கும்மிடிப்பூண்டி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கும்மிடிப்பூண்டி வட்டம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கும்மிடிப்பூண்டி நகரம் உள்ளது.

இந்த வட்டம் 4 உள்வட்டங்களும், 88 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 190,541 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 95,799 ஆண்களும், 94,742 பெண்களும் உள்ளனர். 50,144 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 83.6% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 71.86% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 989 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 21584 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 971 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 49,849 மற்றும் 5,100 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.73 , இசுலாமியர்கள் 2.82% , கிறித்தவர்கள் 3.19% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

[1]

  1. திருவள்ளூர் மாவட்ட வட்டங்கள்