உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரி பாட்டர் அண்டு த கேர்சுடு சைல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரி பாட்டர் அண்டு த கேர்சுடு சைல்டு
பகுதி I & II
கதைJack Thorne (script)
ஜே. கே. ரௌலிங், Jack Thorne & John Tiffany (story)
கதாபாத்திரங்கள்
மொழிஆங்கிலம்
தொடர்ஆரி பாட்டர்
மையம்ஆரி பாட்டரும், அவரது மகன் அல்பசு பாட்டரும்
கருப்பொருள்
  • கற்பனை
  • நாடகம்
  • சாகசம்
Settingமந்திர உலகம்
Official site

ஆரி பாட்டர் அண்டு த கேர்சுடு சைல்டு என்பது ஜே. கே. ரௌலிங், தொர்ன், ஜொன் டிபனி ஆகியோரின் கதையை மையமாக கொண்டு ஜக் த்ரொனால் எழுதப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட நாடகம் ஆகும்.[1] அதிகாரபூர்வமாக 30 சூலை 2016இல் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின், 7 சூன் 2016இல் இலண்டனின் பலசு தியெட்டரில் திரையிடப்பட்டது.[2]

வரவேற்பு

[தொகு]

"அடுத்தத் தலைமுறையின் புதிய கதாபாத்திரங்கள் இந்தப் புத்தகத்தில் ஆழமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன....[இக் கதை] அது கிளப்பிய பரபரப்புக்கும் நீண்ட காத்திருப்புக்கும் தகுதியானதுதான்....முதலில் படிக்கும்போது, வினோதமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது. ஆனால், போகப்போக, அடிப்படை கதாபாத்திரங்கள் மாறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது....இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், ஹாரி தனது கடந்த காலப் பேய்களுடனும் வருங்காலத்தின் ரகசியங்களுடனும் போராடிக்கொண்டிருக்கிறான்....இது நிச்சயமாகப் பழைய ஹாரி பாட்டர் கிடையாது. இது ஒரு புதிய கதை. புதிய வாழ்க்கை.... ஜே.கே. ரவுலிங் எழுத்தில் பழைய ‘மேஜிக்’ இன்னும் இருக்கிறது...அவர் கதாபாத்திரங்களைக் கையாண்டிருக்கும் விதத்திலும் பழைய பேரார்வம் வெளிப்படுகிறது.... இந்தப் புத்தகம் நாடகம் எடுப்பதற்காக எழுதப்பட்டிருப்பதால் ஒருவிதமான படப்படப்புடனும், பல விதமான உணர்வுகளைக் கடத்தும்படியும் எழுதப்பட்டிருக்கிறது" எனப் பலவாறாக ஆரி பாட்டர் கதைத் தொடரின் தமிழ்நாட்டு வாசகர்கள் தெரிவித்தனர்.[3]

"ஹாரிபாட்டர் கதைகளில் எப்போதுமே மாய உலக நிகழ்வுகள் இருக்கும். ஆனால், நாடகத்தில் அது மிதமிஞ்சி இருக்கிறது. முந்தைய கதைகளில், சில மணி நேரங்கள் மட்டுமே அமைவதாகக் கால இயந்திரப் பயணங்கள் சித்தரிக்கப்பட்டன, நாடகத்திலோ பல ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்துத் திரும்புவதாக வருகிறது. இது கதையின் விறுவிறுப்புச் சுவையைக் குறைக்கிறது. நாடக மேடையில் தந்திரக் காட்சிகள் வியக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்டிருந்தன (நம் ஊர் ஆர்.எஸ். மனோகர் நாடகம் போல?). ஆனால் அச்சு வடிவ நாடகத்தில் அந்த வியப்பனுபவம் கிடைக்கவில்லை…இத்தகைய விமர்சனங்கள் வந்ததைத் தொடர்ந்து ரௌலிங், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக நாடகம் எழுதப்பட்டதால், அதனால் ஏற்பட்ட அழுத்தம் நாடகத்தை சுவையற்றதாக்கிவிட்டது என்று கூறினார். மூலக் கதையைத்தான் அவர் எழுதினார், மேடைக் கதையாக்கமும் உரையாடல்களும் காட்சியமைப்புகளும் வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டன. ஆயினும் விமர்சனம் அவர் மீதுதான் கூர்மையாகப் பாய்ந்தது. ஹாரிபாட்டரும் மற்றவர்களும் திரும்பத் திரும்ப இடம்பெறும் (ஹாரிபாட்டர் யுனிவர்ஸ்) கதைகளை எழுதுவதில் அவருக்கு ஆர்வம் குறைந்து போனதாகத் தெரிகிறது" என்றார் எழுத்தாளர் அ. குமரேசன்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Harry Potter and the Cursed Child". Harry Potter The Play. harrypottertheplaylondon.com. 2016. Archived from the original on 2015-08-21. Retrieved 26 சூலை 2016.
  2. Lyall, Sarah (7 சூன் 2016). "'Harry Potter and the Cursed Child' Begins Previews in London, as Magic Continues". The New York Times. https://www.nytimes.com/2016/06/08/theater/harry-potter-and-the-cursed-child-preview.html.
  3. என்.கெளரி (2017-06-14). "எகிறும் ஹாரி பாட்டர் ஃபீவர்". Hindu Tamil Thisai. Retrieved 2026-01-17.
  4. Bookday (2025-09-30). "படைப்பாளிகளை வருந்த வைத்த படைப்புகள் - அ. குமரேசன்". Book Day (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-04-13.