ஆரி பாட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரி பாட்டர்
ஆரி பாட்டர் சின்னம் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் வெளியான நாவல்களிலும், திரைப்படங்களிலும் காணப்படும் சின்னம்.
ஆரி பாட்டர் சின்னம் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் வெளியான நாவல்களிலும், திரைப்படங்களிலும் காணப்படும் சின்னம்.
ஆசிரியர்ஜே. கே. ரௌலிங்
நாடுஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
மொழிஆங்கிலம்
வகைகனவுருப் புனைவு, நாடகம், இள வயதுவந்தோர் கற்பனைகள், சாகசம், பயங்கரம், மந்திர தந்திரம்
வெளியீட்டாளர்கள்புலூம்சுபெரி பப்ளிசிங் (ஐ.இ)
ஆர்தர் ஏ. லீவின் புக்சு (ஐ.அ.நா.)
வெளியீடு26 சூன் 1997 – 21 சூலை 2007 (initial publication)
ஊடக வகைபதிப்பு (hardback & paperback)
Audiobook
மின்னூல் (இன் படி மார்ச்சு 2012)[1]
புதின எண்ணிக்கை7

ஆரி பாட்டர் என்பது பிரித்தானிய எழுத்தாளரான ஜே. கே. ரௌலிங் என்பவரால் எழுதப்பட்ட ஏழு கனவுருப் புனைவுப் புதினங்களின் தொகுப்பாகும்.

ஆக்வாட்சு மந்திரவாதப் பள்ளியில் பயிலும் ஆரி பாட்டர் (Harry Potter) மற்றும் அவன் நண்பர்களான ரோன் வீசுளி (Ronald Weasley) மற்றும் எர்மாயினி கிறேஞ்செர் (Hermione Granger) ஆகியோரின் சாகசங்களை இத்தொடர் விவரிக்கிறது.

இத்தொடரின் கதைக்கருவானது, மந்திரவாத உலகத்தை வெல்லுதல், மந்திரவாதிகள் அல்லாதோரை ஆளுதல், தன் எதிரிகளை (குறிப்பாக ஆரியை) அழித்தல், சாகாவரம் பெறுதல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்ட இலோர்டு வோல்டெமோர்ட் (Lord Voldemort) என்ற கொடிய மந்திரவாதியைத் தோற்கடிக்க ஆரி மேற்கொள்ளும் முயற்சிகளை மையமாகக் கொண்டுள்ளது.

சூன் 30, 1997இல் இத்தொடரின் முதல் புதினமான ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (Harry Potter and the Philosopher's Stone) வெளிவந்தபின்னர் இத்தொடருக்கு உலகளாவிய புகழும்,விமர்சனங்களும், வணிகரீதியான வெற்றியும் கிடைத்தது. சூலை 2013 நிலவரப்படி இப்புதினங்கள் 40 கோடி முதல் 45 கோடிப் பிரதிகள் வரை விற்று சாதனை படைத்துள்ளன. மேலும் இவை 73 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இத்தொடரின் இறுதி நான்கு புதினங்கள், வரலாற்றிலேயே மிக விரைவாக விற்பனையான நூல்கள் என்ற சாதனையைப் படைத்தன. இத்தொடரின் இறுதிப் புதினமானது வெளிவந்த 24 மணிநேரத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் ஏறத்தாழ 1.1 கோடிப் பிரதிகள் விற்றது.

இத்தொடரில் கனவுருப்புனைவு, வயதுக்கு வருதல், பிரித்தானிய பள்ளிக்கூடக் கதையியல், மர்மம், திகில், சாகசம், காதல், மரணம், பாகுபாடு, ஊழல் எனப் பல்வேறு கருத்துகள் அடங்கியுள்ளன.

கதை பிறந்த வரலாறு[தொகு]

1990 ம் ஆண்டில் ஒரு நாள் மக்கள் மிகுந்த தொடருந்தில் மான்செஸ்டரில் இருந்து லண்டன் நோக்கி எழுத்தாளர் ரெளலிங் அவர்கள் பயனித்துக் கொண்டு இருந்தபோதே இந்தக் கதைக்கான எண்ணம் அவர் மனதில் உதித்தது. இதன் போது அந்தக் கருவை மறந்து விடாமல் இருக்க தன் கைக் குட்டையில் அதை எழுதி வைத்து விடுகின்றார்.[சான்று தேவை] இது பற்றி ரெளலிங் தனது இணையத் தளத்திலும் கூறியுள்ளார்.

அதே நாள் மாலை நேரம் தனது முதலாவது புத்தகமான ஹரிபொட்டர் அன்ட் த பிலோசபர்ஸஸ் ஸ்டோன் என்ற புத்தகத்திற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கின்றார். அத்துடன் தான் எழுத இருக்கும் ஏழு ஹரி பொட்டர் புத்தகங்களின் பாதையை வகுப்பதுடன் பெருமளவான கற்பனைப் பாத்திரங்களையும், கற்பனை மந்திர உலகையும் ஏற்படுத்திக் கொண்டார்.

திட்டம்[தொகு]

ஆரி போட்டர் தொடர்களின் மைய பாத்திரம்- ஆரி போட்டர் ஆகும். இவன் தன் சிறு வயதில் தன்னுடைய சகோதரன் - டட்லி, பெரியம்மா( ஆரியினுடைய அம்மாவின் உடன்பிறந்த சகோதரி)- பெடூனியா மற்றும் பெரியப்பா- வெர்னன் டர்ச்லீ ஆகியோருடன் லிட்டில் விஞ்சிங் என்னும் கற்பனை நகரில் வசித்து வருகிறான். அவனுடைய 11 ஆம் வயதில், அவன் ஒரு மந்திரவாதி என்னும் தகவலும் அவனுடைய பெற்றோரும் (ஜேம்ஸ் மற்றும் லிலி போட்டர்) புகழ் பெற்ற மந்திரவாதிகள் என்னும் தகவலும் ஆரி போட்டருக்கு தெரிய வருகிறது.

இந்தத் தகவலை அடுத்து ஆகவார்ட்ஸ் மந்திர பள்ளியில் ஒரு மாணவனாகிறான். ஆரம்பத்தில், அவனுடைய பெரியம்மாவும் பெரியப்பாவும் இந்த முடிவிற்கு அனுமதி வழங்க மறுக்கிறார்கள்; இறுதியில் தோல்வியடைகிரார்கள்.

ஆகவார்ட்ஸ் மந்திர மற்றும் சூனிய பள்ளி, ஸ்காட்லாண்டு நகரில் உள்ள ஒரு கற்பனை பள்ளிக்கூடம் ஆகும்.

ஆரி, இப்பள்ளியில் பயிலும் பொழுது பல வகையான நிகழ்வுகளை சந்திக்கிறான். அவன் இப்புத்தகத்தில் ஒரு வீரம் மிகுந்து மாணவனாகவும், நண்பர்களை நேசிக்கும் மாணவனாகவும், தன் வயதையொத்த அனைத்து குழந்தைகளும் மேற்கொள்ளும் சவால்கள், உணர்ச்சிகள், ஆசைகள், அறிவற்ற மோகம் போன்றவற்றை மேற்கொள்கிறான்.

இப்புத்தகம் 1990 களில், இருந்த ஐக்கிய நாட்டுப்புறவியல், இரசவாதம், மரபு வழி வந்த புராணங்கள் முதலியவற்றை சார்ந்திருக்கும். மந்திர உலகம் என்பதால் மந்திர கோள்கள், மந்திர எழித்துக்கூட்டுகள், மந்திர செடிகள், பறக்கும் துடைப்பங்கள், மந்திர பானங்கள் மேலும் கணக்கற்ற மந்திர படைப்பயிர்கள் இடம்பெறும்.

ஆரம்ப காலங்கள்[தொகு]

ஆரி போட்டர் தொடர்களின் முதலாம் புத்தகம்- ஆரி போட்டர் அண்ட் த பிலாசபார்ஸ் இச்டோன்.



மேற்கோள்கள்[தொகு]

  1. PETER SVENSSON 2 (27 March 2012). "Harry Potter breaks e-book lockdown – Yahoo! News". News.yahoo.com. 5 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 July 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

உத்தியோக பூர்வ தளங்கள்:

ஏனைய மூலங்கள்:

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரி_பாட்டர்&oldid=3702412" இருந்து மீள்விக்கப்பட்டது