உள்ளடக்கத்துக்குச் செல்

பிலிப்சுபர்கு, சின்டு மார்தின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிலிப்சுபெர்கு, சின்டு மார்தின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிலிப்சுபர்கு
View on Great Bay towards Phillipsburg, Capital of St. Maarten
View on Great Bay towards Phillipsburg, Capital of St. Maarten
அடைபெயர்(கள்): நகரம்
State நெதர்லாந்து
நாடு சின்டு மார்தின்
தீவுசெயிண்ட் மார்ட்டின்
கொலம்பஸ் தரையிறங்கியது11 நவம்பர் 1493
நிறுவப்பட்டது1763 (ஜோன் பிலிப்ஸினால்)
மக்கள்தொகை
 (2011 சனத்தொகைக் கணக்கெடுப்பு)
 • மொத்தம்1,327

பிலிப்சுபர்கு, சின்டு மார்தின் (Philipsburg, Sint Maarten) என்பது சின்டு மார்தின் நாட்டின் முதன்மை நகரமும் தலை நகரமும் ஆகும். பெரிய உப்புக் குளம் [1] மற்றும் பெரிய குடாவிற்கு இடை நடுவே குறுகிய நீண்ட நிலத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. இந்நகரம் சின்டு மார்தின் தீவின் வர்த்தக மத்திய நிலையமும் ஆகும். 2011 ஆம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் இங்கு 1,327 குடியேற்ற வாசிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நகரிற்கு முதன்முதலில் சென்றவர் கொலம்பசு ஆவார். இந்நகரிற்கு 11 நவம்பர் 1493 ஆம் ஆண்டில் அவர் சென்றார். அவர் இந்நகரைக் கண்டறிய முன்பே இங்கு அரவாக் எனப்படும் பழங்குடியின மக்கள் குடியேறியிருந்தனர். இசுக்காட்டிசிய இடச்சுக் கடற்படைத் தலைவர் ஜோன் பிலிப்ஸினால் 1763 ஆம் ஆண்டினில் இந்நகரம் நிறுவப்பட்டது. பின்னர் பன்னாட்டு வர்த்தகத்தில் ஓர் பரபரப்பான நகரமாக இந்நகரம் மாறத்தொடங்கியது. இங்கு அம்ஸ்ரடாம் கோட்டை, விலம் கோட்டை எனும் இரு கோட்டைகள் காணப்படுகின்றன. இந்நகரத்தின் துறைமுகத்திற்கு செலிபிரிட்டி சொல்ஸ்டைஸ், கிரவுன் பிரின்சஸ், டிஸ்னி மஜிக், ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ் போன்ற பயணியர் கப்பல்கள் வந்து போயுள்ளன.

காலநிலை

[தொகு]

இந்நகரம் வரண்ட காலநிலையைக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. கோப்பென் காலநிலை வகைப்பாட்டிற்கு அமைவாக பிலிப்சுபர்கு அயன மண்டல சவன்னா காலநிலையைக் கொண்டுள்ளதாக வரையறுக்கப்பட்டுள்ளது.[2]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Photos of Great Salt Pond". பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2016.
  2. "Philipsburg, Sint Maarten Köppen Climate Classification (Weatherbase)". Weatherbase.