உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 1
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்டேவிட் யேட்ஸ்
தயாரிப்புடேவிட் ஹேமேன்
டேவிட் பேர்ரன்
ஜே. கே. ரௌலிங்
மூலக்கதைஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு
படைத்தவர் ஜே. கே. ரௌலிங்
திரைக்கதைஸ்டீவ் க்ளோவ்ஸ்
இசைஅலெக்சாண்டர் டெசுபிளாத்
தீம்கள்:
ஜான் வில்லியம்ஸ்
நடிப்பு
ஒளிப்பதிவுஎட்வர்டோ செர்ரா
படத்தொகுப்புமார்க் டே
கலையகம்ஹேய்டே பிலிம்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 18, 2010 (2010-11-18)(உலகம் முழுவதும்)[1]
நவம்பர் 19, 2010 (2010-11-19)(United Kingdom)
(United States)
ஓட்டம்146 நிமிடங்கள்[2]
நாடுஇங்கிலாந்து
ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$250 மில்லியன்
(பாகம் 2 இணைத்து)[3]
மொத்த வருவாய்$977 மில்லியன்[4]

ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 (Harry Potter and the Deathly Hallows – Part 1) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சிய- அமெரிக்க நாட்டு கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இது புதின எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவர் எழுத்தில் 2007 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து 'டேவிட் யேட்ஸ்'[5] என்பர் இயக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இரண்டு பாகங்களாக வெளிவரும் இந்த திரைப்படங்கள் ஆரி பாட்டர் தொடரின் இறுதித் திரைப்படம் ஆகும். திரைப்படத்திற்கான புகைப்படம் எடுக்கும் நிகழ்வு 19 பெப்ரவரி 2009 இல் ஆரம்பித்து 12 சூன் 2010 வரை நடைபெற்றது. பகுதி ஒன்று ஐமாக்ஸ் வடிவில் 19 நவம்பர் 2010 இல் வெளியிடப்பட்டது.

ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 படம் உலகளாவிய 977 மில்லியன் டாலர்களை வசூலித்தது, இது திரைப்படத் ஆரி பாட்டர் தொடரில் மூன்றாவது அதிக வசூல் செய்தபடமாகவும் மற்றும் 2010 ஆம் ஆண்டில் எல்லா நேரத்திலும் எட்டாவது மிக உயர்ந்த படம் ஆகும். இது சிறந்த தயாரிப்பு மற்றும் சிறந்த திரை வண்ணம் போன்ற அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Harry Potter & the Deathly Hallows Part 1". Hoyts. 18 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 22 நவம்பர் 2010.
  2. "BBFC: Harry Potter and the Deathly Hallows - Part 1". BBFC. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2010.
  3. Frankel, Daniel (17 நவம்பர் 2010). "Get Ready for the Biggest 'Potter' Opening Yet". The Wrap. http://www.thewrap.com/movies/article/get-ready-biggest-potter-opening-yet-22607. பார்த்த நாள்: 21 நவம்பர் 2010. 
  4. "Harry Potter and the Deathly Hallows Part 1 (2010)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 8 திசம்பர் 2010.
  5. "Alfonso Cuaron To Return To Harry Potter?". JewReview.net. 18 November 2006. Archived from the original on 14 December 2007. பார்க்கப்பட்ட நாள் 18 November 2006.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons logo
Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 (திரைப்படம்)