செயிண்ட் பியேர், செயிண்ட் பியேர் அண்ட் மீகேலோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆள்கூறுகள்: 46°46′40″N 56°10′40″W / 46.7778°N 56.1778°W / 46.7778; -56.1778

செயிண்ட்-பியேர்

StPierre003.JPG
வானிலிருந்து செயிண்ட் பியேரின் காட்சி
Saint Pierre and Miquelon map.gif
நிர்வாகம்
நாடு பிரான்சு
Overseas collectivity செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்
மேயர் கரீன் கிளைரோ (பிஎசு)
(2014-2020)
புள்ளிவிபரம்
ஏற்றம் 0–207 m (0–679 ft)
நிலப்பகுதி 25 km2 (9.7 sq mi)
மக்கட்தொகை1 5,888  (சூலை 2011)
 - மக்களடர்த்தி 236/km2 (610/sq mi)
INSEE/Postal code 97502/ 97500
1ஒன்றுக்கு மேற்பட்ட கம்யூன்களின் வசிப்பவர்கள் (எகா: மாணவர், இராணுவத்தினர்) ஒரு முறை மட்டுமே எண்ணப்பட்டார்கள்.

செயிண்ட் பியேர் (Saint-Pierre) கனடாவின் நியூ பவுண்ட்லாந்து கடற்கரைக்கு அப்புறமாக அமைந்துள்ள பிரான்சிய கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றான செயிண்ட் பியேர் மற்றும் மீகேலோனின் தலைநகரம் ஆகும். செயிண்ட் பியேர் மற்றும் மீகேலோனில் உள்ள இரு பிரான்சிய கொம்யூன்களில் (நகராட்சி) பியேர் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகராட்சியாகும்.

புவியியல்[தொகு]

செயிண்ட் பியேர் கொம்யூன் (நகராட்சி) செயிண்ட் பியேர் தீவுப் பகுதியையும் அடுத்துள்ள சிறு தீவுப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவற்றில் ல ஐல் ஆக்சு மாரின் என்ற சிறுதீவு குறிப்பிடத்தக்க அளவிலானதாகும். இந்த நகரத்தில் செயிண்ட் பியேர் மற்றும் மீகேலோனின் 90% மக்கள் வாழ்ந்தாலும் இதன் வடமேற்கிலுள்ள இந்நாட்டின் மற்றொரு நகரமான மீகேலோன்-லாங்கிளேடை விட பரப்பளவில் சிறியதாகும்.

செயிண்ட் பியேர் தீவின் கிழக்குக் கடலோரமாக அத்திலாந்திக்குப் பெருங்கடலை நோக்கியுள்ள பராசாய்சு எனப்படும் துறைமுகத்தின் வடக்கில் முதன்மை நகரமும் ஆட்சி மன்ற அலுவலகங்களும் அமைந்துள்ளன. இயற்கைத் துறைமுகமான பராசாய்சைச் சுற்றிலும் சிறு தீவுகள் அரணாக உள்ளன.

மக்கட்தொகையியல்[தொகு]

2006ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த நகராட்சியின் மக்கள்தொகை 5,888 ஆகும்.[1] இவர்களில் பெரும்பாலோர் பாசுக்கு, பிரித்தனி, நார்மண்டி இனத்தவராவர்.

அரசு[தொகு]

நகராட்சி நகரமன்றத்தையும் நகரத்தந்தையையும் கொண்டியங்குகின்றது.

பனிப்பொழிவின்போது செயிண்ட் பியேர்.
மேகமூட்டமான நாளொன்றில்.

அடையாளங்கள்[தொகு]

துறைமுகத்தையொட்டி அஞ்சல் அலுவலகமும் சுங்க அலுவலகமும் அமைந்துள்ளன; இவற்றின் பின்னே நகரத்தின் மையமான சார்லசு டிகாலே சதுக்கம் அமைந்துள்ளது.

செயிண்ட் பியேரில் உள்ள மற்ற கட்டிடங்கள்: சதுக்கத்திற்கு வடக்கே செயிண்ட் பியேர் பேராலயம் பெருந்தீவிபத்தை அடுத்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கட்டப்பட்டுள்ளது; துறைமுகத்தின் வாயிலில் பாயிண்ட் ஆக்சு கேனோன்சு கலங்கரைவிளக்கம்; மேலும் வடக்கில், நகரத்தின் முன்னாள் மருத்துவமனைக்கு அருகே, பிரான்டன் பெலோட்டா விளையாட்டரங்கம் உள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]