உள்ளடக்கத்துக்குச் செல்

மூன்றாம் சோமேசுவரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்றாம் சோமேசுவரன் (Somesvara III, ஆட்சிக்காலம்: 1126-1138 ) என்பவன் ஒரு மேலைச் சாளுக்கிய மன்னனாவான். இவன் ஆறாம் விக்கிரமாதித்தன், அவனது அரசி சந்தலாதேவி ஆகியோரின் மகனாவான். மூன்றாம் சோமேசுவரன் ஹொய்சள மன்னன் விட்டுணுவர்தனின் படையெடுத்தபோது அவனை எதிர்த்து அடக்கினான் வேங்கியின் கீழைச் சாளுக்கியர் சுதந்திரம் பெற முயன்றபோது தனது ஆட்சிக்குட்பட்ட சில பகுதிகளை இழந்தான். எனினும் தனது தந்தை விட்டுச் சென்ற பெரும் பேரரசைப் பாதுகாக்க முடிந்தது. இவன் ஒரு சமஸ்கிருத அறிஞனாவும் இருந்தான். சமஸ்கிருதத்தில் இலக்கியங்களையும் படைத்தான். இவன் திரிபுவனமல்லன், பூலோகமல்லன், சர்வனியபூபா போன்ற பட்டங்களைப் பூண்டிருந்தான். மேலும் சமஸ்கிருதத்தில் தனது தந்தை ஆறாம் விக்ரமாதித்தனின் வாழ்க்கை வரலாறை "விக்ரமன்நபையுதையா" (Vikramankabhyudaya) என்ற பெயரில் எழுதினான். இந்நூல் வழியாக அக்கால கர்நாடகத்தின் வரலாற்றையும் மக்களைப் பற்றியும் அறியலாம்.[1]

மேற்கோள்

[தொகு]
  1. A Textbook of Historiography, 500 B.C. to A.D. 2000 by E. Sreedharan, p.328, Orient Blackswan, (2004) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-2657-6


முன்னர் மூன்றாம் சோமேசுவரன்
1126–1138
பின்னர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_சோமேசுவரன்&oldid=2698299" இலிருந்து மீள்விக்கப்பட்டது