ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரி பாட்டர்
அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன்
இயக்கம்கிரிஷ் கொலம்பஸ்
தயாரிப்புடேவிட் ஹேமேன்
மூலக்கதைஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன்
படைத்தவர் ஜே. கே. ரௌலிங்
திரைக்கதைஸ்டீவ் க்ளோவ்ஸ்[1]
இசைஜான் வில்லியம்ஸ்
நடிப்புடேனியல் ராட்க்ளிஃப்
ரூபர்ட் கிரின்ட்
எம்மா வாட்சன்
ஜான் கிளீஸ்
ராபி கோல்ட்ரேன்
வார்விக் டேவிஸ்[2]
ரிச்சர்ட் கிரிஃபித்ஸ்
ரிச்சர்ட் ஹாரிஸ்[3]
இயன் ஹார்ட்
ஜான் ஹர்ட்
அலன் ரிக்மான்
பியோனா ஷா
மேகி ஸ்மித்
ஜூலி வால்டர்ஸ்
ஒளிப்பதிவுஜான் சீலே
படத்தொகுப்புரிச்சர்ட் பிரான்சிஸ்-ப்ரூஸ்
கலையகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
ஹேடே பிலிம்ஸ்
1492 பிக்சர்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 4, 2001 (2001-11-04)(லண்டன் )
16 நவம்பர் 2001 ( ஐக்கிய இராச்சியம் &
அமெரிக்கா)
ஓட்டம்152 நிமிடங்கள்[4]
நாடுஐக்கிய இராச்சியம்
அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$125 மில்லியன்[5]
மொத்த வருவாய்$1.007 பில்லியன்

ஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன் (Harry Potter and the Philosopher's Stone posters)[6] என்பது 2001 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சிய- அமெரிக்க நாட்டு கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இது புதின எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவர் எழுத்தில் 1997 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து கிரிஷ் கொலம்பஸ் என்பர் இயக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப்,[7] ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன்[8] ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் முதலாம் ஆண்டில் படிக்க வரும் ஹாரி, தான் மந்திரவாதிகள் மத்தியில் ஒரு சிறப்பு மிக்கவன் என்பதை அறிந்ததும் எதிரிகள் மத்தியில் நல்ல நண்பர்களை உருவாக்கி தனது மாத்திர கல்வியில் எப்படி தேர்ச்சி பெற்றான் என்பது தான் கதை.

இது ஆரி பாட்டர் திரைப்படத் தொடரின் முதலாவது படமாக 16 நவம்பர் 2001 அன்று ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் வெளியானது. அதே நாள் இலங்கை, இந்தியா[9] மற்றும் பாகிஸ்தான் போன்ற பல பிற நாடுகளிலும் வெளியாகி வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவானது. இது 2001 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாகவும், அந்த நேரத்தில் அதிக வசூல் செய்த இரண்டாவது படமாகவும் ஆனது. சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது, சிறந்த தயாரிப்பிற்கான அகாதமி விருது மற்றும் சிறந்த உடை அமைப்பிற்கான அகாதமி விருது உள்ளிட்ட பல விருதுகளுக்கு இந்த படம் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து த சேம்பர் ஆப் சீக்கிரட்சு த பிரிசினர் ஆப் ஆசுகபான், த கோப்லட்டு ஆப் பயர், த ஆர்டர் ஆப் த பீனிக்சு, த காப் பிளட்டு பிரின்சு, த டெத்லி அலோவ்சு - பாகம் 1 மற்றும் த டெத்லி அலோவ்சு - பாகம் 2 போன்ற ஏழு படங்கள் தொடர்ச்சியாக வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Linder, Brian (22 March 2001). "Cleese Talks Harry Potter". https://www.ign.com/articles/2001/03/22/cleese-talks-harry-potter. 
  2. Robinson, Tasha (7 November 2001). "Warwick Davis". https://www.avclub.com/warwick-davis-1798208189. 
  3. Younge, C. (27 November 2001). "Richard Harris: The Envelopes, Pleas". https://people.com/celebrity/richard-harris-the-envelopes-please/. 
  4. "HARRY POTTER AND THE PHILOSOPHER'S STONE | British Board of Film Classification". http://bbfc.co.uk/releases/harry-potter-and-philosophers-stone-2001. 
  5. "Harry Potter and the Sorcerer's Stone (2001) - Box Office Mojo". www.boxofficemojo.com. https://www.boxofficemojo.com/movies/?id=harrypotter.htm. பார்த்த நாள்: 2 February 2019. 
  6. "Harry Potter and the Philosopher's Stone (PG)". http://bbfc.co.uk/releases/harry-potter-and-philosophers-stone-2001. 
  7. Bradley, Bill (31 December 2016). "The Hilarious Reason Daniel Radcliffe Was Cast As Harry Potter". The Huffington Post. https://www.huffpost.com/entry/the-real-reason-daniel-radcliffe-was-cast-as-harry-potter_n_585b7664e4b0d9a594572683. 
  8. Kulkani, Dhananjay (23 June 2004). "Emma Watson, New Teenage Sensation!!". http://www.buzzle.com/editorials/6-22-2004-55758.asp. 
  9. "Harry Potter and the Sorcerer's Stone to be released in India after US, UK" (in en). India Today. https://www.indiatoday.in/magazine/international/story/20011119-harry-potter-and-the-sorcerers-stone-to-be-released-in-india-after-us-uk-774678-2001-11-19. பார்த்த நாள்: 2 February 2019. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons logo
Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (திரைப்படம்)