மைத்ராயனிய உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராட்டிராவின் புனேவில் (சமஸ்கிருதம், தேவநாகரி) கிடைத்த மைத்ராயனிய உபநிஷத் கையெழுத்துப் பிரதியின் ஒரு பக்கம்
மைத்ரி உட்பட பல முக்கிய உபநிடதங்களில் ஓம் சின்னத்தின் முக்கியத்துவம் விவாதிக்கப்படுகிறது.

மைத்ராயனிய உபநிடதம் (Maitrayaniya Upanishad) ( சமக்கிருதம்: मैत्रायणीय उपनिषद् ) என்பது யசுர்வேதத்தில் இணைக்கப்பட்டுள்ள ஒரு பழங்கால சமசுகிருத நூல் ஆகும்.[1][2] இது மைத்ரி உபநிடதம் என்றும் அழைக்கப்படுகிறது. இராமனால் அனுமனுக்கு விவரிக்கப்பட்ட முக்திகா என்ற நியதியின் 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பில், இது 24 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இது யசுர்வேதத்தின் மைத்ராயன பள்ளியுடன் தொடர்புடையது.[1][2] இது "கருப்பு" யசுர்வேதத்தின் ஒரு பகுதியாகும், "கருப்பு" என்பது யசுர்வேதத்தில் உள்ள உள்ளடக்கத்தின் "ஒழுங்கமைக்கப்படாத, வண்ணமயமான சேகரிப்பு" என்பதைக் குறிக்கிறது, "வெள்ளை" (நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட) யசுர்வேதத்திற்கு மாறாக, பிரகதாரண்யக உபநிடதம் மற்றும் ஈசா வாஸ்ய உபநிடதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மைத்ராயனிய உபநிடதத்தின் காலவரிசை அறியப்படவில்லை. ஆனால் பொதுவாக ஒரு பிற்கால உபநிடத அமைப்பு என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது.[3]

இது ஏழு பிரபந்தங்களைக் (பாடங்கள்) கொண்டுள்ளது. முதல் பிரபதகம் என்பது அறிமுக உறையாகும். அடுத்த மூன்றும் கேள்வி-பதில் பாணியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆத்மா (சுயம் தொடர்பான மனோதத்துவ கேள்விகளைப் பற்றி விவாதிக்கிறது, ஐந்தாவது முதல் ஏழாவது பிரபதகம் கூடுதல் தகவல்களை அளிக்கிறது.[4] இருப்பினும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட பல கையெழுத்துப் பிரதிகளில் குறைவான எண்ணிக்கையிலான பிரபதங்களே உள்ளன. தெலுங்கு மொழிப் பதிப்பில் நான்கு மட்டுமே கிடைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பதிப்பு ஒரு பகுதியை மட்டுமே காட்டுகிறது.[5] உபநிடதத்தின் உள்ளடக்கமும் அமைப்பும் பல்வேறு கையெழுத்துப் பிரதிகளில் வேறுபட்டுள்ளது. உபநிடதம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விரிவாக இடைக்கணிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. "தன்னைப் பற்றிய ஒரு மரியாதை, அதை ஒரு சில வார்த்தைகளில் சுருக்கமாகக் கூறலாம். (மனிதன்) சுயம் - அழியாத, அச்சமற்ற, பிரம்மம்" என மாக்ஸ் முல்லர் கூறுகிறார்.[5]

இது ஒரு முக்கியமான பண்டைய நூலாகும். அதன் விரிவாக்கப்பட்ட பதிப்பில், பௌத்தம், இந்து மதத்தின் சாங்கியம் மற்றும் யோப் பள்ளிகளின் கூறுகள் மற்றும் ஆசிரம அமைப்பு ஆகியவற்றிலும் காணப்படும் கோட்பாடுகள் பற்றிய குறிப்புகள்.[6] இது மிகவும் பழமையான சமசுகிருத நூல்களுக்கு ஆதாரமாகவும், அடிக்கடி மேற்கோள்களை காட்டும் ஆரம்பகால சமசுகிருத நூல்களில் ஒன்றுமாகும்.[7]

இதனையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Charles Johnston (1920-1931), The Mukhya Upanishads, Kshetra Books, ISBN 9781495946530 (Reprinted in 2014)
  2. 2.0 2.1 Paul Deussen, Sixty Upanishads of the Veda, Volume 1, Motilal Banarsidass, ISBN 978-8120814684, pages 327-386
  3. Stephen Phillips (2009), Yoga, Karma, and Rebirth: A Brief History and Philosophy, Columbia University Press, ISBN 978-0231144858, Chapter 1
  4. Paul Deussen, Sixty Upanishads of the Veda, Volume 1, Motilal Banarsidass, ISBN 978-8120814684ISBN 978-8120814684, pages 327-386
  5. 5.0 5.1 Max Muller, The Upanishads, Part 2, Maitrayana-Brahmana Upanishad Introduction, Oxford University Press, pages xliii-lii
  6. Paul Deussen, Sixty Upanishads of the Veda, Volume 1, Motilal Banarsidass, ISBN 978-8120814684, pages 328-329
  7. Maitri Upanishad - Sanskrit Text with English Translation EB Cowell (Translator), Cambridge University, Bibliotheca Indica, See Preface chapter pages iii-vii

உசாத்துணை[தொகு]

  • Cowell, E. B. (re-issue 1935). (tr.) The Maitri or Maitrāṇīya Upanishad, Calcutta: The Asiatic Society of Bengal

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைத்ராயனிய_உபநிடதம்&oldid=3913784" இலிருந்து மீள்விக்கப்பட்டது