ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆஃப் சீக்கிரெட்சு
இயக்கம்கிரிஷ் கொலம்பஸ்
தயாரிப்புடேவிட் ஹேமேன்
மூலக்கதைஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு
படைத்தவர் ஜே. கே. ரௌலிங்
திரைக்கதைஸ்டீவ் க்ளோவ்ஸ்
இசைஜான் வில்லியம்ஸ்[1]
நடிப்புடேனியல் ராட்க்ளிஃப்
ரூபர்ட் கிரின்ட்
எம்மா வாட்சன்
கென்னத் பிரனா
ஜான் கிளீஸ்
ராபி கோல்ட்ரேன்
வார்விக் டேவிஸ்
கிரிஃபித்ஸ்
ரிச்சர்ட் ஹாரிஸ்[2]
ஜேசன் ஐசக்ஸ்
இயன் ஹார்ட்
ஜான் ஹர்ட்
அலன் ரிக்மான்
பியோனா ஷா
மேகி ஸ்மித்
ஜூலி வால்டர்ஸ்
ஒளிப்பதிவுரோகர் பிராட்
படத்தொகுப்புபீட்டர் ஹோநேஸ்
கலையகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
ஹேடே பிலிம்ஸ்
1492 பிக்சர்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுநவம்பர் 3, 2002 (2002-11-03)(லண்டன் )
15 நவம்பர் 2002 (ஐக்கிய இராச்சியம்
& ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்161 நிமிடங்கள்
நாடுஐக்கிய இராச்சியம்
அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$100 மில்லியன்
மொத்த வருவாய்$879.6 மில்லியன்

ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆஃப் சீக்கிரெட்சு (Harry Potter and the Chamber of Secrets)[3][4] என்பது 2002 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சிய- அமெரிக்க நாட்டு கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இது புதின எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவர் எழுத்தில் 1998 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து கிரிஷ் கொலம்பஸ் என்பர் இயக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இது ஆரி பாட்டர் திரைப்படத் தொடரின் இரண்டாவது படமாக 15 நவம்பர் 2002 அன்று ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் வெளியானது. இந்த படம் விமர்சன மற்றும் வணிகரீதியான வெற்றி பெற்று உலகளவில் 879 மில்லியன் டாலர்களை வசூலித்தது. மற்றும் 2002 ஆம் ஆண்டு வெளியான த லார்டு ஆப் த ரிங்ஸ்: த டூ டவர்ஸ் என்ற படத்தை தொடர்ந்து அதிக வசூல் செய்த இரண்டாவது படமாக அமைந்தது. இதன் மூன்றாம் பாகமான ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் என்ற படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Harry Potter and the Chamber of Secrets (John Williams/William Ross)" (7 November 2002). மூல முகவரியிலிருந்து 14 January 2019 அன்று பரணிடப்பட்டது.
  2. "Actor Richard Harris dies". BBC News. 25 October 2002. http://news.bbc.co.uk/1/hi/entertainment/film/2362935.stm. 
  3. "Harry Potter and the Chamber of Secrets". மூல முகவரியிலிருந்து 5 May 2020 அன்று பரணிடப்பட்டது.
  4. "Harry Potter and the Chamber of Secrets (PG)". மூல முகவரியிலிருந்து 20 October 2019 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons logo
இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (திரைப்படம்)