மொடையூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மொடையூர்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. முருகேஷ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மொடையூர் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் தேவிகாபுரத்தில் இருந்து போளூர் செல்லும் சாலையில் 3 வது கி.மீ. தொலைவில் உள்ள கிராமம்[4]. இக்கிராமத்தில் சாலையோரங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கற்சிற்பக் கலைக்கூடங்கள் உள்ளன.

இவ்வூர் சிற்பக்கலைஞர்கள் நிறைந்த ஊர். இவ்வூரில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கற்சிற்பக் கலையை தங்கள் குலத் தொழிலாக கடந்த பத்து தலைமுறைகளாகச் செய்து வருகின்றனர். கருங்கல், பச்சைக்கல், கிரானைட் போன்ற கற்களைச் செதுக்கி பல்வேறு விதமான சிற்பங்களைச் செய்கிறார்கள். இவ்வூரில் செய்யப்படும் சிற்பங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. எனினும் இத்தொழிலில் தற்போது இளைஞர்கள் அவ்வளவாக அக்கறை காட்டாததினால் எதிர்காலத்தில் இவ்வூரில் இத்தொழிலின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. சிற்பம் செய்யும் போது ஏற்படும் மண்துகள்களால் சிற்பக்கலைஞர்களின் உடல்நலனும் பாதிக்கப்படுகிறது என்பதும் அதற்குத் தகுந்த வழிகாட்டுதல் ஏதும் தற்போது இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.

மொடையூர் சிற்பக்கலை
மொடையூர் சிற்பங்கள்
மொடையூர் சிற்பங்கள்1

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=06&centcode=0004&tlkname=Polur#MAP
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொடையூர்&oldid=1726329" இருந்து மீள்விக்கப்பட்டது