குவிட்டிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Quidditch Tactics.jpg

ஆரி பாட்டர் புதின, திரைப்பட உலகில், குவிட்டிச்சு (Quidditch, /ˈkwɪdɪ/) என்பது மந்திர உலகில் பரவலாக விளையாடப்படும் ஒரு கற்பனை விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டில் போட்டியாளர்கள் மந்திர துடப்பம் ஒன்றில் பறந்து கொண்டு விளையாடுவர். குவிட்டிச்சு துடைப்பத்தில் பறக்கும் ஏழு வீரர்களை கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையில் விளையாடப்படும். இங்கு ஒரு குவாபில், இரண்டு பிளட்சர்சு, ஒரு கோல்டின் இசுனிட்சு ஆகிய நான்கு பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மைதானத்தில் ஆறு வளைய வடிவான இலக்குகள் கம்பங்களின் உச்சியில் வெவ்வேறு உயரங்களில் காணப்படும். மைதானத்தின் இருமருங்கிலும் ஒரு பகுதிக்கு மூன்றுப் படி இது அமைக்கப்பட்டிருக்கும். இது மந்திர உலகில் மந்திரவாதிகளாலும், சூனியக்காரிகளாலும் ஆபத்தான ஒரு விளையாட்டாகும். எனினும் மந்திர உலகில், குவிட்டிச்சு பல ஆர்வமுள்ள இரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவிட்டிச்சு&oldid=2909652" இருந்து மீள்விக்கப்பட்டது