ஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Harry Potter and the Deathly Hallows
ஆரி பாட்டர் நூல்கள்
ஆசிரியர்ஜே. கே. ரௌலிங்
விளக்குநர்கள்Jason Cockcroft (Bloomsbury)
Mary GrandPré (Scholastic)
வகைபுனைவு
வெளியீட்டாளர்கள்புலூம்பரி (UK) (2010-தற்போதும்)
ஆர்த்தர் ஏ. லெவின்/
இசுகொலசுடிக்கு (US)
ரெயின்கோசுட்டு (கனடா 1998-2010)
வெளியீடு21 சூலை 2007
புத்தக இல.Seven
விற்பனை44 million (worldwide)[1]
கதை காலவரிசைசூலை 1997 – மே 1998 மற்றும் 1 செப்டம்பர் 2017
அத்தியாயங்கள்36 அத்தியாயங்கள் மற்றும் ஒரு முடிவுரை
பக்கங்கள்607 (ஐ.இ.)
759 (ஐ.அ.)
முன் புத்தகம்ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர் ஜே.கே.ரௌலிங் அவர்கள் எழுதிய ஆரி பாட்டர் நாவல்கள் வரிசையில் ஏழாவது மற்றும் இறுதி நாவல் ஆரி பாட்டர் அன்டு தி டெட்லி ஹாலோவ்ஸ் ஆகும்.இந்த புத்தகம் 21 சூலை 2007 இல் வெளியிடப்பட்டது. இதோடு 1997 ஆம் ஆண்டு முதன் முதலாக வெளியிடப்பட்ட ஆரி பாட்டர் அண்டு தி ஃபிளாசபர்ஸ் ஸ்டோன் முதல் துவங்கிய இந்தப் புத்தக வரிசை நிறைவு பெற்றது. இப்புத்தகம் ஆரி பாட்டர் மற்றும் ஹால்ஃப் பிளட் பிரின்ஸ் இன் (2005) முடிவிலிருந்து நேரடியாகத் துவங்கி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆரி பாட்டர் மற்றும் லார்டு வால்டுமார்ட் போர் வரை கொண்டு செல்கிறது.

இங்கிலாந்தில் ப்ளும்ஸ்பெரி பதிப்பகத்தாலும், அமெரிக்காவில் ஸ்காலஸ்டிக் கனஎடர் அண்டு தி டெத்லி ஹாலோவ்ஸ் புத்தகம் வெளியிடப்பட்டது. உலகளவில் 93 நாடுகளில் வெளியிடப்பட்ட டெத்லி ஹாலோவ்ஸ் என்னும் இந்த புத்தகம் இதுவரை விற்பனை செய்யப்பட்ட புத்தகங்களிலேயே மிக அதிகமாக விற்பனையான புத்தகம் என்னும் சாதனையைப் படைத்துள்ளது. வெளியடப்பட்ட 24 மணி நேரங்களில் 15 மில்லியன் புத்தகங்கள் விற்பனையானது.[1] இதில் யு.எஸ் (அமெரிக்காவில்) மற்றும் யுகேவில் (இங்கிலாந்தில்) மட்டும் 11 மில்லியனுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகின. இதன் முந்தைய சாதனை முதல் நாளில் 9 மில்லியன் புத்தகங்கள் விற்றுத்தீர்ந்த ஆரி பாட்டர் அண்டு தி ஹாஃப் பிளட் பிரின்ஸ் புத்தகமே.[2] உக்ரேனியன்[3], ஸ்வீடஷ்,[4] போலிஷ்[5] மற்றும் ஹிந்தி[6] உட்பட இந்த நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு கோலோரடா ப்ளுஸ்ப்ருஸ் புத்தக விருது மற்றும் அமேரிக்கன் லைப்ரரி அசோசியேஷன்வெளியிட்ட "இளம் பெரியவர்களுக்கான மிகச்சிறந்த புத்தகம்" உட்பட இந்த நாவலுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[7] சில கதாபாத்திரங்கள் ஏற்கனவே தோன்றியவைகள் அல்லது மாறவில்லை என்று சில விமர்சகர்கள் தெரிவித்தாலும், பொதுவாக இதன் வரவேற்பு நேர்மறையாகவே இருந்தது. இந்த நாவலின் அடிப்படையில் எடுக்கப்படவுள்ள இரண்டு பகுதிகளைக்கொண்டுள்ள திரைப்படத்தின் முதல் பகுதி நவம்பர் 2010 இல் வெளியிடப்படவுள்ளது.

கதைச் சுருக்கம்[தொகு]

கதையின் முன்னுரை[தொகு]

ஆரி பாட்டர் தொடரின் முந்தைய 6 நாவல்களிலும் , முக்கிய கதாபாத்திரமான, ஆரி பாட்டர், தொடர்ந்து வளர்ந்து கொண்டேவரும் இடர்களால் நேரிடும் துன்பங்களால் கஷ்டப்பட்டு அதை சவாலாக ஏற்றுக்கொண்டு புகழ் பெற்ற மந்திரவாதியாகத் திகழ்ந்துள்ளான். ஆரி சிறு குழந்தையாக இருக்கும்போதே, லார்டு வால்டுமார்ட் என்ற சக்தி வாய்ந்த நிகழ் கால தீய மந்திரவாதி, ஆரியின் பெற்றோர்களைக் கொல்கிறான், ஆனால் ஆரியைக் கொல்ல முயல்கையில் புரியாத புதிராக மறைந்துவிடுகிறான். இதுவே ஆரியின் உடனடிப் புகழுக்குக் காரணமானது. மேலும் மந்திரம் தெரியாத அவனுடைய உறவினர்களான அத்தை பெட்டுனியா மற்றும் மாமா வெர்னன் இவர்களின் கவனிப்பில் விடப்படுகிறான்.

ஆரி தன் 11 ஆவது வயதில், மந்திரவாதம் மற்றும் மந்திரவாதிகளை உருவாக்கும் பள்ளியான ஹோக்வார்ட்ஸ்இல் பதிவுசெய்து அங்கு சேர்ந்து மந்திரவாத உலகில் அடியெடுத்து நுழைந்தான். அங்கு அவன் ரான் வீஸ்லீயையும், ஹெர்மியான் க்ரேன்ஜரையும் நண்பனாக்கிக் கொண்டு வோல்டர்மார்டை எதிர்த்து அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற உறுதி கொள்கிறான். கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திரும்பியதும் ,ஹாக்வார்ட்சில் ரகசியங்கள் நிறைந்த அறை திறக்கப்பட்டதும் மாணவர்கள் மீது நிறைய தாக்குதல்கள் நடந்துவிடுகின்றன. பாசிலிக்சை கொல்வதன் மூலம் ஆரி, இந்தத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான், மற்றும் லார்டு வால்டுமார்ட்டின் அடுத்தகட்ட நடவடிக்கையில் தோற்கடித்து முழு பலத்துடன் மீண்டும் வர செயல்படுகிறான். பின் வரும் வருடத்தில், தப்பிச் சென்ற கொலைகாரனான சிரியஸ் பிலாக் தன்னைக் குறி வைத்திருப்பதைப் பற்றிக் கேள்விப்படுகிறான். ஹாக்வார்ட்சில் மிகக்கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தும், ஆரி தன் பள்ளி வாழ்வின் மூன்றாவது வருட இறுதியில் ப்லாக்கால் எதிர்க்கப்பட்டான். ப்லாக் உருவாக்கப்பட்டதை அறிந்தான் மேலும் உண்மையில் ஆரியின் வழிகாட்டி ப்லாக் என்பதையும் தெரிந்துகொண்டான். பள்ளி நான்காவது வருடத்தில் ஆரி, ட்ரைவிஜார்ட் போட்டித்தொடரில் மிகவும் ஆபத்தான மந்திர போட்டியில் போட்டியிட நுழைவதைக் கண்டது. போட்டியின் முடிவில், வால்டுமார்ட் பிரபு முழு பலத்துடன் திரும்ப வந்ததைக் கண்டான். அடுத்த கல்வி ஆண்டு தொடங்கியதும், மந்திர அமைச்சகம் டோலோரஸ் அம்ப்ரிட்ஜ் என்பவரை புதிய ஹோக்வார்ட்சின் உயர் அதிகாரியாக நியமித்தது.அம்ப்ரிட்ஜிற்கு எதிராக ரகசியமாக மாணவர் குழு அமைத்தபின் ,ஆரியும் அவனது நண்பர்களும் வால்டுமார்ட்சின் பிணம் தின்னிகளான இருண்ட மந்திரவாதினி கூட்டங்களையும், மந்திரவாதிகளையும் நேர்கொண்டு /எதிர்கொண்டு விளிம்பில் தோற்கடித்தனர். பள்ளியில் ஆரியின் 6 ஆவது ஆண்டில், வால்டுமார்ட்சாவில்லாத நிலை அடைய, ஹொர்க்ரக்செசை பயன்படுத்தியதை ஆரி அறிந்துகொண்டான்.

ஹார்க்ரக்சஸ் என்பது ஆத்மாவின் துண்டுகள் ஒரு பொருளில் வைக்கப்பட்டு, உடல் இறக்கும்போது, ஆத்மாவின் ஒரு பகுதி மிஞ்சியிருக்கும் அதைக்கொண்டு மனிதனுக்கு மறுபிறவி கொடுக்கமுடியும்.[8] எப்படியானாலும், தோற்றுவித்தவரின் உடல்அழியும்போது மந்திரவாதியை சவமாக விடாமல், அரை உயிருடன் விட்டுவைக்கிறது,[9] ஹார்க்ரக்சைக் கண்டுபிடிக்கும் வேலை/நோக்கதில் இருந்து திரும்புகையில், ஆரியின் நலம் விரும்பி, மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், பேராசிரியர். டம்பல்டோர், செவ்ரஸ் ஸ்னெப்பால்கொலை செய்யப்படுகிறார். செவ்ரஸ் அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் மேலும் அவரோடு பலமுறை ஆரி தொடர்ந்து முரண்பட்டிருக்கிறான், அதோடு அவன் ஒரு பிணம் தின்னி என்ற சந்தேகம் ஆரிக்கு இருந்தது.

புத்தகத்தின் முடிவில் ஆரி அடுத்த வருடம் பள்ளிக்கு திரும்பாமல், ஹார்க்ரக்சஸைத் தேடிச்செல்ல உறுதி மொழி எடுக்கிறான்.

கதை சுருக்கம்[தொகு]

டம்பில்டோரின் இறப்பைத் தொடர்ந்து, வால்டுமார்ட் அதிகாரத்தை நோக்கி உயர்ந்து செல்லும் வழியை முடித்துக் கொண்டு மந்திர அமைச்சகத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் வெற்றி அடைகிறார்.வால்டுமார்டின் மீதமுள்ள 3 ஹார்க்ருக்செஸை அழிப்பதற்காக ஆரி, ரோன் மற்றும் ஹெர்மியோன் பள்ளியைவிட்டு வெளியேறுகிறார்கள்.அவர்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் பாதுகாப்பை உறுதி செய்யக் கருதித் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு மிஞ்சியுள்ள ஹார்க்ரக்சசைப் பற்றி எந்தத் தகவலும் அறிந்திருக்கவில்லை, ஹோக்வார்ட்ஸ் அமைப்பாளர்களைச் சார்ந்த இரண்டு பொருள்கள் ரோவெனா ரவென்க்லாவ் மற்றும் ஹெல்கா ஹஃப்பெல் பஃப் மற்றும் மூன்றாவதாக நாகினியாக இருக்க சாத்தியக் கூறுகள் இருக்கலாம் என்பதைத் தவிர அவர்கள் வேறொன்றும் அறியவில்லை. நாகினி, வால்டுமார்ட்டின் இரண்டு பொருள்கள் இருக்குமிடம் ரகசியமாக, அறியப்படாமல் இருந்தது. ஹோர்க்ரக்சசைத் தேடும்போது மூவரும், டம்பில்டோரின் கடந்த காலத்தைப் பற்றியும், ஸ்னேப்பின் உண்மை நோக்கத்தைப் பற்றியும் விரிவாகக் கற்றுக்கொண்டனர்.

சலாஜர் ஸ்ல்ய்தெரினின் பேழையான, வால்டுமார்ட்சின் முதல் ஹோர்க்ரக்சசை மந்திர அமைச்சகத்தை வடிகட்டிக் கைப்பற்றினர். ஹோர்க்ரக்சசை அழிக்கக் கூடிய ஆயுதங்களில் ஒன்றான கோட்ரிக் க்ரிஃபிண்டரின் வாளைக் கைபற்றினர் மேலும் அதை அந்தப் பேழையை அழிக்கப் பயன்படுத்தினர். அவர்களின் பயணத்தின் போது மூவரும், ஒரு வினோதமான சின்னத்தை கடந்து செல்லும்போது, ஜெனொஃபிலியஸ் லவ்குட் என்ற விசித்திரமான மந்திரவாதி, அது புராணகால மரணபயங்கரமான தீயசக்திகளைக் குறிக்கும் என்று கூறுகிறது.அந்த சக்திகள் 3 புனிதப் பொருள்கள் .1. மறுபிறவிக்கல்: இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் சக்தி பெற்ற கல் .2. மூத்த மந்திரக் கோல்.அழிக்கமுடியாத மந்திரக்கோல் மற்றும் அணிந்தால் மறையும் சக்தி பெற்ற மேலாடை. ஆரி, வால்டுமார்ட் மந்திரக் கோலின் பின்னர் இருக்கிறார் என்பதை அறிகிறான், ஆனால் மூவரும் தங்களுக்காக மந்திரக் கோலை கைப்பற்றுவதைவிட, ஹோர்க்ரக்சசைக் கண்டுபிடிப்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று தீர்மானிக்கின்றனர்.மற்றொரு ஹோர்க்ரசசான ஹெல்கா ஹஃப்ல்பஃப் பேழையைத் திரும்பப் பெற, மந்திர வங்கியான க்ரிங்கொட்சில்உள்ள பெட்டகத்தை உடைத்தனர்.மற்றொரு ஹோர்க்ரக்ஸ், ஹோக்வார்ட்சில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்த ஆரி, ரோன் மற்றும் ஹெர்மியோனுடன் பள்ளிக்குள் நுழைகிறான்.அவர்கள் ராவென்க்லாவின் டியாடெம் என்ற மற்றொரு ஹோர்க்ரக்சையும் கண்டுபிடித்து இரண்டையும் வெற்றிகரமாக அழித்துவிடுகிறார்கள்.

புத்தகம் ஹோக்வார்ட்ஸ் போருடன் உச்சநிலையை அடைகிறது. ஆரி, ரோன் மற்றும் ஹெர்மியோன், மாணவர்கள் மற்றும் மந்திரவாத உலக உறுப்பினர்களுடன் சேர்ந்து வால்டுமார்ட்டின் வளர்ச்சியை எதிர்த்தும், வோல்டெர்மார்டின் பிணம் தின்னிகள், மற்றும் பல் வேறு மந்திர உயிர்களிடமிருந்தும் ஹோக்வார்ட்சைப் பாதுகாக்கவும் எதிர்த்தனர். போரின் முதல் படியில் சில முக்கிய கதாபாத்திரங்கள் கொல்லப்பட்டன.சிறு குழந்தையாக இருந்தபோது, ஆரியைத் தாக்கும்போது, வால்டுமார்ட் தன்னையும் அறியாமல், ஆரியை ஒரு ஹோர்க்ரக்சாக ஆக்கியிருக்கிறான், அதனால் வால்டுமார்ட்டை அழிப்பதற்காக ஆரியும் இறக்கவேண்டியிருக்கும். ஆரி தானாக வலிய வால்டுமார்ட்டிடம் சரணடைகிறான், உடனே வால்டுமார்ட்கொல்லும் சாபத்தால் ஆரியை தாக்கி அவனை வாழ்வுக்கும், சாவுக்கும் இடையில் லிம்போவுக்கு அனுப்பிவிடுகிறான். அங்கு ஆரி டம்பில்டோரை சந்திக்க, அவர் வால்டுமார்ட் தன் முழு பலத்தையும் திரும்பப் பெற ஆரியின் ரத்தத்தை பயன்படுத்தியதால், ஆரி,வால்டுமார்ட்டால் இழைக்கப்படும் எல்லாத் தீங்கில் இருந்தும் காக்கப்படுவான், பொருள் ஆரிக்குள் உள்ள ஹோர்க்ரக்ஸ் அழிக்கப்பட்டதும், கொல்லும் சாபத்தால் தாக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் தன் உடலுக்குள் ஆரிதிரும்ப முடியும் என்று விளக்குகிறார். ஹெரி தன் உடலுக்குள் திரும்பியதும் போர் மீண்டும் தொடங்க, கடைசி ஹொர்க்ரக்ஸ் அழிக்கப்பட்டதும், ஆரி, வால்டுமார்ட்டைத் தோற்கடிக்கிறான்.

முடிவுரை[தொகு]

வால்டிமார்டின் இறப்பிற்குப் பின் 19 ஆண்டுகள் கழித்து முடிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆரியும் ஜின்னியும் திருமணமாகி தங்கள் மகன்களான ஜேம்ஸ் மற்றும் ஆல்பஸ் _ ஐ ஹாக்வார்டிற்கு அனுப்புகின்றனர். ரானக்கும் மற்றும் ஹெர்மியோனுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

பின்புலம்[தொகு]

தலைப்பைத் தேர்ந்தெடுத்தல்[தொகு]

தலைப்பை வெளியிடுவதற்கு சற்று முன்புவரை, J.K.ரவ்லிங், இந்த புத்தகத்திற்காக 3 தலைப்புகளைத் தேர்ந்தெடுத்திருப்பதாக அறிவித்தார்.[10][11] முடிவாக,ஆரி பாட்டர் அண்டு தி டெட்லி ஹாலோவஸ் என்ற தலைப்பில் 2006, டிசம்பர் 21 பொதுமக்களுக்காக ஒரு சிறப்பு கிறித்துமஸ் கருத்தைக் கொண்ட ஹாங்மென் புதிருடன் ரவ்லிங்கின் வலைத்தளத்தில், குறுகிய கால அவகாசத்தில் புத்தக வெளியீட்டாளர்களின் உறுதியுடன் இதன் மூலமாக வெளியிடப்பட்டது.[12] ஒரு நேரடி பேச்சு வார்த்தையின் போது,அவரிடம், வேறு எந்தத் தலைப்புகள் அவர் தேர்ந்தெடுத்தது என்று கேட்டபோது, ரவ்லிங் கூறியது.ஆரி பாட்டரும்,மூத்த மந்திரக்கோலும் , மற்றும் ஆரி பாட்டரும் பெவெரெல் க்வெஸ்ட்டும். [10]

புத்தகத்தை முடித்த ரவ்லிங்[தொகு]

2007, ஜனவரியில் ரவ்லிங் எடின்பர்கில் உள்ள பால்மோரல் தங்கும் விடுதியில் இருந்து புத்தகத்தை எழுதி முடிக்கிறார், மேலும் அவர் அறையில் உள்ள ஹெர்மெஸ் என்ற மார்பளவு பளிங்குச் சிலையில் தன் கையொப்பமிட்ட குறிப்பை எழுதி வைக்கிறார். அந்த வாசகம் கூறுவது: ' J.K.ரவ்லிங் ஆரி பாட்டரும் பயங்கரமான தீய சக்திகளும் என்ற புத்தகத்தை இந்த அறையில் (652) ஜனவரி 11, 2007 இல் எழுதி முடித்தார். [13] அவருடைய வலைத் தளத்தில், அவர் கூறியது, நான் இதுவரை இந்த மாதிரியான அளவுகடந்த கலவையான உணர்வுகளை என் வாழ்வில் உணர்ந்ததே இல்லை, ஒரே சமயத்தில் இதயம் நொறுங்குவது போலும் மற்றும் பரவசத்தையும் உணருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இவர் தன் கலவையான உணர்வுகளை, சார்லெஸ் டிக்கன்ஸ் தன் 1850 ஆம், ஆண்டு பதிப்பான டேவிட் காப்பர்ஃபீல்டின் முகவுரையோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார். அதில், 2 வருட கற்பனையின் உழைப்பு அத்தோடு நான் காணப்பட வேண்டும், 17 வருடங்கள் முயற்சி செய்ததற்கு, சார்லெஸ்.... அவர் தன் செய்தியை முடித்துவிட்டார். பயங்கரமன தீயசக்திகள் என்னுடைய விருப்பமானது., மேலும் அது தான் தொடரை முடிக்க அதி அற்புதமான வழி.[14]

வரவிருக்கும் புத்தகத்தின் வெளியீட்டிற்கு முன்பாக அதைப் பற்றிக் கேட்டபோது, தான் நினைத்தாலும் முடிவை அவரால் மாற்றமுடியாது என்றார். "' இந்தப் புத்தகங்கள் நீண்ட காலத்திற்கு முன்பாகவே ஆலோசிக்கப்பட்டது மேலும் இது வரை 6 புத்தகங்கள், அவை எல்லாம் ஒரே திசையில் செல்கின்றன.. அதனால், நிச்சயமாக என்னால் முடியாது[15] இந்தக் கடைசி அத்தியாயம் முந்தைய தொடர்களில் ஆரி பாட்டரும் பாதி ரத்த -இளவரசி என்ற புத்தகத்தை நெருக்கமாக ஒத்திருக்கிறது. ஏறத்தாழ ஒரே நாவலின் 2 பகுதி போல் உள்ளது. [16] அவர் சொன்னது இந்தப் புத்தகத்தின் கடைசி பாகம் 1990 களில் எழுதியது போல் தொடர்களில் அவரின் முந்தைய எழுத்தை பிரதிபலிக்கிறது.[17]

பட வெளியீடு[தொகு]

சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பரம்[தொகு]

லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பால்லட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட 1700 விருந்தாளிகளுடன் ரவ்லிங்கும் கலந்து கொண்டு இரவு முழுவதும் கையெழுத்திடுவதும், வாசிப்பதுமாக, கொண்டாடப்பட்டது.[18] ரவ்லிங், 2007 இல்அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்., அங்கே நியூ யார்க்கில், கார்னெஜி ஹாலில் நடந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் ஒரு நொடியில் விற்றுத் தீர்ந்தன.[19]

ஸ்கொலஸ்டிக் இன்க் என்ற ஆரி பாட்டர் தொடர்களின் அமெரிக்க வெளியீட்டாளர், பல மடங்கு மில்லியன் டாலர் மதிப்புள்ள கூடிய விரைவில் வரவிருக்கும் 7 என்ற சந்தைபடுத்தும் பிரச்சாரத்தை 'வீரப் பேருந்து' டன் அமெரிக்காவில் உள்ள 40 நூலகங்கள், இணைய தள ஆன் லைன் விசிறிகள் கலந்துரையாடல்கள் மற்றும் போட்டிகள், தொகுக்கக் கூடிய புத்தக பக்க அடையாளங்கள், டேட்டூக்கள் மற்றும், வெளியிடப்பட்ட 7 டெத்லீ ஹால்லொஸ் கேள்விகள் அதிகமாக விசிறிகளால் கேட்கப்பட்டது. <ref"Scholastic announces record breaking 12 million first printing in United States of Harry Potter and the Deathly Hallows". Scholastic. 14 மார்ச்சு 2007. http://www.scholastic.com/aboutscholastic/news/press_03142007_BA.htm. பார்த்த நாள்: 2007-07-09. </ref> ஸ்கொலேஸ்டிக் 7 கேள்விகளை வெளியிட்டு அதன் பதில்களை கடைசி புத்தகத்தில் காணலாம் என்று வெளியிட்டது.[20]

 1. யார் வாழ்வார்கள் ? யார் சாவார்கள்?
 2. ஸ்னேப் நல்லதா அல்லது கெட்டதா?
 3. ஹாக்வார்ட்ஸ் திரும்பத் திறக்குமா ?
 4. யார் யாருடன் முடிவார்கள் ?
 5. ஹோர்க்ரக்சஸ்கள் எங்கே?
 6. வால்டுமார்ட் தோற்கடிக்கப்படுவாரா?
 7. டெத்லி ஹாலோஸ் கள் என்றால் என்ன?

ஸ்கொலெஸ்டிக் ஆரி பாட்டர் இடம் - அதன் தலைமையகத்தில் ,நியூயார்க் நகரில் ஒரு மாயமான மற்றும் கற்றுதரக்கூடிய தெரு விழாக்களை நடத்தியது. அங்குதான் முதல் அமெரிக்கக் கையொப்பமிட்ட பதிப்பான மரணமயமான சதிகள் 20 சூலை 2007 இல் கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டங்களில் 20 அடி உயரமுள்ள (6 மீ) வொம்ப்பிங் வில்லோ, முகத்தில் சாயம் பூசுதல், மந்திரக் கோல் செய்தல், தீ விழுங்குபவர்கள், ஜாலக்காரர்கள் மற்றும் கயிற்றில் நடப்பவர்கள்.ஆகியவை இந்தக் கோலாகலக் கொண்டாட்டங்களில் அடங்கும்.[21]

J.K.ரவ்லிங் வெளியீட்டாளர்களுடன் சேர்ந்து ஒரு சுவரொட்டி தயாரித்தார் அதில் காணாமல் போன பிரிட்டிஷ்சிறுமியான மெடலீன் மெகேன் முகம் காணப்பட்டது. 21 சூலை 2007 இல் டெத்லீ ஹால்லோஸ் வெளியிடப்பட்டபோது எல்லா புத்தக வியாபாரிகளுக்கும் கிடைக்கும்படியாக செய்ததோடல்லாமல், அந்த படங்கள் எல்லாம் முக்கியமாக உலகில் உள்ள எல்லா கடைகளிலும் ஒட்டப்பட்டிருக்குமென்று நம்பினார்.[22]

தவறான பிரகடனம்[தொகு]

ரவ்லிங் பொதுமக்களிடம் யாரவது கடைசி புத்தகத்தில் உள்ள விஷயங்களை/தகவல்களை அறிந்திருந்தால் பிற வாசிப்பாளர்களுக்கு அவர்களின் அனுபவம் கெடுவதைத் தவிர்க்கும் பொருட்டு அதைத் தங்களுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், தயவிட்டுக் கேட்டுக் கொண்டார்.[23] 21 சூலை புத்தகம் வெளியாகும் வரை கடைசியில், ப்லூம்ஸ்பரி புத்தகத்தின் விஷயங்களைப் பாதுகாக்க GB 10 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் முதலீடு செய்தார்.[24]

ஆரி பாட்டர் தொடர்களின் அமெரிக்கத்தணிக்கையாளரான ஆர்தர் லெவைன், அச்சக பார்வைக்காக டெத்லீ ஹாலொசின் பதிப்புகளை முன்னதாகப் பகிர்ந்து கொடுக்க மறுத்துவிட்டார். இருந்தும் இரண்டு U.S பத்திரிக்கைகள் முன்னதாக விளக்க உரை வெளியிட்டுவிட்டனர்.[25]

சில கடைகள் பிரகடனத்தை உடைத்து முன்னதாகவே நகல்களை வினியோகித்து விடுவார்கள் என்று அனுமானிக்கப்பட்டது. முந்தைய தவணைகளின் மீது விதிக்கப்பட்ட அபராதத்தால் வினியோகஸ்தர்களுக்கு மேலும் தொடர்களின் நகல்கள் கொடுக்கப்படமாட்டாது என்பது ஒரு தடையல்ல.[26]

ஆன்லைன் கணினி வழி கசிவுகள் மற்றும் முன்னதாக ஒப்படைத்தல்[தொகு]

வெளியிடுவதற்கு 1 வாரம் முன்பு, நிஜமானதைப் போன்ற நிறைய நூல்கள் பல வடிவங்களில் தோன்றின. சூலை 16,அமெரிக்கப் பதிப்பின் 759 பக்கங்களும் புகைப்படங்கள்வடிவில் வெளியானது. மேலும் அதிகாரப் பூர்வ வெளியீட்டுத் தேதிக்கு முன் முழுவதும் வேறு பிரதி எடுக்கப்பட்டது.[27][28][29][30] இந்தப் புகைப்படங்கள் பின்னர் வலைத்தளங்களில் தோன்றின மற்றும் வலைதொடர்புக் குழுக்களுக்கும் சென்றது, ஸ்கொலெஸ்டிக் ஒரு ஆதாரத்தையாவது கண்டுபிடிக்க ஒரு துணையைத் தேட வழிநடத்தியது.[31]

ஆரி பாட்டர் தொடர் வரலாற்றில் மிக மோசமான பாதுகாப்பு மீறலை இது குறிப்பிடுகிறது.[32] ரவ்லிங்கும் அவர் வக்கீலும் உன்மையான கணினி வழி கசிவுகள் இருப்பதை உறுதிப்படித்தினர்.[33] தி பால்டிமோர் சன் மற்றும் தி நியூ யார்க் டைம்ஸ் இரண்டிலும் சூலை 18, 2007 இல் வெளியான மதிப்பீடு / அலசல் கதையின் நிறைய மூலப் பொருள்கள் இந்தக் கசிவோடு ஒத்துப்போனது.மேலும் வெளிவருவதற்கு 1 நாள் முன்பு, தி நியூ யார்க் டைம்ஸ் முக்கியமாக சுற்றி வரும் கசிவு நிஜமானது என உறுதி செய்தது.[32]

ஸ்கொலெஸ்டிக் அமெரிக்காவுக்கு வழங்கியதில் உத்தேசமாக 0.0001 பாகம் ஏற்கனவே அனுப்பபட்டு விட்டதாக -அதாவது 1200 நகல்கள் என்று அறிவித்துள்ளது.இந்த புத்தகம் வெளியிடுவதற்கு 4 நாட்கள் முன்பு, மேரிலேண்டில் உள்ள வாசகருக்குடீப் டிஸ்கவுன்ட்.காம் இல் இருந்து புத்தகத்தின் நகல் வந்தது, ஸ்கொலேஸ்டிக்கிற்கும், இந்த வலைத் தளத்திற்கும் இடையில் ஒரு கச முசா உருவானது. ஆரம்பத்தில் ஸ்கோலேஸ்டிக் இது ஒரு மனித குற்றம் என்று தாங்கள் திருப்தி அடைந்து விட்டதாக அறிக்கை விட்டது, மேலும் அபராத சாத்தியக் கூறுகளைப் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. [34] அடுத்த நாளே ஸ்கோலெஸ்டிக், டீப் டிஸ்கவுன்ட்.காம் மற்றும் அதன் விநிகோகஸ்தரான லெவி ஹோாம் கேளிக்கைக் கூடத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்தது.[35] தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக ஸ்கோலேஸ்டிக் சிகாகோ வின் சர்கியூட் கோர்ட் ஆஃப் கவுன்ட்டியில், வழக்கு தாக்கல் செய்தது. அதாவது டீப் டிஸ்கவுன்ட் முழுமையாக மற்றும் தெரிந்தே உடன்படிக்கையை, இந்த புத்தகம் பெரும் ஆவலுடன் எதிர்பர்க்கப்பட்ட மிகக் கவனமாக உருவாக்கப்பட்டது தெரிந்தே மீறியுள்ளது.[36] முன்னமே வெளியிடப்பட்ட சில புத்தகங்கள் உடனே eBayஇல் வெளியாகின. இன்னொரு வழக்கில், பப்லிஷெர்ஸ் வீக்லி க்கு ஆரம்ப விலையான 18 $ இல் இருந்து US $ 250 க்கு விற்கப்பட்டது.[37]

விலைப் போர்கள் மற்றும் பிற தர்க்கங்கள்/ விவாதங்கள்[தொகு]

அஸ்டாவும்,[38][39] UK யில் உள்ள பிற பல் பொருள் அங்காடிகளும் சேர்ந்து, ஏற்கனவே ஒரு பெரிய தள்ளுபடி தொகைக்குப் புத்தகத்திற்கு முன் பதிவு எடுத்திருந்தது. புத்தக வெளியீட்டிற்கு 2 நாட்கள் முன்பு அஸ்டா ,தாங்கள் ஒரு பிரதியை GB 5 பவுண்ட் ஸ்டெர்லிங்கிற்கு அதாவது ஒரு பிரதி ( US$8 ) க்கு விற்கபோவதாக அறிவித்து விலைப் போர் பொறியைக் கிளப்பியது. பிற சில்லறை வியாபாரத் தொடர்களும் அந்த தள்ளுபடி விலைக்கே புத்தகத்தை விற்க முன்வந்தனர். அந்த விலையில் விற்றால் புத்தகம் நஷ்டத்தைநோக்கிச் செல்லும். இதன் காரணமாகத் தொன்று தொட்டு புத்தகவிற்பனை செய்யும் விற்பனையாளர்கள், இது போன்ற போட்டிச் சூழலில் தாங்கள் நம்பிக்கையின்றி இருக்கிறோம் எனக்கூறி கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். தனியார் அங்காடிகள் இன்னும் சத்தமாக எதிர்ப்பைக் காட்டினார்கள், ஆனால் UKயின் மிகப் பெரிய, புத்தகத்துறையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வாட்டர்ஸ்டோன்புத்தக அங்காடி கூட பல்பொருள் அங்காடி விலையுடன் போட்டியிடமுடியவில்லை.சில சின்ன புத்தக அங்காடிகள் தங்கள் தேவையை மொத்தவியாபரிகளிடமிருந்து வாங்காமல், பல்பொருள் அங்காடிகளிடமிருந்து வாங்கின.அஸ்டா இதை சமாளிக்க , ஒரு வாடிக்கையாளருக்கு 2 பிரதிகள் மட்டுமே எனக் குறைத்து ,பெரும்பகுதியாக வாங்குவதைத் தடுக்க முயற்சித்தது. UK புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதி , ஃபிலிப் விக்ஸ் கூறியது, நாங்கள் பங்கு கொள்ள முடியாத ஒரு போர் இது. பல்பொருள் அங்காடிகள் இதை ஒரு டப்பா வேக வைக்கப்பட்ட அவரை விதைகளாக நடத்தியது /நினைத்து ,ஒரு நஷ்டப் பொருளாக ஆக்கியதை நாங்கள் அழவேண்டிய / கத்த வேண்டிய மானக் கேடாக எண்ணுகிறோம். சிம்பா தகவல் நிலையத்தைச் சார்ந்த ஆய்வாளர், மைக்கேல் நோரிஸ் கூறியது, நீங்கள் புத்தகத்தின் விலையை மட்டும் தாழ்த்தவில்லை.இந்த இடத்தில் நீங்கள் வாசித்தலின் மதிப்பையும் தாழ்த்துகிறீர்கள்.[40]

மலேசியாவில், இந்த புத்தக விற்பனையில் இதே போன்ற விலைப் போர் ஒரு விவாதத்தை/ தர்க்கத்தைக் கொண்டுவந்தது.[41] மலேசியாவில் உள்ள மிகப் பெரிய புத்தக அங்காடித் தொடர்களில் 4 அங்காடிகளான, MPH புத்தக அங்காடிகள், பாப்புலர்புத்தக அங்காடிகள், டைம்ஸ் மற்றும் ஆரிஸ் போன்றவை, டெஸ்கோ மற்றும் கேர்ஃபோர் ஹைப்பர் சந்தைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தங்கள் புத்தக அலமாரியில் உள்ள ஆரி பாட்டர் மற்றும் டெத்லீ ஹால்லோஸ் புத்தகங்களை அங்கிருந்து நீக்கிவிட தீர்மானித்தனர். மலேசியாவில் இந்த புத்தகத்தின் சில்லரை விலை மலேசிய ரிங்கிட் 109.90 (உத்தேசமாக GB ps 16), ஹைப்பர் சந்தைகளான டெஸ்கோ மற்றும் கேர்ஃபோர் MYR 69.90(GBps10) க்கு விற்றது.

புத்தகக் கடைகளின் இந்த நடவடிக்கை, பெங்குயின் புத்தக வினியோகஸ்தர்களை ஹைப்பர் சந்தைகளில் இருந்து தங்கள் புத்தகங்களை நீக்கவைக்கும்/ வெளியே எடுக்க வைக்கும் முயற்சியாகும். ஒருவழியாக இந்த விலை யுத்தம் 24, சூலை 2007 இல் ஒரு முடிவுக்கு வந்தது. 4 புத்தகக் கடைகளும் புத்தகங்களை தள்ளுபடி விலைக்கு விற்க முடிவு செய்து, திரும்ப விற்பதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். டெஸ்கொவும், கேர்ஃபோரும் புத்தகத்தை நஷ்டத்திற்கு விற்பதாக உறுதிசெய்தது அப்படிச் செய்யாமல் நல்ல வியாபார நோக்குடன், அறிவுடன், உணர்வுடன் மற்றும் நியாயமாகத் தொழில் செய்ய வலியுறுத்தியது. [89]

இஸ்ரேலில் ஒரு சனிக்கிழமை அதிகாலை இந்த புத்தக வெளியீடு ஷப்பாத்தை மீறியதாக விமரிசனம் செய்யப்பட்டது. வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான எலி யிஷாயின் கூற்று, யூதக் கொள்கைகளின் படி இது தடைசெய்ய்யப்பட்டது, மற்றும் யூதக் கலாச்சாரப் படி இது மாதிரி நிகழ்ச்சிகள் சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு நடைபெறவேண்டும். அவர்கள் வேறு ஒரு நாளில் வைத்துக் கொள்ளலாமே.[42] இஷாய் இதற்காக பணி நேரங்கள் மற்றும் ஓய்வு சட்டத்தின் அடிப்படையில் அவரால் தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.[93]

வெளியீடும் வரவேற்பும்[தொகு]

திரை விமர்சனம்[தொகு]

பால்ட்டிமோர் சன்ஸ் இன் விமர்சகர், மேரி கரொல் மெக்காலே தொடரைப் பாராட்டிப் பேசும்போது, ஒரு சிறந்த பழமை வாய்ந்த கதைஅல்லது பில்டன்ஸ் ரோமன் என்கிறார். '' இந்தப் புத்தகம் முந்தைய நாவல்களை விட மிக புத்தி பூர்வமாக உள்ளது மற்றும் நேருக்கு நேரான உரை நடையுடன் உள்ளது.[43] இன்னும் தி டைம்ஸின், ஆலிஸ் ஃபோர்தம் எழுதுகிறார்' , ரவ்லிங்கின் மேதாவித்தனம் ஒரு கனவு உலகத்தை மொத்தமாக உணர்ந்தது மட்டுமல்ல , பக்கங்களை விட்டு குதித்து வெளியேவரும்படியான கதாபாத்திரங்கள், நிஜமான மற்றும் குற்றமுள்ள மற்றும் துணிச்சலான விரும்பத்தக்க முறையில் வெளிப்படுத்திய விதத்திலும் உள்ளது' . ஃபோர்தம் முடிக்கும்போது, நாம் ஒன்றாக நீண்டகாலம் கடந்துள்ளோம். மேலும் ரவ்லிங்கோ அல்லது ஆரியோ கடைசிவரை நம்மை தாழ்த்திவிடவில்லை. [44] நியூ யார்க் டைம்சின் எழுத்தர் மிச்சிகோ ககுட்டானிஆரியை ஒரு கதாநாயகனாகவும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக / உதாரணம் காட்டக் கூடிய ஆக இரண்டு விதங்களிலும் சிறப்புற உருவாக்கிய ரவ்லிங்கின் திறமையைப் பாராட்டியுள்ளார். [45]

டைம் பத்திரிக்கையின் லெவ் க்ராஸ்மேன் இதை 2007 இன் முதல் 10 கதை புத்தகங்களில் ஒன்றாகவும், மற்றும் அதற்கு 8 ஆவது இடத்தையும் மேலும் என்றும் புத்தகங்கள் ஒரு பெரிய பரந்த ஊடகம் என்று நிரூபித்த ரவ்லிங்கையும் பாராட்டியுள்ளார். க்ராஸ்மேன் இந்த நாவலை முந்தைய தொடர் நாவல்களோடு இவ்வாறு ஒப்பிட்டுள்ளார். இது பாட்டர் தொகுப்புகளிலேயே மிக மனதுக்குகந்தது இது ஆனால் ரவ்லிங்கின் கதைக் கருவைஒட்டி பணிந்து போவது இறுதி முடிவோ என்று நினைக்க வைக்கிறது. சாவின் முகத்தில்/முகப்பில் தொடர்ந்து அன்பு செலுத்துவதற்காண அளவு கடந்த முக்கியத்துவம் கூட ஒரு காரணம்.[46][47] நாவல் எழுத்தாளர் எலிசபெத் ஹாண்ட் ''ஆரி பாட்டர் அண்டு தி டெட்லி ஹாலோவஸ் என்னும் இந்த நாவல் மொத்தத் தொடர்களுக்கும் தொப்பி வைத்தது போல் உள்ளது. ஆனாலும், விதவிதமான, வேறுபட்ட பாத்திர நடப்புகளைக் கொண்டு சென்ற விதம், ஒட்டுமொத்த சேர்க்கும் முயற்சியும் ஒரே தொகுப்பில் நெருக்கடியாக, இருப்பதாக அவர் விமரிசித்துள்ளார்.[48]

முரணாக, க்ரிஸ்டியன் சையின்ஸ் மானிட்டரின் , ஜென்னி சாயர் கூறுகிறார், ஹேரி பாட்டர் தொடர்களில் விரும்புவதற்கு நிறைய உள்ளது, பல அடுக்காக மந்திர உலகத்தை உணர்ந்து பிரமாதமாக சொல்லப்பட்ட விதம் முதல் நிறைய உண்டு இருந்தாலும், வயதுக்கு வருவதை விட்டுத் தள்ளினாலும், ஒரு கதை என்பது ஒருவர் மாறுவதைப் பற்றியது. ஆனால் ஹேரி அதிகம் மாறவில்லை. ரவ்லிங்கின் திட்டமிடப்பட்ட நோக்கில், ஹேரி தடுமாற்றமில்லாமல் நல்ல வழியில் சென்று கடைசியில் வால்டுமார்ட்டை வெல்வது நம்மை உணர்ச்சிவயப்படுத்தியது. இது தவிர்க்கமுடியாதது, ஆனால் புனிதமானது/பயங்கரமானது.[49] 2007 ஆகஸ்ட் 12, நியூ யார்க் டைம்ஸில் , க்ரிஸ்டொஃபர் ஹிட்சென்ஸ் இதை இரண்டாம் உலகப் போர் கால ஆங்கிலம் தங்கிப் பயிலும் பள்ளிகளின் கதைகளோடு ஒப்பிட்டுள்ளார், மற்றும் அவர் எழுதுகையில்,இந்தத் தொடர் முழுவதுக்குமாக ரவ்லிங் அழியாத புகழை வென்றுள்ளார் என்றும் ஆனால் ரவ்லிங், டியூஸ் எக்ஸ் மசீனாவைபயன்படுத்தியது அவர் விரும்ப வில்லை என்றும், புத்தகத்தின் நடுவில் உள்ள அத்தியாயங்கள் தேவையில்லாமல் நீளமாக இருப்பதாகக் கருதுவதாகவும் மேலும் இயான் ஃப்லெமிங் வில்லனை விட வால்டுமார்ட் அயர்வுடன், தளர்வுடன் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.[108]

ஸ்டீஃபன் கிங், புத்தக விமர்சன கர்த்தாக்கள் சிலரை மெக்காலே உட்பட, அவர்களின் பதில்களை, அவர்கள் அந்த புத்தக வேலையைப் பற்றி மிக வேகமான/ அவசர முடிவுக்கு வந்து விட்டதாக விமரிசித்துள்ளார்[110] அவர் இது மிகத் தவிர்க்கமுடியாதது.என நினைத்தார் ,ஏனெனில் வெளியீட்டிற்கு முன்னால் இருந்த அளவு கடந்த ரகசியம் விமரிசன கர்த்தாக்களுக்கு வாசித்து, பொருட்படுத்துவதற்கு போதுமான கால/ நேர அவகாசத்தை அனுமதிக்கவில்லை.ஆனால் இதன் பொருள் முந்தைய விமரிசனங்களில் ஆழம் இல்லாதிருந்தது. எழுத்து நடை ஏமாற்றத்தை தருவதாக இருப்பதை காண்பதை விடுத்து, அது, பக்குவத்துடனும், தரம் உயர்ந்தும் இருப்பதாக உணர்ந்தார். புத்தகங்களில் சொல்லப்பட்ட விஷயக் கருத்துகள் வயது முதிர்ந்ததாக உணர்வதாகவும், தொடர்களின் இடையில் இருந்து ரவ்லிங்க் வயது வந்த வாசகர்களை மனதில் கொண்டு, உறுதியாகத் தெளிவாக எழுதியுள்ளார். இவர் இந்தப் பணியை மிக கௌரவத்துடன் ஹக்கல்பெர்ரி ஃபின் மற்றும் ஆலிஸ் இன் வொண்டர்லேண்டுடன் ஒப்பிட்டு, அவை எப்படி இன்றுவரை நிலைத்து நிற்கிற வெற்றிகரமான தரமான குழந்தைகள் முதல் வயது வந்த வாசகர்களுக்குப் பிடித்த வகையில் உள்ளதோ அது போல் இருக்கிறது என்கிறார்.

விற்பனை வரலாறு[தொகு]

Lines at Borders at midnight to buy the book

ஹேரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹால்லோஸ் விற்பனையில் சாதனை படைத்தது. US இல் டெத்லி ஹாலோவ்ஸ் முதல் பதிப்பு 12 மில்லியன் நகல்கள் வரை ஓடியது. மேலும் 1 மில்லியனுக்கும் மேல் அமேஜான் மற்றும் பார்னேஸ் & நோபிலால் முன் பதிவு செய்யப்பட்டது.[50] 2007, ஏப்ரல் 12, பார்னெஸ் & நோபில்அதன் வலைதளத்தின் மூலமாக முன் பதிவு செய்த டெத்லி ஹாலோவ்ஸ் பிரதிகள் , அதன் முந்தைய சாதனையை முறியடித்து 500,000 அதிகமான பிரதிகளை எட்டியது.[51] ஆரம்ப தினத்தன்று US இல் 8.3 மில்லியன் பிரதிகள் விற்று சாதனை படைத்தது,[52][53] மற்றும் UK இல் 2.65 மில்லியனும்,[54]

WH ஸ்மித்தில் விற்பனை 1 நொடிக்கு 15 புத்தகங்கள் என்ற கணக்கை எட்டியதாக அறிவிக்கப்பட்டது.[55] சூன் 2008 க்குள் கிட்டத்தட்ட புத்தகம் வெளியிடப்பட்ட அடுத்த ஆண்டு உலக அளவில் விற்பனை 44 மில்லியன்கள் என்று அறிவிக்கப்பட்டது. [56]

விருதுகள் மற்றும் கவுரவங்கள்[தொகு]

ஹேரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹால்லோஸ் நிறைய விருதுகளை வென்றது.[7] 2007 இல் , இந்த புத்தகம் ஒரு நியூ யார்க டைம்ஸ் 100 குறிப்பிடக்கூடிய புத்தகங்கள் [57] என்று பெயரிட்டது, மேலும் அதனுடைய ஒரு நோட்டபில் குழந்தைகள் புத்தகங்கள் என்றும் கூறப்பட்டது.[58]பப்லிஷெர்ஸ் வீக்லி அவர்களுடைய பட்டியலில் 2007 இன் புத்தகங்களில் சிறந்தது ஆரி பாட்டர் அண்டு தி டெடட்லி ஹாலோஸ் என்று கூறியுள்ளது.[59] 2008 இல் அமெரிக்க நூலக சங்கம் இந்த நாவலை இளம் வயதினருக்கான சிறந்த புத்தகங்கள் [60] என்றும், நோட்டபில்/ குறிப்பிடக்கூடிய குழந்தைகள் புத்தகமாகப் பட்டியலிட்டது.[61] மேலும் ஆரி பாட்டர் அண்டு தி டெத்லி ஹாலோவஸ் இந்த புத்தகம் 2008 கொலராடோ ப்லூ ஸ்ப்ரூஸ் புத்தக விருதையும் பெற்றது.[7]

ரவ்லிங்கின் கருத்துகளும் மற்றும் இணைப்புகளும்[தொகு]

ஒரு பேட்டியில்,[62] ஆன்லைன் அரட்டையில்,[10][63] ரவ்லிங்கின் வலைதளத்தின் மாதத்தின் மந்திரவாதி பிரிவில் மற்றும் அவருடைய 2007 யூ.எஸ் திறந்த புத்தக சுற்றுப் பயணத்தில் , புத்தகத்தில் சேர்க்கப்படாத கூடுதல் பாத்திரத் தகவலை வெளியிட்டார். இந்த தகவல் குறித்த முதல் துணுக்குகள் மூவர்குழு மற்றும் அவர்களின் குடும்பத்தினர், ஆரி ஆகியோருடன் துவங்குகிறது.

ஆரி, மந்திர அமைச்சகத்தின் அரசர்ஆனான், பின்னர் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டான். என்று கூறினார். ஆரி பாட்டர் மற்றும் பாதி ரத்த இளவரசியில் , ஒரு சமயம் ஹோலிஹெட் ஹார்பீஸ் க்விட்டிச் குழுவுக்காக விளையாடி பின்னர் ஆரியுடன் குடும்பம் அமைக்கச் சென்ற ஆரியின் காதலியான ஜின்னி வெஸ்லே யைப் பற்றியும், பின்னர் ஜின்னி டெய்லி ப்ரோஃபெட்டின் தாளாளராக, க்விட்டிஸ்சின் தலைமைஏற்றார்.ரோன் வெஸ்லே சில காலம் ஜியார்ஜின் வீஸ்லீஸ் விஸார்ட் வீசஸ் கடையில் வேலை பார்த்தான், பின்னர் ஆரியுடன் ஆரர் ஆக சேர்கிறான். ஹெர்மியோன் தன் பெற்றோர்களை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடித்து, அவர்கள் மீது பாதுகாப்புக்காக வைத்த நினைவாற்றல் மாற்றங்களை எடுத்து விடுகிறாள் . தொடக்கத்தில், மந்திர அமைச்சகத்தில், மந்திர உயிர்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் துறையில் வேலை பார்த்தாள் அங்கு வீட்டு எல்வ்ஸ் களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினாள். பின்னர் மேஜிக்கள் லா என்ஃபோர்ஸ்மென்ட் துறைக்கு மாறி, சுத்தமல்லாத ரத்தம், கொடுமைப்படுத்தும் சட்டங்களை ஒழித்துக்கட்ட துணை புரிந்தாள்.அந்த மூவர் குழுவில் இவள் ஒருத்தி தான் திரும்பச் சென்று, அவளது ௭ழாவது வருடத்தை ஹோக்வார்ட்சில் முடித்தாள்.மேலே பேசும்போது ரவ்லிங் டம்பில்டோர் உண்மயில் ஒரு உல்லாசப் பேர் வழி என்று வெளியிட்டார்.[64][65] அடுத்து, வால்டுமார்ட்டின் தலை விதியை பற்றி வெளியிட்டார். அவரது இறப்புக்குப் பின் வலுக்கட்டாயமாக கிங்கின் க்ராஸ் லிம்போவில் அவனுடைய மிகத் தீவிரமான குற்றங்களால் குறுக்கப்பட்ட வடிவில் பிசாசாக இருக்க வைக்கப்பட்டுள்ளான்.

ரவ்லிங், பரந்த மந்திரவாத உலகில்மேற்கொண்டு உண்டான மாறுதல்களாகப் பின்வருவனவற்றை வெளியிடுகிறார்.கிங்க்ஸ்லி ஷகில்போல்ட், ஆரி பாட்டர் மற்றும் ஆர்டர் ஆஃப் ஃபினிக்சில் , ஒரு சின்ன பாத்திரத்தில் அறிமுகமானவர், பின்னர் பெர்சி வெஸ்லே, ரோன்ஸ் சகோதரன் அவருக்குக் கீழ் உயர்ந்த பதவி வகிக்க, மாயாஜாலத்தின் நிரந்தர அமைச்சர்ஆனார்.

ஷேக்கல்போல்ட்டால் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களில் மந்திரவாத சிறையான அஜ்கபானில் டெமென்டர்சை பயன்படுத்துவது ஒரேயடியாக நிறுத்தப்பட்டது. அமைச்சகத்தை சீர்திருத்துவதில் ஆரி, ரோன் மற்றும் வெர்மியொன் உறுதுணையாக இருந்தனர். [10] ஒரு வருடத்தில் ஹாக்வார்ட்சில், ஆரி, டிபென்ஸ் அகெய்ன்ஸ்ட் தி டார்க் ஆர்ட்ஸ் வகுப்பில் பயிற்றுவிக்க பல தடவைகள் வந்ததாக அறிகிறோம்.[62] கடைசியாக ரவ்லிங், ஹோக்வார்ட்சில் தலைமை ஆசிரியராக ஊழியம் செய்த ஸ்னேப்பின் ஓவியம் தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் இல்லை, ஏனெனில் அவர் பதவியை தூக்கி எறிந்தது தான்.என்று ரவ்லிங் கூறுகிறார்.பின் ஆரி, ஸ்னேப்பின் ஓவியம் சேர்க்கப்பட்டதை உறுதிப் படுத்துகிறான், மற்றும் ஸ்னேப்பின் உண்மையான விசுவாசம்/ பக்தியை பொதுமக்களுக்கு வெளியிடுகிறான்.[10]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆரி பாட்டர் அண்ட் டெத்லீ ஹாலோஸின் உலகளாவிய புகழால், இது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.முதல் மொழி பெயர்ப்பு 25, செப்டெம்பர் 2007 இல் (Гаррі Поттер і смертельні реліквії என)உக்ரேனியமொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது.[3] ஆரி பாட்டர் அண்ட் ரெலிக்ஸ் ஆஃப் டெத் என்று புத்தகத்தின் ஸ்வீடத் தலைப்பு ரவ்லிங்கால் வெளியிடப்பட்டது. ஆரி பாட்டர் அண்டு தி ரெலிக்ஸ் ஆஃப் டெத் (Harry Potter och Dödsrelikerna)அதாவது வெளியீட்டிற்கு முன் ஸ்வீடன் புத்தக வெளியீட்டாளர் ' டெத்லீ ஹாலொஸ்' என்ற 2 வார்த்தைகளை புத்தகத்தை வாசிக்காமல் மொழிபெயர்ப்பது கடினமாக இருப்பதாகக் கூறியதும் ரவ்லிங் தலைப்பை வெளியாக்கினார்.[4] ஒரு புதிய தலைப்புடன் 26 ஜனவரி 2008 இல் முதல் போலிஷ்மொழி பெயர்ப்பு வெளியானது.[5] அது Harry potter i Insygnia smierci-ஆரிபாட்டர் அண்ட் அண்ட் தி இன்சிக்னியா ஆஃப் டெத். [66] ஹிந்தி மொழி பெயர்ப்பு ஆரி பாட்டர் ஔர் மௌத் கே தோஃபே அதாவது ஆரி பாட்டர் அண்ட் தி கிஃப்ட்ஸ் ஆஃப் டெத் இந்தியாவில் மஞ்சுல் வெளியீட்டாளர்களால் 27 சூன் 2008 வெளியிட்டது.[6]

படத் தழுவல்கள்[தொகு]

டேவிட் யாட்ஸ் இயக்கத்தில் ஆரி பாட்டர் அண்ட் தி டெத்லீ ஹாலொஸின் 2 பாகத் தழுவல்களை இரண்டையும் அவரே எடுக்கத் திட்டமிடப்பட்டது.பாகம் 1 19 நவம்பர் 2010 இல் வெளியிடவும், பாகம் 2 சூலை 15, 2011 இலும் திட்டமிடப்பட்டது.[67][68] 2007-2008 இல் ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்காவின் போராட்டம் முடியும் வரை திரைக்கதை எழுத ஸ்டீவ் க்லோவ்ஸ் வேலையைத் தொடங்க தாமதித்தார்[69] திரைப்பட வேலை 2009 பிப்ரவரியில் தொடங்கி அந்த வருடக் கடைசி வரை நடந்தது.[70] முதல் மூன்று படங்களுக்கும் இசையமைத்த ஜான் வில்லியம்ஸ் இந்த முறையும் திரும்ப இசையமைக்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.[71]

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 The Celebrity 100 #9: J. K. Rowling [Forbes.com, 2008-06-11] "The final one, Harry Potter and the Deathly Hallows, has sold 44 million since it was published last சூலை, including 15 million in the first 24 hours." Retrieved 2009-07-17
 2. "Harry Potter finale sales hit 11m". BBC. 23 சூலை 2007. 2007-07-27 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 "Ukrainian Potter comes first". Kyiv Post. 27 சூலை 2007. 2007-07-29 அன்று பார்க்கப்பட்டது.
 4. 4.0 4.1 "Släppdatum för sjunde Harry Potter-boken klar!". Tiden. 2007-07-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-07-24 அன்று பார்க்கப்பட்டது.
 5. 5.0 5.1 "Translated Edition of Deathly Hallows Hits Stores in Poland". Leaky Cauldron website. 25 சனவரி 2008. 2008-01-25 அன்று பார்க்கப்பட்டது.
 6. 6.0 6.1 "Harry Potter aur Maut Ke Tohfe - Hindi Version of the Deathly Hallows". India Club. 2009-07-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-04 அன்று பார்க்கப்பட்டது.
 7. 7.0 7.1 7.2 "Harry Potter and the Deathly Hallows". Arthur A. Levine Books. 2001–2005. 2007-10-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-07-17 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: date format (link)
 8. ரவ்லிங், J. K. (வேக்ஸ் மேன், ஷேரன்(2005). ஆரி பாட்டர் அண்டு தி ஆஃப் பிளட் பிரின்ஸ் ஆங்கிலத்தில்). லண்டன்: ப்ளும்ஸ்பெரி/நியூயார்க் நகரம்: ஸ்கோலஸ்டிக், et al. ப. 503. யுகே ஐஎஸ்பிஎன் 0747581088/யுஎஸ் ஐஎஸ்பிஎன் 0439784549.
 9. ரவ்லிங் J.K (இரண்டாயிரம்.) ஆரி பாட்டர் அண்டு தி கோப்லெட் ஆஃப் ஃபயர் (ஆங்கிலத்தில்). லண்டன்: ப்ளும்ஸ்பெரி, et al. ப.566. யுகே ஐஎஸ்பிஎன் 074754624X.
 10. 10.0 10.1 10.2 10.3 10.4 "Webchat with J.K. Rowling, 30 சூலை 2007". Bloomsbury Publishing. Archived from the original on 2007-10-12. https://web.archive.org/web/20071012230751/http://www.bloomsbury.com/harrypotter/content.asp?sec=3&sec2=1. பார்த்த நாள்: 2007-07-31. 
 11. "J.K.Rowling Official Site". News Archive. 2007-04-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-04-23 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Harry Potter and the Deathly Hallows". Bloomsbury Publishing. 2006-12-21. 2007-02-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-12-21 அன்று பார்க்கப்பட்டது.
 13. Cornwell, Tim (2007-02-03). "Finish or bust  — J. K. Rowling's unlikely message in an Edinburgh hotel room". The Scotsman. 2007-03-29 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Rowling reacts to Potter's end". USA Today (அசோசியேட்டட் பிரெசு). 2007-02-06. http://www.usatoday.com/life/books/news/2007-02-06-rowling_x.htm. பார்த்த நாள்: 2007-07-21. 
 15. "One-on-one interview with J.K. Rowling" (reprint). ITV. 2005-07-17. http://www.accio-quote.org/articles/2005/0705-edinburgh-jones-official.html. பார்த்த நாள்: 2007-06-16. 
 16. Rowling, J. K. (2004-03-15). "Progress on Book Six". J. K. Rowling Official Site. 2012-01-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2006-12-23 அன்று பார்க்கப்பட்டது.
 17. "Rowling to kill two in final book". BBC News. 2006-06-27. http://news.bbc.co.uk/2/hi/entertainment/5119836.stm. பார்த்த நாள்: 2007-07-25. 
 18. "Harry Potter". Scholastic. 2007-05-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-05-25 அன்று பார்க்கப்பட்டது.
 19. "The Open Book Tour, அக்டோபர் 2007". J.K.Rowling Official Site. 14 சூலை 2007. 2007-07-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-07-14 அன்று பார்க்கப்பட்டது.
 20. "Harry Potter: Shrieking Shack Poll". Scholastic. 2007-08-18 அன்று பார்க்கப்பட்டது.
 21. "Scholastic to Host "Harry Potter Place"". Scholastic. 2007-06-26. 2011-05-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-06-26 அன்று பார்க்கப்பட்டது.
 22. "Rowling in Madeleine poster plea". BBC News. 2007-07-16. http://news.bbc.co.uk/2/hi/uk_news/6901845.stm. பார்த்த நாள்: 2007-07-17. 
 23. Rowling, J. K. (14 மே 2007). "J.K.Rowling Official Site". 2005-12-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-05-18 அன்று பார்க்கப்பட்டது.
 24. "10 million pounds to guard 7th Harry Potter book". Rediff News. 16 சூலை 2007. 2007-07-16 அன்று பார்க்கப்பட்டது.
 25. "Editor Says Deathly Hallows Is Unleakable". MTV Overdrive (video). 17 சூலை 2007. 2007-07-19 அன்று பார்க்கப்பட்டது.
 26. "Potter embargo "could be broken"". BBC News. 12 சூலை 2007. 2007-07-17 அன்று பார்க்கப்பட்டது.
 27. "Harry Potter Fans Transcribe Book from Photos". TorrentFreak. 18 சூலை 2007. 2007-07-19 அன்று பார்க்கப்பட்டது.
 28. "New Potter book leaked online". Sydney Morning Herald, Fairfax newspapers. 18 சூலை 2007. 2007-07-18 அன்று பார்க்கப்பட்டது.
 29. "Harry Potter and the Deathly Hallows leaked to BitTorrent". TorrentFreak. 17 சூலை 2007. 2007-07-19 அன்று பார்க்கப்பட்டது.
 30. Healey, Jon (20 சூலை 2007). "Harry Potter Spoiler Count". Los Angeles Times. 2007-07-20 அன்று பார்க்கப்பட்டது.
 31. Hoyt, Clark (30 சூலை 2007). "Did the Times Betray Harry Potter Fans?". New York Times. 2007-07-30 அன்று பார்க்கப்பட்டது.
 32. 32.0 32.1 Fenton, Ben (17 சூலை 2007). "Web abuzz over Potter leak claims". 2007-07-20 அன்று பார்க்கப்பட்டது.
 33. Malvern, Jack (2007-07-19). "Harry Potter and the great web leak". 2007-07-19 அன்று பார்க்கப்பட்டது.
 34. "The spell is broken". The Baltimore Sun. 18 சூலை 2007. 2021-05-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-07-18 அன்று பார்க்கப்பட்டது.
 35. "Press release from Scholastic". PR Newswire (from Scholastic). 18 சூலை 2007. 2007-07-18 அன்று பார்க்கப்பட்டது.
 36. "Distributor mails final Potter book early". MSNBC Interactive. 18 சூலை 2007. 2007-08-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-07-18 அன்று பார்க்கப்பட்டது.
 37. "I Was an eBay Voldemort". National Review Online. 20 சூலை 2007. 2007-08-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-07-20 அன்று பார்க்கப்பட்டது.
 38. "Potter book firm clashes with supermarket over price". Times Newspapers. 2007-07-17. 2009-07-17 அன்று பார்க்கப்பட்டது.
 39. Addley, Esther (18 சூலை 2007). "Harry Potter and the supermarket giant, a very modern publishing tale". The Guardian. 2009-07-18 அன்று பார்க்கப்பட்டது.
 40. "British retailer sells final Potter book for $10, setting dangerous precedent for U.S. market". 20 சூலை 2007. Archived on 2007-08-22. Error: If you specify |archivedate=, you must also specify |archiveurl=. http://web.archive.org/web/20070822145746/http://www.iht.com/articles/2007/07/20/arts/0721potter-asda.php. பார்த்த நாள்: 2009-07-17. 
 41. "Harry Potter and the ugly price war". The Star Malaysia. 21 சூலை 2007. 2007-09-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-07-21 அன்று பார்க்கப்பட்டது.
 42. "Plans for Sabbath sales of Harry Potter draw threats of legal action in Israel". International Herald Tribune. 17 சூலை 2007. 2007-09-19 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2007-07-18 அன்று பார்க்கப்பட்டது.
 43. McCauley, Mary Carole (18 சூலை 2007). "An inevitable ending to Harry Potter series". Baltimore Sun. 2007-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-07-21 அன்று பார்க்கப்பட்டது.
 44. Fordham, Alice (21 சூலை 2007). "Harry Potter and the Deathly Hallows". The Times. 2007-07-25 அன்று பார்க்கப்பட்டது.
 45. Kakutani, Michiko (19 சூலை 2007). "An Epic Showdown as Harry Potter Is Initiated Into Adulthood". New York Times. 2009-07-20 அன்று பார்க்கப்பட்டது.
 46. கிராஸ்மேன், லெவ்; "10 சிறந்த கற்பனை புத்தகங்கள்"; டைம் பத்திரிகை; 24 டிசம்பர் 2007; பக்கங்கள் 44–45.
 47. Grossman, Lev (24 திசம்பர் 2007). "Top 10 Fiction Books". time.com. 2007-12-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-12-24 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
 48. Hand, Elizabeth (22 சூலை 2007). "Harry's Final Fantasy: Last Time's the Charm". The Washington Post Company. 2009-07-20 அன்று பார்க்கப்பட்டது.
 49. Sawyer, Jenny (25 சூலை 2007). "Missing from Harry Potter  a real moral struggle". Christian Science Monitor. 2007-07-25 அன்று பார்க்கப்பட்டது.
 50. "Record print run for final Potter". BBC. 15 மார்ச்சு 2007. http://news.bbc.co.uk/1/hi/entertainment/6452987.stm. பார்த்த நாள்: 22 மே 2007. 
 51. "New Harry Potter breaks pre-order record". RTÉ.ie Entertainment. 13 ஏப்ரல் 2007. 2007-04-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 ஏப்ரல் 2007 அன்று பார்க்கப்பட்டது.
 52. Blais, Jacqueline (2007-07-24). "'Deathly Hallows' records lively sales". USAToday. 2009-07-13 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |coauthors= ignored (உதவி)
 53. Rich, Motoko (22 சூலை 2007). "Record First-Day Sales for Last 'Harry Potter' Book". New York Times. 2009-07-13 அன்று பார்க்கப்பட்டது.
 54. "'Harry Potter and the Deathly Hallows' Breaks Records". Associated Press. 24 சூலை 2007. 2009-07-13 அன்று பார்க்கப்பட்டது.
 55. Phelvin, Patrick (23 Jul 2007). "Harry Potter and the hallowed sales figures". Telegraph. 2009-07-13 அன்று பார்க்கப்பட்டது.
 56. "#9 J.K. Rowling". Forbes.com LLC. 06.11.08. 2009-07-19 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 57. "100 Notable Books of 2007". The New York Times. 2 திசம்பர் 2007. 2009-07-17 அன்று பார்க்கப்பட்டது.
 58. Fleischman, Paul (2 திசம்பர் 2007). "Notable Children's Books of 2007". The New York Times. 2009-07-17 அன்று பார்க்கப்பட்டது.
 59. Staff (2007-05-11). "PW's Best Books of the Year". Reed Business Information. http://www.publishersweekly.com/article/CA6496987.html. பார்த்த நாள்: 2009-07-17. 
 60. "Best Books for Young Adults 2008". American Library Association. 2008. 2009-05-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-07-17 அன்று பார்க்கப்பட்டது.
 61. "2008 Notable Children's Books". American Library Association. 2008. 2009-07-17 அன்று பார்க்கப்பட்டது.
 62. 62.0 62.1 Brown, Jen (2007-07-25). "Finished Potter? Rowling tells what happened next". MSNBC. Archived from the original on 2007-08-01. https://web.archive.org/web/20070801083035/http://www.msnbc.msn.com/id/19959323/. பார்த்த நாள்: 2007-07-26. 
 63. "Rowling Answers Fans' Final Questions". MSN Entertainment. 2007-07-30. Archived from the original on 2007-10-17. https://web.archive.org/web/20071017014927/http://entertainment.msn.com/news/article.aspx?news=270634&GT1=10150&mpc=1. பார்த்த நாள்: 2007-07-31. 
 64. "Rowling says Dumbledore is Gay". Newsweek. 16 அக்டோபர் 2007. http://www.newsweek.com/id/50787. பார்த்த நாள்: 2007-10-21. 
 65. "JK Rowling outs Dumbledore as gay". BBC News. 2007-10-20. http://news.bbc.co.uk/1/hi/entertainment/7053982.stm. பார்த்த நாள்: 2007-10-21. 
 66. "Harry Potter i insygnia śmierci". LibraryThing. 24 திசம்பர் 2007. 2007-12-24 அன்று பார்க்கப்பட்டது.
 67. "Official: Two Parts for Deathly Hallows Movie". ComingSoon.net. 25 பிப்ரவரி 2009. 2009-02-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-03-02 அன்று பார்க்கப்பட்டது.
 68. "Release Date Set for Harry Potter 7: Part I". ComingSoon.net. 25 ஏப்ரல் 2008. 2008-05-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-05-25 அன்று பார்க்கப்பட்டது.
 69. "About Those Harry Potter Rumours". Empire. 14 சனவரி 2008. 2015-09-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-02-14 அன்று பார்க்கப்பட்டது.
 70. Richards, Olly (2008-03-14). "Potter Producer Talks Deathly Hallows". Empire. http://www.empireonline.com/news/story.asp?NID=22200. பார்த்த நாள்: 2008-03-15. 
 71. "Williams Might be Back for Last Potter Film". JWFAN. 2007-08-22. http://www.jwfan.com/index.php?option=com_content&task=view&id=856&Itemid=1. பார்த்த நாள்: 2007-08-25. 

வெளி இணைப்புகள்[தொகு]

Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.