ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (திரைப்படம்)
ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் பீனிக்சு | |
---|---|
இயக்கம் | டேவிட் யேட்சு |
தயாரிப்பு | டேவிட் ஹேமேன் டேவிட் பரோன் |
மூலக்கதை | ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு படைத்தவர் ஜே. கே. ரௌலிங் |
திரைக்கதை | மைக்கல் கோல்டின்பேர்க் |
இசை | நிக்கலசு கூப்பர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | இசுலவோமியர் இட்சியாக் |
படத்தொகுப்பு | மார்க் டே |
கலையகம் | கேய்டே பிலிம்சு |
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | சூலை 3, 2007(இலண்டன்) 11 சூலை 2007 (வட அமெரிக்கா) 12 சூலை 2007 (ஐக்கிய இராச்சியம்) |
ஓட்டம் | 138 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய இராச்சியம் அமெரிக்க ஐக்கிய நாடு |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $150–200 மில்லியன்[2][3] |
மொத்த வருவாய் | $942.2 மில்லியன்[4] |
ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் பீனிக்சு (Harry Potter and the Order of the Phoenix) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சிய- அமெரிக்க நாட்டு கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இது புதின எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவர் எழுத்தில் 2003 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்து 'டேவிட் யேட்சு' என்பர் இயக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் கதை ஹாக்வார்ட்சு மந்திரவாதப் பள்ளியில் ஆரி பாட்டர் ஐந்தாவது வருடம் படிப்பது பற்றிக் கூறுகிறது.
இது ஆரி பாட்டர் திரைப்படத் தொடரின் ஐந்தாவது படமாக 11 ஜூலை 2007 அன்று அமெரிக்காவிழும் மற்றும் 12 ஜூலை 2007 ஆம் ஆண்டு இரசியத்திலும் வெளியாகி, விமர்சன மற்றும் வணிகரீதியான வெற்றி பெற்று உலகளவில் $942.2 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இதன் ஆறாவது பாகமான ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு என்ற படம் 2009 ஆம் ஆண்டு வெளியானது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lalor., John. "Harry Potter and the Order of the Phoenix". Libertarian Alliance. 2019-08-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 அக்டோபர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Cornwell, Tim (24 January 2007). "Oscars signal boom (except for Scots)". The Scotsman (Edinburgh). http://news.scotsman.com/filmandtvawards/Oscars-signal-boom-except-for.3340535.jp.
- ↑ Haun, Harry (20 June 2007). "Harry the Fifth". Film Journal International. Archived from the original on 4 ஆகஸ்ட் 2008. https://web.archive.org/web/20080804072440/http://www.filmjournal.com/filmjournal/features/article_display.jsp?vnu_content_id=1003600960&imw=Y.
- ↑ "HARRY POTTER AND THE ORDER OF THE PHOENIX". பாக்சு ஆபிசு மோசோ. 20 அக்டோபர் 2007 அன்று பார்க்கப்பட்டது.