தட்டான்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தட்டான்குளம்
தட்டான்குளம்
இருப்பிடம்: தட்டான்குளம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°28′N 77°41′E / 8.47°N 77.68°E / 8.47; 77.68ஆள்கூற்று: 8°28′N 77°41′E / 8.47°N 77.68°E / 8.47; 77.68
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


141 metres (463 ft)

தட்டான்குளம் (ஆங்கிலம்:Thattankulam)[3][4][5], இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 8°28′N 77°41′E / 8.47°N 77.68°E / 8.47; 77.68 ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 141 மீட்டர் (462 அடி) உயரத்தில் இருக்கின்றது.

நிர்வாகம்[தொகு]

தட்டான்குளத்தின் நிர்வாகம் தெற்கு நாங்குநேரி ஊராட்சியின் பொறுப்பில் உள்ளது. தட்டான்குளம் தமிழக சட்டமன்றத் தொகுதியான நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கும் இந்திய பாராளுமன்றத் தொகுதியான திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதிக்கும் உட்ப்பட்டது. தமிழகக் காவல் துறையின் நாங்குநேரி காவல் நிலையம் தட்டான்குளத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறது.

போக்குவரத்து[தொகு]

நாங்குநேரி – திசையன்விளை செல்லும் மாநில நெடுஞ்சாலை 89 ல் (SH 89) நாங்குநேரியில்ருந்து 4 கிமீ தொலைவில் தட்டான்குளம் அமைந்துள்ளது. தட்டான்குளத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 7 ஐ (NH 7) மாநில நெடுஞ்சாலை 89 மூலம் அடையலாம்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி - திசையன்விளை தினசரி பேருந்துகளை இயக்குகிறது. தனியார் பேருந்துகளும் திருநெல்வேலிதிசையன்விளை மற்றும் திசையன்விளை - களக்காடு தினசரி பேருந்துகளை இயக்குகிறது. அனைத்து தனியார் பேருந்துகளும் தட்டான்குளத்தில் நின்று செல்லும். திருநெல்வேலி – திசையன்விளை இடைநில்லா பேருந்து தவிர அனைத்து அரசு பேருந்துகளும் தட்டான்குளத்தில் நின்று செல்லும்.

அருகாமையிலுள்ள நாங்குநேரி ரயில் நிலையம் 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தட்டான்குளத்திலிருந்து திருநெல்வேலி சந்திப்புகள் 35 கி.மீ. (21 மைல்) மற்றும் நாகர்கோவில் சந்திப்பு 50 கிமீ (31 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி விமான நிலையமே, தட்டான்குளத்திற்கு அருகாமையிலுள்ள விமான நிலையம் ஆகும். இது தட்டான்குளத்திலிருந்து 60 கிமீ (37 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. சர்வதேச விமான நிலையங்களான திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் 190 கி.மீ. (118 மைல்) மற்றும் மதுரை விமான நிலையம் 125 கிமீ (77 மைல்) தொலைவில் அமைந்துள்ளன.

முக்கிய இடங்கள்[தொகு]

சி.எஸ்.ஐ கிறிஸ்து ஆலயம், தட்டான்குளம்[4]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "Administrative Setup of Tirunelveli District". பார்த்த நாள் 2 February 2013.
  4. 4.0 4.1 "Nanguneri Pastorate Churches". பார்த்த நாள் 2 February 2013.
  5. "Thattankulam Map". பார்த்த நாள் 2 February 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்டான்குளம்&oldid=2147707" இருந்து மீள்விக்கப்பட்டது