ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (நூல்)
| படிமம்:Harry Potter and the Goblet of Fire cover.png | |
| நூலாசிரியர் | சே. கே. ரௌலிங் |
|---|---|
| பட வரைஞர் | கில்லெசு கிரீம்பீல்டு (ஐ. இ) மேரி கிரண்ட்பிரி (ஐ. அ. நா) |
| தொடர் | ஆரி பாட்டர் |
வெளியீட்டு எண் | 4-ஆம் |
| வகை | கற்பனை |
| வெளியீட்டாளர் |
|
வெளியிடப்பட்ட நாள் | 8 சூலை 2000 |
| பக்கங்கள் | 636 (மூல ஐ. இ. பதிப்பு) 617 (2014 ஐ. இ. பதிப்பு) 734 (ஐ. அ. நா. பதிப்பு) |
| ISBN | 0-7475-4624-X |
| முன்னைய நூல் | ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் |
| அடுத்த நூல் | ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு |

ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (Harry Potter and the Goblet of Fire; மொ.பெ. ஆரி பாட்டரும் நெருப்புக் கோப்பையும்) என்பது ஆரி பாட்டர் புனைவுத்தொடரின் நான்காம் புதினம் ஆகும். பிரித்தானிய எழுத்தாளர் சே. கே. ரௌலிங் இயற்றிய இப் புதினம், 8 சூலை 2000 அன்று வெளியானது. ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 30 இலட்சம் படிகள் முதல் வாரத்தில் விற்றுத்தீர்ந்தன.[1] இப்புனைவு 2001ல் இயுகோ விருது பெற்றது.[2] ஆரி பாட்டர் புனைவுகளில் இவ்விருது பெற்ற ஒரே புனைவு இதுவாகும்.
15 நவம்பர் 2005 அன்று இப் புதினம் இதே பெயரில் திரைப்படமாக வெளியானது.
பரவலர் பண்பாட்டில்
[தொகு]பொல்லாதவன் (2007) திரைப்படத்தின் ஒரு காட்சியில், கதைத் தலைவர் பிரபு சங்கர் (தனுஷ்) தன் காதலி ஹேமா (ரம்யா) உடனான உரையாடல் முயற்சி குறித்துத் தன் நண்பர்களிடம் நினைவுகூருகிறார். அப்போது அவர் நண்பர்களுள் ஒருவரான குமார் (கருணாஸ்) அவரிடம் அரைகுறை ஆங்கிலத்தில் "Excuse me Prabu. Girl's touching, hand problem. The same Harry Potter also deal the same problem, this chapter"[a] என்று சொல்லி தான் படித்துக்கொண்டிருக்கும் கோப்லட்டு ஆப் பயர் (British Adult Edition) நூலின் ஒரு பகுதியை பிரபுவுக்கும் மற்றவர்களுக்கும் தெரியும்படி நீட்டுகிறார்.[3][4] இந்த வரியின் பிற்பகுதி ("Harry Potter also deal the same problem"), ஏதேனும் ஒரு சூழலில் தம்மையும் தொடர்புபடுத்திப் பார்க்கும் தமிழ் சமூக ஊடகர்களால் பரவலாக மேற்கோள் காட்டப்படும் சுட்டனாக விளங்குகிறது.[5]
குறிப்புகள்
[தொகு]- ↑ திருத்தமான மொழிபெயர்ப்பு: "இங்கே பார் பிரபு. பெண்ணின் கையை [ஆண்] தொடுவதில் உள்ள இதே சிக்கலை இந்த ஆரி பாட்டர் அத்தியாயமும் கையாள்கிறது".
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Scholastic(15 December 2009). "2000–2009—The Decade of Harry Potter Gives Kids and Adults a Reason to Love Reading". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 3 December 2010.
- ↑ "2001 Hugo Awards". World Science Fiction Society. Retrieved 27 March 2011.
- ↑ Sun NXT (2024-07-13), Polladhavan Tea Shop Scene Comedy😂 | Dhanush | Santhanam | Sun NXT, retrieved 2026-02-16
- ↑ https://www.facebook.com/share/p/1Bq5XYpUg7/.
{{cite web}}: Missing or empty|title=(help) - ↑ U, Saradha (2022-02-15). "Enna Koduma Saravanan Idhu: Tamil film dialogues that are part of everyday lingo". The News Minute (in ஆங்கிலம்). Retrieved 2026-02-16.