குசுதாவியா, செயின்ட் பார்த்தெலெமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குசுதாவியா
நகரம்
குஸ்தாவியா நகரம்
குசுதாவியா காட்சி
குசுதாவியா காட்சி
நாடுபிரான்சு
கடல்கடந்த தொகுப்புகள்செயிண்ட்-பார்த்தலெமி
நிறுவப்பட்டது1785
அரசு
 • ஆட்புல மன்றத் தலைவர்புருனோ மாக்ரசு
மக்கள்தொகை
 • மொத்தம்2,300
நேர வலயம்அத்திலாந்திக்கு

குசுதாவியா (Gustavia, ஒலிப்பு:குஸ்டாவியா) பிரான்சின் கடல்கடந்த ஆட்புலங்களில் ஒன்றான செயிண்ட்-பார்த்தலெமி தீவின் தலைநகரம் ஆகும். இது சுவீடனின் அரசர் மூன்றாம் குசுதாவின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

செயிண்ட்-பார்த்தலெமி தீவை பிரான்சு முதலில் 1648இல் உரிமை கோரியது. கோத்தென்பெர்கில் வணிகம் புரிய அனுமதியளித்ததற்கு மாற்றாக 1784ஆம் ஆண்டில் சுவீடனுக்கு கையளிக்கப்பட்டது. இதனை நிர்வகிக்க சுவீடன் சுவீடிய மேற்கிந்திய நிறுவனத்தை நிறுவியது. நெப்போலியப் போர்களின் போது வளர்ச்சி கண்ட இத்தீவு மீண்டும் பிரான்சிற்கே 1878இல் விற்கப்பட்டது.

குசுதாவியா தற்போதுள்ள இடம் பழுதடைந்த கப்பல்களுக்கு புகலிடம் வழங்கியதால் துவக்கத்தில் லெ கரீனேஜ் (கப்பல் பழுது பார்க்குமிடம்) எனப்பட்டது. குசுதாவியா என்ற பெயர் ஆவணங்களில் திசம்பர் 28, 1786க்கும் பெப்ரவரி 9, 1787க்கும் இடையே காணப்படுகின்றது. இப்பெயர் சுவீடிய ஆட்சிக்காலத்தை நிலைநிறுத்தும் வண்ணமாக உள்ளது.

துறைமுகத்தைக் காக்கும் விதமாக 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் மூன்று கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன: இவை முறையே ஆசுக்கர் (முன்னதாக குசுதாவ் அடோல்ஃப்), கார்ல் மற்றும் குசுதாவ் எனப் பெயரிடப்பட்டுள்ளன. துறைமுக வாயிலில் உள்ள ஆங்கில பேராயராட்சிகுட்பட்ட தேவாலயம் 1855இல் கட்டப்பட்டது.

வசதிகள்[தொகு]

நகரத்தின் தெற்கில் ஷெல் கடற்கரையை நோக்கியவாறுள்ள கார்ல் கோட்டையும் வடக்கில் கலங்கரை விளக்கத்திற்கு அருகிலுள்ள குஸ்தாவ் கோட்டையும் நடையேறுபவர்களுக்கு உகந்த இடமாக உள்ளது. குசுதாவியத் தீபகற்பத்தின் முனையில் உள்ள ஆசுக்கர் கோட்டையில் ஆயுதக் காவல்துறை அமைந்துள்ளது. இத்தீபகற்பத்தின் விக்டர் சோல்கர் சாலையின் இறுதியில் அருங்காட்சியகம் உள்ளது. குசுதாவியாவில் அமெரிக்க, இத்தாலிய, பிரான்சிய மற்றும் பிற உணவுமுறை உணவகங்கள் உள்ளன. இங்குள்ள உயர்தர அங்காடிகள் தீவிற்கு முதன்மை வருவாய் ஈட்டுவனவாக உள்ளன. தவிரவும் சுற்றுலாப் பயணிகளுக்காக மிக உயர்தர தங்குவிடுதியும் உள்ளது. சுவீடிய கிளைத்தூதரகமும் இங்குள்ளது.

வானிலை[தொகு]

குசுதாவியா
குசுதாவியாவின் துறைமுகக் காட்சி

இங்கு வெப்பமண்டல வானிலை நிலவுகின்றது. வெப்பநிலையில் மிகக் குறைந்த வேறுபாடுகளே காணப்படுகின்றன. தீவின் சிறியப் பரப்பளவினால் (24 சதுர கிலோமீட்டர்கள் (9 sq mi)) வணிகக் காற்றுகளின் இனிமையான நன்மைகளைப் பெறுகின்றது. நீரின் வெப்பநிலையும் காற்றின் வெப்பநிலையும் ஏறத்தாழ 27 °C (81 °F) அளவில் உள்ளன. ஆண்டு இரு பருவங்களாகப் பிரிக்கப்படுகிறது: ஈரமற்ற லென்ட், மற்றும் ஈரப்பதமுள்ள குளிர்காலம். குளிர்காலம் மே முதல் நவம்பர் வரை உள்ளது. இக்காலத்தில் கடந்து செல்லும் மழைமேகங்கள் 10,15 நிமிடங்களுக்கு மழை பெய்விக்கின்றன. கோப்பென் காலநிலை வகைப்பாடு முறையில் குசுதாவியா சவன்னா வெப்ப மண்டல வானிலை கொண்டதாக வரையறுக்கப்பட்டு வானிலை நிலப்படங்களில் "Aw" எனக் குறிப்பிடப்படுகின்றன.[1]

பொருளியல்[தொகு]

செயிண்ட்-பார்த்தலெமியின் அலுவல்முறை நாணயம் ஐரோவாம்.

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

உலகின் சரிபார்க்கப்பட்டு மிக நீண்ட நாட்களாக வாழ்ந்திருந்த யூஜீனி பிளாசார்டு (Eugénie Blanchard) (16 பெப்ரவரி 1896 – 4 நவம்பர் 2010)[2] என்பார் குசுதாவியாவில் பெரும்பான்மையான வாழ்நாட்களைக் கழித்துள்ளார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Gustavia, Saint Barthélemy Köppen Climate Classification". Weatherbase.com. பார்க்கப்பட்ட நாள் 2015-06-19.
  2. "Eugenie Blanchard dies at 114; nun was considered the world's oldest person". Los Angeles Times. 2010-11-05. http://www.latimes.com/news/obituaries/la-me-eugenie-blanchard-20101105,0,5016453.story. பார்த்த நாள்: 2010-11-14. 

வெளி இணைப்புகள்[தொகு]

அரசு
பொதுத் தகவல்