உள்ளடக்கத்துக்குச் செல்

மூலம் (ஆதாரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூலாதார சக்கரம்

மூலம் (Sanskrit: मूलाधार, மூலாதாரம்) என்பது சித்தரியலில் இடம்பெறுகின்ற ஆறு ஆதாரங்களில் முதன்மையானதாகும். இது மூலாதாரம் என்று வழங்கப்பெறுகிறது. இதன் பொருள் உடலுக்கு முதல் ஆதாரம் என்பதாகும். உறங்கும் நிலையில் குண்டலினி சக்தியானது உறையும் இடமாக மூலாதாரம் சொல்லப்படுகின்றது.

உடற்பகுதி

[தொகு]

ஆண் உடலில் தண்டுவடதின் அடிப்பகுதியில், பிறப்புறுப்புகளுக்கும், மலத்துவாரத்திற்கும் இடையே அமைந்துள்ளது. பெண் உடலில் கருப்பையின் கழுத்துப்பகுதியில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்

[தொகு]

மூலம் : வேர் அல்லது ஆதாரம் ; ஆதாரம்: இடம் அல்லது மையம். வேர்ப்பகுதி சுழல் மையம் எனலாம்.

குறியீடுகள்

[தொகு]

மூலாதாரம் நான்கு இதழ்களையுடைய அடர்சிவப்பு தாமரை மலராக உருவகப்படுத்தப் படுகிறது. தாமரை இதழ்களின் மையப்பகுதியில் மஞ்சள் நிற சதுரம் உள்ளது. சதுரத்தின் மத்தியில், படைக்கும் ஆற்றலின் சின்னமாக ஒரு தலைகீழ் சிவப்பு முக்கோணம் உள்ளது. முக்கோணத்தினுள் மனிதனுடைய ஆவி உடலின் சின்னமாக புகை வண்ணத்தில் சுயம்பு லிங்கம் உள்ளது. உறங்கும் நிலையில் உள்ள குண்டலினியை சித்தரிக்கும் வகையில் சென்னிற பாம்பு மூன்றரை முறை தன்னுடைய வாலால் லிங்கத்தை சுற்றி வளைத்துள்ளது. ஏழு துதிக்கைகளையுடைய ஒரு யானையால் சிவப்பு முக்கோணம் தாங்கப்படுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

கருவி நூல்

[தொகு]

சித்தர்கள் - இளமுனைவர் தமிழப்பிரியன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலம்_(ஆதாரம்)&oldid=4452784" இலிருந்து மீள்விக்கப்பட்டது