பயிற்சியை பரிந்துரைக்கிறது[32][33] என ஜெர்மானிய இந்தியவியலாளர் ஜோர்ஜ் ஃபியூர்ஸ்டீன் கூறுகிறார்.
உபநிடதம் ஒருவரின் குருவை ஆன்மீக வழிகாட்டி என்றும் பக்திக்கு தகுதியானவர் என்றும் அழைக்கிறது. குருவை பிரம்மன், விஷ்ணு, அச்சுதன், ஒருவரின் ஆன்மாவுக்கு ஒத்தவர் என்று புகழ்ந்து, பிரபஞ்சத்தில் ஒருவரின் குருவை விட பெரியவர் யாரும் இல்லை என்று அறிவிக்கிறது.[34] ஈஸ்வரன் மற்றும் குருவின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் பெரியவர்களாக மாறுவார்கள் என்று 2.22 வசனம் கூறுகிறது. [34] உபநிடதத்தின் கடைசி அத்தியாயம் தியானத்தின் மிக உயர்ந்த சுயமான ஆன்மா மற்றும் ஓம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. [35]
இதனையும் பார்க்கவும்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Deussen 1997, ப. 709.
- ↑ Deussen 1997, ப. 567.
- ↑ 3.0 3.1 Larson & Bhattacharya 2008, ப. 620.
- ↑ Deussen 1997, ப. 557, 709.
- ↑ Ayyangar 1938, ப. vii.
- ↑ Deussen 1997, ப. 567–568.
- ↑ Ayyangar 1938, ப. 326–396.
- ↑ Ayyangar 1938, ப. 326–396; There are 178 verses in chapter 1 of the text, 22 in second, 25 verses in third, the fourth has 24, the fifth contains 62 while the sixth chapter has 79 verses..
- ↑ 9.0 9.1 Mircea Eliade (1970), Yoga: Immortality and Freedom, Princeton University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691017646, pages 128–129
- ↑ Flood 1996, ப. 96.
- ↑ Ayyangar 1938, ப. 22.
- ↑ Deussen 1997, ப. 556–557.
- ↑ Deussen 1997, ப. 561.
- ↑ Deussen 1997, ப. 562.
- ↑ Deussen 1997, ப. 558–59.
- ↑ Daniélou 1991, ப. 168.
- ↑ White 2012, ப. 131, 420.
- ↑ Christian Bouy (1994), Les Natha-Yogin et les Upanisads, Publications de l'Institut de Civilisation Indienne No. 62, Paris: De Boccard, pages 112–114 (in French)
- ↑ Deussen 2010, ப. 26.
- ↑ Ayyangar 1938, ப. 354–358.
- ↑ 21.0 21.1 Larson & Bhattacharya 2008, ப. 621–622.
- ↑ Ellen Goldberg (2002), The Lord Who Is Half Woman: Ardhanarisvara in Indian and Feminist Perspective, State University of New York Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0791453254, pages 86–87
- ↑ Larson & Bhattacharya 2008, ப. 620–621.
- ↑ Ayyangar 1938, ப. 326–327.
- ↑ Ayyangar 1938, ப. 375–380.
- ↑ Guy Beck (1995), Sonic Theology: Hinduism and Sacred Sound, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120812611, page 94-95
- ↑ Booth 2014, ப. 489.
- ↑ Hattangadi 2000, ப. पञ्चमोऽध्यायः.
- ↑ Larson & Bhattacharya 2008, ப. 622.
- ↑ Hattangadi 2000, ப. चतुर्थोऽध्यायः ४,२१:२४.
- ↑ 31.0 31.1 Johari 2000, ப. 72.
- ↑ Feuerstein 1989, ப. 6, 22–26, 41.
- ↑ Feuerstein 1998, ப. 381–382.
- ↑ 34.0 34.1 Ayyangar 1938, ப. 382.
- ↑ Larson & Bhattacharya 2008, ப. 623.
உசாத்துணை
[தொகு]- Ayyangar, TR Srinivasa (1938). The Yoga Upanishads. The Adyar Library.
- Booth, Mark (11 February 2014). The Sacred History: How Angels, Mystics and Higher Intelligence Made Our World. Simon and Schuster. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4516-9856-5.
- Daniélou, Alain (1 August 1991). Yoga: Mastering the Secrets of Matter and the Universe. Inner Traditions / Bear & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89281-301-8.
- Deussen, Paul (1997). Sixty Upanishads of the Veda. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1467-7.
- Deussen, Paul (2010). The Philosophy of the Upanishads. Oxford University Press (Reprinted by Cosimo). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61640-239-6.
- Feuerstein, Georg (1989). Yoga: The Technology of Ecstasy. J.P. Tarcher. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87477-525-9.
- Feuerstein, Georg (1998). The Yoga Tradition: Its History, Literature, Philosophy and Practice. Hohm Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0934252836.
- Flood, Gavin D. (1996), An Introduction to Hinduism, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521438780
- Hattangadi, Sunder (2000). "योगशिखोपनिषत् (Yogashikha Upanishad)" (PDF) (in சமஸ்கிருதம்). பார்க்கப்பட்ட நாள் 16 January 2016.
- Johari, Harish (1 September 2000). Chakras: Energy Centers of Transformation. Inner Traditions / Bear & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59477-909-1.
- Kempton, Sally (1 February 2011). Meditation for the Love of It: Enjoying Your Own Deepest Experience. Sounds True. p. 191. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60407-329-4.
- Larson, Gerald James; Bhattacharya, Ram Shankar (2008). Yoga : India's Philosophy of Meditation. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-3349-4.
- White, David Gordon (2012). The Alchemical Body: Siddha Traditions in Medieval India. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226149349.