திப்ரா பூர்வாங்க தேசியவாத கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திப்ரா பூர்வாங்க தேசியவாத கட்சி
Indigenous Nationalist Party of Twipra
சுருக்கக்குறிINPT
தலைவர்பிஜாய் குமார் ஹர்ன்காகல்
தலைவர்பிஜாய் குமார் ஹர்ன்காகல்
தலைவர்ஜெகதீசு தேப்பர்மா
நிறுவனர்பிஜாய் குமார் ஹர்ன்காகல்
தொடக்கம்2002
கலைப்பு2021
பிரிவுதிரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம்
முன்னர்திரிபுரா தேசிய போராளிகள்
இணைந்ததுதிப்ரா மோதா கட்சி
தலைமையகம்பிராகதி சாலை, கிருஷ்ணநகர், அகர்தலா-799100,திரிபுரா, இந்தியா
இளைஞர் அமைப்புதிரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம்
கொள்கைதிரிபுரி தேசியம்
அரசியல் நிலைப்பாடுCentre
நிறங்கள்    
இ.தே.ஆ நிலைமாநில கட்சி
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
0 / 60
(திரிபுராவின் சட்டமன்றம்)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
50 / 100
(திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு)
தேர்தல் சின்னம்
கட்சிக்கொடி
INPT-flag.svg
இணையதளம்
www.inpt/tripura.com
இந்தியா அரசியல்

திப்ரா பூர்வாங்க தேசியவாதக் கட்சி (Indigenous Nationalist Party of Twipra)(சுருக்கம்: திபூதேக) என்பது இந்திய மாநிலமான திரிபுராவில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இக்கட்சியின் தலைவராக பிஜோய் குமார் ஹர்ன்காகல் இருந்தார்.[1] இது 11 சூன் 2021 அன்று திப்ரா மோதா கட்சியுடன் இணைந்தது.[2][3][4]

வரலாறு[தொகு]

திப்ரா பூர்வாங்க தேசியவாதக் கட்சியானது திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி மற்றும் திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம்ஆகியவை இணைந்து 2002இல் உருவாக்கப்பட்டது.

அனைத்து பழங்குடி தேசியவாத சக்திகளையும் ஒரே கட்சியில் இணைக்க விரும்பிய திரிபுரா தேசிய விடுதலை முன்னணியின் அழுத்தத்தின் காரணமாக திப்ரா பூர்வாங்க தேசியவாதக் கட்சி உருவாகியது.

முக்கிய அரசியல்வாதிகள்[தொகு]

  • திரிபுரா தேசிய தொண்டர்களின் முன்னாள் போராளித் தலைவர் பிஜோய் குமார் ஹர்ன்காகல்
  • ஜெகதீஷ் தேப்பர்மா, 1990 முதல் 1995 வரை டிடிஏஏடிசி முன்னாள் தலைவர்
  • சியாமா சரண் திரிபுரா

கடந்த முடிவுகள்[தொகு]

திப்ரா பூர்வாங்க தேசியவாத கட்சி திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்ட குழு2003-ல் பெரும்பான்மையான இடங்களை வென்றது.

2003ஆம் ஆண்டு இக்கட்சியிலிருந்து ஒரு பகுதியினர் பிரிந்து சென்றதால் கட்சி பின்னடைவினை சந்திக்க நேர்ந்தது.

திரிபுரா மாநில சட்டமன்றம்[தொகு]

2003ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் திப்ரா பூர்வாங்க தேசியவாத கட்சி இந்தியத் தேசிய காங்கிரசுடன் கூட்டணி அமைத்தது. திப்ரா பூர்வாங்க தேசியவாத கட்சி 18 இடங்களிலும் காங்கிரசு 42 இடங்களிலும் போட்டியிட்டது. இதில் ஆறு இடங்களில் திப்ரா பூர்வாங்க தேசியவாத கட்சி வெற்றி பெற்றனர். இக்கட்சி மொத்தத்தில் 189186 வாக்குகளைப் பெற்றது. தேர்தலில் இடது முன்னணி வெற்றி பெற்றது. 2018-ல் நடைபெற்ற 12வது சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, திரிபுரா மாநில சட்டப் பேரவையில் திப்ரா பூர்வாங்க தேசியவாத கட்சி பிரதிநிதிகள் இல்லை.

மக்களவை (நாடாளுமன்ற தேர்தல்)[தொகு]

2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக திப்ரா பூர்வாங்க தேசியவாத கட்சி பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. தேர்தலில் தேசியவாத திரிணாமுல் காங்கிரசு மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்தது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "55 years on, Bijoy Kumar Hrangkhawl continues to fight for Tripura's indigenous community- A TNT Exclusive" (in Indian English). 2018-04-29. பார்க்கப்பட்ட நாள் 2021-04-19.
  2. "INPT merged with TIPRA Motha, Bijay Hrangkhal TIPRA Motha new President". பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  3. "Tripura: INPT announces merger with TIPRA". 7 May 2021.
  4. "Tripura: INPT merges with Pradyot Kishore Deb Barman's TIPRA".

வெளி இணைப்புகள்[தொகு]